Breaking

Showing posts with label Adi Dravidar and Tribal Welfare Department. Show all posts
Showing posts with label Adi Dravidar and Tribal Welfare Department. Show all posts

Saturday, February 17, 2024

February 17, 2024

ஆதிதிராவிடர் நலம் விடுதிப்பணிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மற்றும் உணவு பட்டியலில் மாற்றம்



Adi Dravidar Nalam Hostels Changes in meal charges and food list provided to students staying in hostels - ஆதிதிராவிடர் நலம் விடுதிப்பணிகள் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மற்றும் உணவு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பார்வையில் காணும் அரசாணையின் படி ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ.1000/- லிருந்து ரூ. 1400/- ஆகவும் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் ரூ. 100/- லிருந்து ரூ1500/- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாணாக்கர்ளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பட்டியலில் இணைப்பில் கண்டுள்ளவாறு மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதனை 24.012024 முதல் நடைமுறைப்படுத்த ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Wednesday, September 27, 2023

September 27, 2023

மாணவர் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு: தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்



ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு: தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அயல் நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிக்க தகுதித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல், நிதி, மனித நேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை அயல் நாடுகளில் படிக்க விரும்புபவராக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான நிதியுதவி தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் வெளி நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, September 24, 2023

September 24, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Free Education upto 12th Std. to all i.e. tuition fee will not be collected and the amount will be reimbursed by Government. Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Public Examination fee for 10th and 12th Std.

Adi Dravida, a tribe Scholarships for students - ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது

Saturday, September 02, 2023

September 02, 2023

13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதி தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக அரசு உத்தரவு

13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதி தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:

தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், சேலம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகா், கோவை ஆகிய மாவட்டங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களை முழு நேர பணியாளா்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென ஆதிதிராவிடா் நல இயக்குநா் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, 98 தூய்மைப் பணியாளா்களும் முழு நேர பணியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அளிக்கப்படும்.

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தைக் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
September 02, 2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு எண்‌ : 1800 நாள்‌ : 02.09.2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண்‌ : 1800 நாள்‌ : 02.09.2023

செய்தி வெளியீடு

விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும்‌ என்பதில்‌ உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ எண்ணத்திற்கு உரு கொடுக்கும்‌ வகையில்‌, 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்‌ மீது மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ திருமதி.என்‌.கயல்விழி செல்வராஜ்‌ அவர்களால்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலன்‌ தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

"பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய வீடற்ற 10௦௦ பழங்குடியினர்‌ குடும்பங்கள்‌ மற்றும்‌ தற்போது பட்டியலில்‌ சேர்க்கப்பட்டுள்ள 5௦௦ நரிக்குறவர்‌ குடும்பங்கள்‌ என மொத்தம்‌ 15௦௦ குடும்பங்களுக்கு வீடுகள்‌ ரூ.45.00 கோடி மதிப்பீட்டில்‌ தகுதியின்‌ அடிப்படையில்‌ கட்டித்‌ தரப்படும்‌" 2. மேற்காணும்‌ அறிவிப்பினை செயல்படுத்தும்‌ வகையில்‌, 2௦23-2024 ஆம்‌ ஆண்டில்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர்‌ குடும்பங்கள்‌ மற்றும்‌ தற்போது பழங்குடியினர்‌ பட்டியலில்‌ சேர்க்கப்பட்டுள்ள 5௦௦ நரிக்குறவர்‌ குடும்பங்கள்‌ என மொத்தம்‌ 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில்‌, 19 மாவட்டங்களில்‌ வீடுகள்‌ கட்டுவதற்கு ரூ.79,28,40,000/- (ரூபாய்‌ எழுபத்து ஒன்பது கோடியே ஒருபத்து எட்டு இலட்சத்து நாற்பதாயிரம்‌ மட்டும்‌) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

3. மேற்கண்ட 1500௦ வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில்‌ மேற்கொள்ளப்படும்‌ என மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Tuesday, June 27, 2023

June 27, 2023

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்

Sunday, April 16, 2023

April 16, 2023

பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்



பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம் - Intensification of work to link Adi Dravidian welfare schools with the Department of School Education

