Breaking

Showing posts with label school teachers. Show all posts
Showing posts with label school teachers. Show all posts

Sunday, April 02, 2023

April 02, 2023

அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது- Government school teacher arrested in Pokso! -

செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம். இதேபோல் நேற்று முன்தினம் ஆசிரியர் முருகன் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Monday, March 27, 2023

March 27, 2023

ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்

ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் - Teachers need a separate job security law: Primary school teachers union resolution

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் காலம் கடத்தாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அவரது குழந்தையை தலைமை ஆசிரியை கண்டித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Monday, September 26, 2022

September 26, 2022

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Audio link

Touch Here

Tuesday, September 06, 2022

September 06, 2022

ஆசிரியா்கள் மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும் - பிரதமா் மோடி

கல்விச் சூழல்: சரியான திசையில் இந்தியா: பிரதமா் மோடி

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்விக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கிய ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழங்கினாா். விருது பெற்ற ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஓா் ஆசிரியருக்கு நோ்மறை எண்ணங்களின் பலம் உள்ளது. அவா் சவால்களை எதிா்கொள்ள மாணவா்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறாா். ஓா் உண்மையான ஆசிரியா் கனவு காணவும், சாதிக்க முடியாததை சாதிக்கவும் மாணவா்களுக்கு ஆா்வமூட்டுகிறாா்.

ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை உலகமே பாராட்டுகிறது. அந்தக் கொள்கையை வகுப்பதில் ஆசிரியா்கள் மிக முக்கிய பங்கு வகுத்துள்ளனா்.

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதனை அனைவராலும் காண முடிகிறது.

சுதந்திரம் தினத்தின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா எவ்வாறு இருக்கும் என்று தீா்மானிக்கவுள்ள இளைஞா்களை நல்ல முறையில் தயாா்ப்படுத்த வேண்டியது ஆசிரியா்களின் கைகளில்தான் உள்ளது.

பிரிட்டனை கடந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. 250 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சிபுரிந்தவா்களைக் கடந்து முன்னேறியுள்ளதால் இது சிறப்பு மிக்கது என்றாா் அவா்.

Wednesday, August 31, 2022

August 31, 2022

ஆசிரியர் கற்பித்தலை பார்வையிட தலைமை ஆசிரியருக்கு உத்தரவு

அரசு பள்ளிகளில் தினமும் குறைந்தபட்சம், நான்கு ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை, தலைமை ஆசிரியர் பார்வையிட்டு பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அரசு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தலைமை ஆசிரியர், தினமும் குறைந்தபட்சம், நான்கு ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலை பார்வையிட்டு, அதன் விபரத்தை, 'வகுப்பறை உற்று நோக்கல்' பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.வகுப்பு, பாட வாரியாக பயிற்சி ஏடுகள் முறையாக திருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்து கையொப்பமிட வேண்டும்.

பள்ளி வளாகம், சத்துணவுக் கூடம், குடிநீர் தொட்டி, கழிப்பறை, மைதானம் ஆகியவற்றை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடத்தி, மாணவர் நலன்சார்ந்த செயல்பாடுகளை, பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளி சார்ந்த அனைத்து விபரங்களையும் தலைமை ஆசிரியர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பது அவசியம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Tuesday, August 30, 2022

August 30, 2022

சென்னையில் செப். 10ம் தேதி 5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

Chennai in Sep. Conference of 5 lakh teachers on 10th: Chief Minister M.K.Stalin will attend

புதுக்கோட்டையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிக ளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங் கேற்ற அமைப்பின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சண்முகநா தன் அளித்த பேட்டி:

பள்ளி கல்வித்துறை யில் ஆணையர் என்ற பொறுப்பு, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. ஆணைய

ரின் செயல்பாடு தான் தீவுத்திடலில் நடக்கிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த பதவியை ஒழிக்க வேண் டும் என்பது தான் எங்க ளின் கோரிக்கை. அதை நிச்சயம் முதல்வர் செய் வார் என்ற நம்பிக்கை எங் களுக்கு உள்ளது.

