Breaking

Showing posts with label free training. Show all posts
Showing posts with label free training. Show all posts

Wednesday, December 06, 2023

December 06, 2023

Free Computer Programming Training - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20



இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி - பயிற்சி காலம்: 6 வாரங்கள் - பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20 Free Computer Programming Training - Training Duration: 6 Weeks - Training Start Date: 20th December

இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது.

இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி:

புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான். பயிற்சி காலம்:

6 வாரங்கள்.

தகுதி:

ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம்.

தேவையான ஆவணங்கள்:

10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.

பயிற்சி துவங்கும் நாள்:

டிசம்பர் 20

விபரங்களுக்கு:

9791161148, 9444923726

Tuesday, September 26, 2023

September 26, 2023

ONGC-யில் 2500 Apprentice பணி - செப்.30ம் தேதி கடைசி நாள்!



ONGC-யில் 2500 Apprentice பணி

ONGC நிறுவனத்தில் 2500 பேருக்கு Apprentice பணி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ஓராண்டு பயிற்சியுடன் வேலை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் https://ongcapprentices.ongc.co.in/ எனும் இணையதளத்தில் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

முதற்கட்ட தேர்வு முடிவு, வரும் அக்.5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது

Saturday, August 12, 2023

August 12, 2023

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கும் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
August 12, 2023

ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.



ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள், வரும் 21ல் துவக்க உள்ளது.

இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 3,559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, வரும் 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Saturday, April 15, 2023

April 15, 2023

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் நாளை இலவச பயிற்சி Free training tomorrow at IAS Academy

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, 2-ஏ, குரூப்-4 , வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்பட உள்ளது.



இதில், வி.ஏ.ஒ, தட்டச்சா், சுருக்கெழுத்தா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், நில அளவையாளா் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.



மயிலாப்பூா் ராயப்பேட்டை பிரதான சாலை, வி.எம்.தெருவில் உள்ள இந்திய இளைஞா் சங்கத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு மற்றும் அனுபவமிக்க பயிற்சியாளா்கள் பலா் பயிற்சி அளிக்க உள்ளனா்.



இதில் பங்கேற்க விரும்பும் தகுதியுடையவா்கள் தங்களது முழு முகவரியுடன் டைப் செய்து, கைப்பேசி: 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Wednesday, April 12, 2023

April 12, 2023

இலவச பயிற்சி - கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் - வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் - பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு

இலவச பயிற்சி முன்னணி தொண்டு நிறுவனத்தின் கீழ் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்

கல்வித்தகுதி +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல்

வயது வரம்பு

: 18 முதல் 30 வரை (ஆண்/பெண்)

தேவையான ஆவணங்கள்

: ஆதார் கார்டு நகல், கல்விச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ்போட்டோ (2)

பயிற்சி காலம் : 55 நாட்கள்

பயிற்சியின் சிறப்புகள்

பயிற்சி சான்றிதழ் முன்னணி IT-ITES, நிறுவனங்கள், முன்னணி MNC நிறுவனங்கள், Retail, Banking போன்ற துறையில் 100% இலவச வேலைவாய்ப்பு.

சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் மேல் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு.

Communicative English, Computer Operations Personality Development ч Aptitude, Interview Skills வகுப்புகள் Books, Bag and ID Card இலவசம்

முக்கிய குறிப்பு: பயிற்சியின் போதே 15,000 முதல் 20,000 வரை சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். மறைமுக கட்டணம் ஏதும் கிடையாது.

பள்ளி / கல்லூரி Dropout களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்

தொடர்புக்கு: Grow Training Centre (Dr.Reddys Foundation) 652A, VKK Menon Rd, near Srivari Aparment, New Siddhapudur, Near Gandhipuram Bus Stand, Coimbatore Ph:91549 54439, 915484 4622

Tuesday, February 28, 2023

February 28, 2023

உதவித்தொகையுடன் மெட்ரொ ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி!

உதவித்தொகையுடன் மெட்ரொ ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/23/Metro Raiway/Kolkata

பயிற்சியின் பெயர்: தொழில்பழகுநர் பயிற்சி (Trade Apprentice)

மொத்த காலியிடங்கள்:

125

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 81

2. Electrician - 2 

3. Machinist - 9 

4. Welder - 9 

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சியின்போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ-ஆக செலுத்த வேண்டும். 