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணியாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை, அறநிலையத் துறை, வனத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதை செயல்படுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அப்பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக பணியாளர் விவரங்களை ஏப்.20-க்குள்தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகளின் அசையும், அசையா சொத்துகள், கட்டிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் தரவேண்டும். மாவட்ட வாரியாக தகவல்களை தொகுத்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதால் தாமதமின்றி துரிதமாகபணியை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, March 17, 2023

March 17, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் கே.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுவதைப்போல, பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குமாறு, பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகள் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டவாறு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் என திருத்திய தொகுப்பூதியத்தை, அரசாணை வெளியிடப்படும் நாள் முதல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 20, 2023

February 20, 2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் மாணவர்களின் கல்வி மேம்பட 'டிஜிட்டல் தகவல் பலகை': தாட்கோ தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் மாணவர்களின் கல்வி மேம்பட 'டிஜிட்டல் தகவல் பலகை': தாட்கோ தகவல் - 'Digital Notice Board' to improve students' education in Adi Dravidian and Tribal welfare hostels: TADCO Information தொலைக்காட்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சி திறனை வளர்த்து கொள்ள விடுதிகளில் 'டிஜிட்டல் தகவல் பலகை' விரைவில் அமலாகிறது என்று தாட்கோ வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான சுயதொழில் முனைவோர் திட்டத்தில் மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் மானியம், குறு, சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனாளிகளின் பங்குத்தொகை வழங்குதல், ஆதிதிராவிடர் மக்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வாங்குவதற்கு மானியம் வழங்குதல், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டம், தொழில் திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தாட்கோ செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பல நலன்களை பெறுகின்றனர். மேலும், இந்த திட்டங்களை வலுப்படுத்தும் விதமாக மானியங்களை அதிகரித்தல் மற்றும் கடன் வட்டியை குறைத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தாட்கோ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், வரும் நடப்பாண்டில் (2023-24) புதிய அறிவிப்புகளை தாட்கோ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குதல்: கிராம பகுதிகளில் பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதில் பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் பொருளாதார இல்லாத நிலையினால் முதன்மை தேர்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நகர்ப்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 3 மாதங்களுக்கே ரூ.1 லட்சம் வரை ஒரு தனி நபருக்கு செலவாகிறது. இதன் அடிப்படையில், யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றபின் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்று தகுதி பெற பயிற்சி கட்டணமாக ரூ.50000 மானியம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்த பயிற்சி கட்டணமாக ரூ.25,000 மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டம் மூலமாக ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். ஏதேனும் அரசு பணியில் பணியாற்றிக்கொண்டு போட்டி தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கும், ஏதேனும், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேராமல் வேறு தேர்விற்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. அதன்படி, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுடன் கூடிய போட்டி தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும். இந்த திட்டத்திற்காக அரசு மானிய செலவினமாக ரூ. 5கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மாணவ - மாணவியருக்கு ஆங்கில பயிற்சி வழங்குதல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 68,524 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது ஆங்கில பேச்சு திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ,1,500 வீதம் ரூ.11 கோடி வரை செலவிட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டிஜிட்டல் தகவல் பலகை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 1371 விடுதிகளில் தங்கி பயிலும், 68 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சி தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தவும், இணைய தளம் மூலம் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்க்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கிடவும், அவர்களின் தேவைகளை நேரிடையாக அரியவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் விடுதிகளில் டிஜிட்டல் தகவல் பலகை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பொருத்துப்படும் அனைத்து டிஜிட்டல் தகவல் பலகையும், பாட பொருள் மேலாண்மை முறையில் இயக்கப்படும். இதனால் மாணவர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடியும். இதற்காக முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 180 விடுதிகளுக்கு ரூ.1.80 கோடி வரை செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக அன்றாட உலக தகவல்களை மாணவர்களிடையே விரைந்து கொண்டு சென்று அவர்களின் கல்வி திறனை மேம்படுத்தி தேர்ச்சி விகிதத்தை உயர்த்த தாட்கோ வழிவகுத்துள்ளது. டிரோன் வாங்க மானியம்:

தற்போது விவசாயிகளுக்கு நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் டிரோன் பயிற்சி அனைத்து மாவட்டத்திலும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பயிற்சிபெறக்கூடிய விவசாயிகளே டிரோன்களை வாங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடனை வழங்க தாட்கோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஒரு டிரோன் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு அதில், 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சத்தை தாட்கோ வழங்க முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த ரூ.5 லட்சம் மானியம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வங்கி கடனுடன் வழங்க உள்ளது. இந்த டிரோன்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும், நுண்ணூயிர் உரம் தெளித்தல் போன்ற விவசாயம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளலாம். விளையாட்டு துறையில் சிறந்த மாணவர்களுக்கு மானியம்: கிராமப்பகுதிகளில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் மாணவர்கள் உயர் பயிற்சி பெற பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பதால் அவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இயலாமல் போகின்றன.