இதில் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்கிறார். செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப் பின் முக்கிய கோரிக்கைக ளான பழைய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு ணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்று நம்பு கிறோம். இவ்வாறு அவர்

செப்டம்பர் 10ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் பங் கேற்கும் வாழ்வாதார நம் பிக்கை மாநாடுசென்னை கூறினார்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

”இனியாவது கனிவுடன் இருங்களேன்..”- வைரலாகும் ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் மேசேஜ்

பள்ளிக் காலங்களில் விருப்பமான ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட பள்ளியை விட்டுச் சென்றால் மாணவர்கள் பலரும் அந்த ஆசிரியரை சூழ்ந்து அழுது, கட்டியணைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கையில், தன்னுடைய பள்ளி காலத்தின் போது தன்னை மட்டம்தட்டி பேசிய ஆசிரியர் ஒருவருக்கு பெண் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்து “நீங்கள் நினைத்தது போல, கூறியது போல இல்லாமல் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் எனக்கு பிடித்த படிப்பை படிக்கப்போகிறேன். இனிமேலாவது கனிவுடன் இருக்க பழகுங்கள். குறிப்பாக உங்களது உதவியை நாடும் மாணவர்களிடம் கனிவுடனும் இருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்த ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய டீச்சருக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நானும் என்னுடைய தோழியும் நினைத்திருந்தோம். அதற்கான நாள் இப்போதுதான் வாய்த்திருக்கிறது என கேப்ஷனும் இட்டிருக்கிறார். இந்த பதிவு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு நெட்டிசன்களிடையே படுவைரலாகியிருக்கிறது. மேலும், தங்களுடைய பள்ளி காலங்களின் போது ஆசிரியர்கள் தங்களை இழிவுபடுத்தி பேசியது பற்றியும் பகிர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், வைராலன பதிவில் உள்ள வாட்ஸ் அப் மெசேஜிற்கு அந்த ஆசிரியர் பதிலளித்துள்ளார் எனவும் இணையவாசிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் அப்பெண் ஷேர் செய்திருக்கிறார்.

அதில், “நீ இப்படி தேர்ச்சி பெறுவதற்கான பெருமையும் என்னைத்தான் சேரும்” என அந்த ஆசிரியர் பதிலளித்திருக்கிறார். அந்த பதிவும் பலரால் ஷேர் செய்யப்பட்டதோடு விமர்சன பதிவுகளும் இடப்பட்டிருக்கிறது.

Friday, June 03, 2022

June 03, 2022

ஆசிரியரின்றி காலியாக உள்ள உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Monday, May 30, 2022

May 30, 2022

ஆசிரியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல் படுத்த அதிகாரிகள் திட்டம்? ஒப்புதல் தர அமைச்சர் மறுப்பு!

ஆசிரியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல் படுத்த அதிகாரிகள் திட்டம்? ஒப்புதல் தர அமைச்சர் மறுப்பு!

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறை களை அடங்கிய பைலை கொடுத்து , இதுக்கு நீங்க ஒப்புதல் அளிக்கணும்னு பள்ளிக்கல்வி மந்திரியிடம் உயர் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்திருக்கா ஓய் ... அதை படித்து பார்த்த மந்திரி , இந்த | நெறிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருக்குது ... இப்போதைக்கு இதை செயல்படுத் தினால் ஆசிரியர்களுக்கு அரசு மீது கோபம் வரும் ... ஏற்கனவே , நாம தேர்தல் வாக்குறுதியில சொன்ன பல விஷயங்களை செயல்படுத் தலைனு அரசு மீது அவங்க அதிருப்தியில இருக்காங்க ... இந்த சூழ்நிலையில் இந்த செயல்படுத்தினால் அவங்க கோபம் ஆசிரிய விதிகளை இன்னும் அதிகமாகும். அவர்களின் அதிருப்தி அரசை பாதிக்கும் ... என் உத்தரவில்லாமல் அமல்படுத்தக்கூடாதுனு கறாராக சொல்லிட்டாராம் ஓய் ... என்றார் .