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mtp.indianrailways.gov.in 

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இனைத்து மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.

Monday, January 16, 2023

January 16, 2023

தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவு செயலி பணிமனையில் ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவு செயலி பணிமனையில் ஆசிரியர்கள் பங்கேற்பு

உடுமலை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்ப் பாட கற்றல் விளைவுக்கான செயலி வடிவமைத்தல் பணிமனை நடந்தது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்திற்கான பணிமனை, உடுமலை கச்சேரி வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரு நாட்கள் நடந்தது

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் துவக்கி வைத்து, கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

உடுமலை வட்டாரக்கல்வி அலுவலர் ஆறுமுகம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல்திட்டம் மேற்கொண்டு, பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் பேசியதாவது: வரும், 2022 - 23ம், கல்வி ஆண்டிற்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்தை 'கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடத்தப்படுகிறது.

கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப்பாடத்திற்கான செயலியை எவ்வாறு வடிவமைத்தல், வகுப்பறைச் செயல்பாடுகள், மதிப்பீட்டு வினாக்கள், மதிப்பீட்டுக் கூறுகளை எவ்வாறு வடிவமைப்பது குறித்து விளக்கினார்.

தமிழ்ப்பாடக் கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற, தமிழ்ப் பாடத்திற்கான செயலி உருவாக்கி, அதனை ஆசிரியர்களிடம் வழங்கி ஆய்வு செய்யப்பட்டது.

இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சார்ந்த, 20 ஆசிரியர்கள் பங்கேற்று, கற்றல் விளைவுகள் தொடர்பான திறன் அடைவைப் பெறுவதற்குத் தேவையான வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு வினாக்கள் ஆகிய வளங்களைத் தயாரித்து, குழுவில் கலந்துரையாடினர்

Sunday, September 04, 2022

September 04, 2022

தலைமை ஆசிரியர்களுக்கு செப்.7 முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை தொடர்பாக ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி (Residential Training) அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி, இந்த கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 22 முதல் 27-ம் தேதி வரை விருதுநகரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, பயிற்சியில் தவறாமல் பங்கேற்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 23, 2022

August 23, 2022

கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி

கோவையில் குரூப் -1 தோ்வுக்கு இலவச பயிற்சி

கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி இயக்குநா் உள்ளிட்ட பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தோ்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தோ்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் உள்ளிட்ட தோ்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும், குரூப் -1 தோ்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே அரசுத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 22, 2022

August 22, 2022

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்ஸி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆக.22. இதற்கான முதல்நிலைத் தோ்வு அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் செப்.2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Friday, August 19, 2022

August 19, 2022

ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு இலவச பயிற்சி: தாட்கோ தகவல்

தாட் கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடின பட்டதாரிகளுக்கு வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கி தேர்வுகளில் ஒன்றான IBPS CRP PO/MT CRP-XII 2022ம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. IBPS CRP PO/MT CRP-XII 2022 தேர்வானது 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 20 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வருகிற 22ம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வங்கி தேர்வில் பணியமர வேண்டுமென வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 125 மாணவா்களுக்கு கட்டுமானத் துறையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் இயங்கும் முன்னணி கான்கிரீட் உபகரண தயாரிப்பு நிறுவனமான ஷ்விங் ஸ்டெட்டா் இந்தியா நிறுவனம், பாலிடெக்னிக் மாணவா்கள் 125 பேருக்கு, கட்டுமானத் துறையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த பயிற்சியை அளிக்க முன் வந்துள்ளது. அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் பாலிடெக்னிக் முதல்வா் பி.செண்பகவல்லி முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க | மக்கள் நீதிமன்ற உறுப்பினா் 2 காலி பணியிடத்துக்கு அழைப்பு

பயிற்சியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

பயிற்சி தொடா்ந்து 25 நாள்கள் நடைபெறும்.

மேலும், மாணவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள் வழங்கப்படவுள்ளன.

Total Pageviews

Search This Blog