இந்த நிலையில் போக்கும் விதமாக ஒன்றிய அரசின் மேம்பாட்டு நிதியில், விளையாட்டு திறனில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு அதே விளையாட்டில் உயர்பயிற்சி அளிக்கும் உடற்கல்வி பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக பயிற்சி அளித்து, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தாட்கோ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை வரக்கூடிய நடப்பாண்டில் செயல்படுத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Friday, February 17, 2023

February 17, 2023

Pre Metric / Post Metric Scholarship - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முறை குறித்து ஆதி திராவிடர் நலத்துறையின் காணொளி வெளியீடு

Pre Metric / Post Metric Scholarship - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முறை குறித்து ஆதி திராவிடர் நலத்துறையின் காணொளி வெளியீடு - Pre Metric / Post Metric Scholarship - Adi Dravidar Welfare Department's video release on how to upload student details

CLICK HERE TO WATCH THE VIDEO

Friday, February 03, 2023

February 03, 2023

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Adi Dravidian-tribal students can apply for beauty arts training

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக பல்வேறு அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம், சுய தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை ேசர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாட்களாகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் பெறவும், மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்யவும் தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை, மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி தாட்கோ மூலமாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியினத்தை சார்ந்த 10ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெறலாம். மேலும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை 044-25246344, 9445029456 ஆகிய எண்களில் அணுகவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, January 28, 2023

January 28, 2023

Adi Dravidar and Tribal Welfare Department Tamilnadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) To issue Unconditional and Irrevocable - Government Guarantee for availing Loan Assistance of Rs.20.00 Crore from National Safai Karamcharis Finance and Development

Adi Dravidar and Tribal Welfare Department Tamilnadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) To issue Unconditional and Irrevocable - Government Guarantee for availing Loan Assistance of Rs.20.00 Crore from National Safai Karamcharis Finance and Development

Friday, January 06, 2023

January 06, 2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐஐடி, தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டம்

*🛑⚡ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐஐடி, தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டம்*

*🔰ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது, என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.*

*இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு:*

*தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.*

*இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். ஜனவரி 2023ம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 8ம் தேதியாகும். www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.* *இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி, சென்னை மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவையில்லை.*

*12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தமாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி, மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும் இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.*

*இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன மற்றும் மாணவர்களுக்கு ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.* *இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.*

*மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்து கொண்டே ஐ.ஐ.டி, சென்னை வழங்கும் Bachelor of Science in Data Science& Applications பட்டப்படிப்பையும் படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.* *அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணக்கர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.* *இதற்கான தகுதிகள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களாக இருக்க வேண்டும்.* *மாணாக்கர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60%க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.*

*தாட்கோவில் பதிவு செய்த மாணாக்கர்கள் சென்னை ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.1500 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சென்னை ஐ.ஐ.டி, நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் சென்னை ஐ.ஐ.டி, வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள்.*

*இப்படிப்பு பயில்வதற்கான செலவினை தாட்கோ கல்விகடன் மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 044-25246344 மற்றும் 9445029456 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.*

Thursday, November 03, 2022

November 03, 2022

ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!

ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 197 பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் முதல் நிலை, கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு, 197 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஐ.ஐ.டி., வழியாக பி.எஸ்சி., 'டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேசன்ஸ்' மற்றும் எச்.சி.எல்., நிறுவனத்தின் வழியாக, பி.எஸ்சி., மருத்துவம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம், உணவு உற்பத்தி, 'கிராப்ட்மேன்ஷிப்' ஆகிய டிப்ளமா படிப்புகள் படிக்க, 130 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இம்மாணவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்க, பயிற்சித் தொகையும் வழங்கப்பட உள்ளது.

Total Pageviews

Search This Blog