Monday, May 23, 2022

May 23, 2022

ஆசிரியர் பணி நியமன முறைகேடு 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேற்கு வங்க கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை முறைகேடாக ஆசிரியராக நியமித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கங்கோபாத்யாய், அங்கிதாவை பணியில் இருந்து நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் (எஸ்எஸ்சி) நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கடந்த மாதம் அவர் உத்தரவிட்டிருந்தார். இதில் தொடர்புடைய கல்வி அமைச்சர் பரேஷ் சந்திராவிடம் சிபிஐ தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்நிலையில், மாநில ஆலோசனை குழுவின் முன்னாள் தலைவர் சாந்தி பிரசாத் சின்கா, ஆசிரியர் தேர்வு ஆணைய முன்னாள் தலைவர் சவுமித்ரா சர்க்கார், முன்னாள் செயலாளர் அசோக்குமார் சகா உள்பட 5 பேர் மீது சிபிஐ நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது. வங்கி கணக்குகள், சொத்துகள் மற்றும் வருமான வரி ரிட்டர்ன் விவரங்களை சமர்ப்பிக்கும்படி இந்த 5 பேருக்கும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சட்டர்ஜியிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்குவதால், முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tuesday, April 19, 2022

April 19, 2022

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடம் மாற தேதி நீட்டிப்பு!

Government school teachers have extended the application date for relocation. For high school teachers working in government schools, optional transfer counseling is already over. Following this, the teachers talk to each other and change places, and a change of heart is announced.

Online registration for this started on the 12th. The deadline has been extended to the 21st, as registration was closed the day before yesterday. After review of the application, the change is given on the 26th. Following this, counseling for unit to unit transfer will take place on the 27th, the School Education Commission has announced. அரசு பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், பரஸ்பரம் இடம் மாறி கொள்வதற்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்து விட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசி இடங்களை மாற்றி கொள்ளும், மனமொத்த மாறுதல் அறிவிக்கப் பட்டுள்ளது.

அலகு விட்டு அலகு மாறுதல்

இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் பதிவு முடிய இருந்த நிலையில், 21ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், வரும் 26ம் தேதி மாறுதல் வழங்கப்படுகிறது. இதையடுத்து, அலகு விட்டு அலகு மாறுவதற்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவித்துள்ளது.

Sunday, April 17, 2022

April 17, 2022

அரசின் புதிய கல்வி கொள்கை குழுவில் கல்வியாளரை தலைவராக்க வேண்டும் - ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

"The educator should be appointed as the chairman of the new education policy committee of the Tamil Nadu government," said Patrick Raymond, general secretary of the Tamil Nadu Graduate Teachers' Federation.

In his petition to Chief Minister Stalin, he stated that the objective could only be achieved if the State Education Policy Committee was complete and correct. It is doubtful whether the Education Policy Committee announced by the Chief Minister will complete its task. Judge Murugesan has been appointed chairman of the panel.

It is appropriate to appoint an educator as the chairperson of the education-related committee. Team members should specialize in solving complex problems.

Education for the leader in particular needs to be clear about the full dimension of the levels accordingly.Our education policy is expected to be better than the National Education Policy 2020. The Tamil Nadu government has taken the position of formulating its own policy.

A competent team needs a high educator to lead from the basic structure. An academic in a higher position may be appointed as the Executive Chairman. Thus stated. 'தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை குழுவின் தலைவராக கல்வியாளரை நியமிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:மாநில கல்விக் கொள்கை குழு முழுமையானதாகவும், சரியானதாகவும் இருந்தால் மட்டுமே நோக்கம் நிறைவேற முடியும். முதல்வர் அறிவித்துள்ள கல்விக்கொள்கை குழு பணியை நிறைவாக செய்யுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி முருகேசன் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி தொடர்பான குழுவின் தலைவராக ஒரு கல்வியாளரை நியமிப்பது சரியானதாகும்.கல்வி என்பது புத்தகம் மட்டுமல்ல பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல், தேர்வு அதன் முக்கிய உள் கூறுகளை தவிர சமூக அமைப்பு, பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம் என வேறுபட்ட கட்டமைப்புகளுடன் இணைந்த அடித்தளமாகும். சிக்கலான பிரச்னைகளை தீர்க்க குழு உறுப்பினர்கள் அவற்றுக்கான தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தலைவருக்கு கல்வி அதன்படி நிலைகள் முழுமையான பரிமாணம் குறித்த தெளிவு இருப்பது அவசியம்.தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ விட சிறந்ததாக நம் கல்வி கொள்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழக அரசு தன் சொந்த கொள்கையை வகுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

திறன் வாய்ந்த குழுவிற்கு அடிப்படை கட்டமைப்பில் இருந்து வழிநடத்த உயர்நிலை கல்வியாளர் தேவை. உயர் பதவியில் உள்ள கல்வியாளரை செயல் தலைவராக நியமிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
April 17, 2022

ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

The school education department has ordered to send the details of those who are eligible for the promotion of graduate teachers in government schools.

Circular sent by Naresh, Associate Director of School Education (Staff) to all District Primary Education Officers:

The government should prepare and send expeditiously the list of intermediate, physical education teachers and special teachers who are eligible for the post of graduate teacher in high and secondary schools.

Course wise list should be prepared as on last Jan.1. Dual graduates, those subject to disciplinary action, and those pending complaints should not be nominated. The names of those who qualify should not be omitted. In the event of a complaint of omission, the relevant primary education authorities are responsible. Therefore, it is necessary to pay extra attention to this and complete the tasks.

All primary education officials must submit a list with their signatures on the dates allotted to the respective districts from Apr. 27 to 30.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்விஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். கடந்த ஜன.1-ம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும். இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரைக்க கூடாது. தகுதியானவர்களின் பெயர் விடுபடக்கூடாது. விடுபட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு. எனவே, இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

ஏப்.27 முதல் 30 வரை அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் தங்கள் கையொப்பத்துடன் பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

Friday, April 15, 2022

April 15, 2022

அன்பாசிரியர் 2021 விருது ' வழங்கும் விழா

அன்பாசிரியர் 2021 விருது ' வழங்கும் விழா

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பான கல்விப்பணியோடு , சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கிவரும் 46 ஆசிரியர்களுக்கு ' அன்பாசிரியர் 2021 '

விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுபவர் : மாண்புமிகு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி ,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .
நாள் : 17 ஏப்ரல் 2022 - ஞாயிறு மதியம் 3 மணி

இடம் : ரஷ்யன் கலாச்சார மையம் , கஸ்தூரிரங்கன் சாலை , ஆழ்வார்ப்பேட்டை ,

சென்னை -600018

Tuesday, April 12, 2022

April 12, 2022

கல்வி மாவட்ட அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Four teachers involved in a protest at the Bath Education District office have been suspended. Teachers Jayaraj, Tamilarasi, Shakila and Arulkulanthai Devadas have been sacked.

குளித்தலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஜெயராஜ், தமிழரசி, ஷகிலா, அருள்குழந்தை தேவதாஸ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Sunday, April 10, 2022

April 10, 2022

16.11.2012 முன்பு வரை TET கட்டாயம் என்பதே எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை: அரசின் கருணைக்கு காத்துள்ள ஆசிரியர்கள்

16.11.2012 முன்பு வரை TET கட்டாயம் என்பதே எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை: அரசின் கருணைக்கு காத்துள்ள ஆசிரியர்கள்
மதிப்புமிகு தமிழக அரசு ஆளுமைகளே! இருபால் பட்டதாரி ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்...
அரசாணை நிலை எண் 181 நாள்:15.11.2011 வாயிலாக முதன் முதலில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. முன்னதாக செப்டம்பர் 2011 இல் பணி நியமனம் எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கப்பட்டது. இதற்கு பிறகு டிசம்பர் 2011 இல் பணி நியமனம் நடைபெற்றது. அதில் நியமனம் பெற்றவர்களின் நியமன ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு 04/2012 நாள்:07.03.2012 வாயிலாக TET தேர்வு முதன் முதலில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் 23.08.2010 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் TET தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டது. இதன் பின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் 19850/சி5/இ2/2014 நாள்:01.10.2014 இன் படி மேற்கண்ட ஆணையை பின்பற்றி, அரசாணை 181 இக்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்த ஆணையை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டது. இதன் பின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் 19850/சி5/இ2/2014 நாள்:08.11.2017 இன் படி , 23.08.2010 க்கு முன்பு நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பின் நியமனம் பெற்றவர்கள் TET தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டது.(இந்த ஆணை TRB அறிவிப்பு 28.05.2012 ஐ அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டது). மேற்கண்ட அறிவிப்புக்கு பின் அரசு பள்ளிகளில் நியமனங்கள் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது செப்டம்பர் 2011 மற்றும் நவம்பர் 2012க்கும (16.11.2012) இடைப்பட்ட காலத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி 16/11/2012 அன்று தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலமாக ஒரு செயல்முறைகள் வந்தது. அதன்படி இனி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு TET அவசியம் என்ற சுற்றறிக்கை பெறப்படுகிறது. அதற்கு முன்பு வரை RTE act அடிப்படையிலான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவினை எந்தவொரு AIDED பள்ளி செயலர்களுக்கும் கொடுக்கப் படாமையாலும், அனுமதி அளித்த உயர் அதிகாரிகளுக்கே இந்த RTE பற்றிய முழுமையான புரிதல் இல்லாமையாலும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதுபோன்ற பல்வேறு சிக்கலான சூழலில் தான் ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் சூழல் நிலவி வருகிறது. மேலும்,மத்திய அரசு பள்ளிகளில் கூட 06.03.2012 இக்கு பிறகு நியமனம் பெற மத்திய அரசின் தகுதி தேர்வு அவசியம்(CTET) என்ற நிலையே உள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்திய அரசாணைகளின் படியே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளோம். 16/11/2012 க்கு முன்பு வரை எங்களுக்கும் TET கட்டாயம் என்பதே முறையாக தெரியப்படுத்தவில்லை. சுமார் 11 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100% தேர்ச்சி விழுக்காடு வழங்கி வரும் நமது ஆசிரியர்களை (இதில் சில ஆசிரியர்கள் தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது) குறைத்து மதிப்பிடும் வகையில் விமர்சனங்கள் வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆகவே இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்களது சிறப்பை பலவகையிலும் நிரூபித்துள்ள நம் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு அவசியம் தானா? என்பதையும் கனிவுடன் பரிசீலித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான ஆணையை வெளியீட்டு ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குடும்பங்கள் சார்பாக... திருப்பூர் ஞா. நீலா. ( பட்டதாரி ஆசிரியர் )

Monday, April 04, 2022

April 04, 2022

அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

ஆசிரியை பணியிடை நீக்கம்

மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவருக்கும் தனக்கன்குளம் பகுதியில் உள்ள வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீரமணியுடன் சோ்ந்து ஆசிரியை, டியூசன் படிக்க வரும் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ ஒன்று வெளியானதால், மாணவா்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஆசிரியை மற்றும் அவரது நண்பா் வீரமணி ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பள்ளி கல்வித்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மேலூா் கல்வி மாவட்ட அலுவலா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
April 04, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

ண்ணும் எழுத்தும் பயிற்சி Module -3

CLICK HERE TO VIEW THE LINK

Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி link -ல் சென்று பயிற்சியை மேற்கொள்ளும் வழிமுறை..

https://youtu.be/P4EWy0LLj9M

அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்!

Total Pageviews

Search This Blog