Breaking

Showing posts with label income tax case. Show all posts
Showing posts with label income tax case. Show all posts

Sunday, December 08, 2024

Tuesday, March 05, 2024

Tuesday, January 23, 2024

January 23, 2024

INCOME TAX - போலி வாடகை ரசீதை ஃபைல் பண்றீங்களா?



INCOME TAX - போலி வாடகை ரசீதை ஃபைல் பண்றீங்களா?

நீங்கள் போலியான வாடகை ரசீதுகளை சமர்ப்பிக்கிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்..HRA டிடக்ஷனை நீங்கள் கிளைம் செய்கிறீர்கள் என்றால் நிறுவனத்திடம் இருந்து HRA கிடைத்தால் மட்டுமே உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது.

இல்லையெனில் ஹவுஸ் ரென்ட் அலவென்ஸில் உள்ள ஒரு விதி மூலமாக வருமான வரித்துறை உங்களுக்கு சிக்கல்களை கொடுக்கலாம். ஜனவரி மாதம் என்பது இந்தியாவில் உள்ள மாத சம்பளம் வாங்கக்கூடிய நபர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு மாதமாக கருதப்படுகிறது. இது நிறுவனங்கள் எம்பிளாயிகளிடமிருந்து முதலீட்டு ப்ரூஃப்களை கேட்கக்கூடிய மாதம். அவை LICகள், ELSS, பிற வரி சேமிப்பு திட்டங்கள் அல்லது வாடகை ரசீதுகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த டாக்குமென்ஸ்ட்களின் அடிப்படையில் நிறுவனம் உங்களது வரியை கணக்கிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு அதனை உங்கள் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யும். இறுதியான டிடக்ஷன் வருமான வரி துறையினரால் செய்யப்பட்டு, பின்னர் உங்களுக்கு ரீஃபண்ட் கூட கிடைக்கலாம். இது மாதிரியான முதலீட்டு ப்ரூஃப்களை கொடுக்கும் பொழுது ஒரு சில நபர்கள் போலியான வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து வரிகளை சேமிப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஒருவேளை நீங்களும் அவ்வாறு செய்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக வருமானவரித்துறையினரிடம் சிக்கி கொள்வீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த பல வருடங்களாக பலர் இந்த வழியில் வரிகளை சேமித்து வருகின்றனர். வருமானவரித்துறை இதனை தற்போது கவனிக்க தொடங்கியுள்ளது. இது மாதிரியான சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை கண்டுபிடிக்க துவங்கியுள்ளது. போலியான வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து டிடக்ஷன்களை கிளைம் செய்யும் நபர்களுக்கு கடந்த ஆண்டு முதல் வருமான வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பி வருகிறது.

வாடகை ரசீது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை வருமானவரித்துறை எவ்வாறு கண்டுபிடிக்கிறது.?

- போலியான வாடகை ரசீதுகளை வருமானவரித்துறை ஆர்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் மூலமாக கண்டுபிடிக்கிறது.

- இதற்கு, AIS படிவம் மற்றும் படிவம்-26AS ஆகிய இரண்டும் படிவம்-16 உடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

- PAN கார்டு சம்பந்தப்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் அனைத்தும் இந்த படிவங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஒரு வரி செலுத்துவோர் ஹவுஸ் ரெண்ட் அலவன்சில் வாடகை ரசீது மூலமாக கிளைம் செய்யும் பொழுது அவர்களது கிளைம் இந்த படிவங்களுடன் ஒத்துப் போகிறதா மற்றும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றதா என்பதை வருமானவரித்துறை கவனிக்கும்.

ஒரு எம்பிளாயி ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்தினால் அவர் வீட்டு உரிமையாளரின் PAN நம்பரையும் வழங்க வேண்டும். இதனைக் கொண்டு உங்களது HRA இன் கீழ் கிளைம் செய்யப்பட்டுள்ள தொகை வீட்டு உரிமையாளரின் நம்பருக்கு அனுப்பப்பட்ட தொகையுடன் ஒத்து போகிறதா என்பதை வருமானவரித்துறை ஒப்பிட்டு பார்க்கும். இந்த இரண்டிற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கும் பக்கத்தில் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.

ஒருவேளை உங்களது நிறுவனம் HRA வழங்கி மற்றும் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகையை கிளைம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் வீட்டு உரிமையாளரின் PAN-ஐ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வருமானவரி துறையை தவிர்க்க வேண்டும் என்றால் கேஷ் ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை செய்யலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாடகை ரசீது மற்றும் வீட்டு உரிமையாளரின் PAN டிரான்ஸாக்ஷன்கள் ஆகிய இரண்டிலும் வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேஷ் ஆக செலுத்தி இருந்தாலும் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

Wednesday, December 06, 2023

December 06, 2023

வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு Awareness Registration on Income Tax Computation

வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு Awareness Registration on Income Tax Computation

இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது.

மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது.

இதில் எது லாபமானது?

1. CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் ஆண்டு வருமானம் *ரூ. 10 லட்சம் முதல் 11 இலட்சம்* எனில் அவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கிடும் போது,

பழைய முறையை விட புதிய முறையில் சுமார் *4000 முதல் 5000* வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

2. இதேபோன்று, ஆண்டு வருமானம் 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுபவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு முறை முறையில் 8000 முதல் 11000 வரை* குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

3. இதே நிலையில் ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 12,000 முதல் 15000 வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும். 4. ஆண்டு வருமானம் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 20000 முதல் 23000 வரை வருமான வரி குறைய வாய்ப்பு உள்ளது.

5. ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரையும் வருமான வரி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

6. GPF முறையில் பணி நியமனம் பெற்றவர்கள் ஆண்டு வருமானம் 14 லட்சம் முதல் 15 லட்சம் என இருந்தால் அவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை புதிய கணக்கீட்டு முறையில் வருமான குறைய வாய்ப்பு உள்ளது.

7. எனவே, புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தையும் - பழைய வருமான வரி படிவத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தை (NEW TAX REGIME) தேர்ந்தெடுத்து நமக்கு எவ்வளவு வருமான வரி வரும் என்பதை இப்பொழுதே கணக்கிட்டு அதற்கேற்றவாறு தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்

8. அதிகமான தொகையை நீங்கள் பிடித்தம் செய்தால் அதை திரும்பி வாங்குவது கடினமான ஒன்றாகிவிடும்.

9. ஏனெனில் நமக்கு ஏற்கனவே இன்கம் டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸில் வருமான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என காட்டப்பட்டு உள்ளதால் அதிகமான தொகையை நீங்கள் பிடித்தும் செய்தால் அதை வருமான வரித்துறை அதைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள். 10. எனவே இப்பொழுதே திட்டமிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாராகுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

11. வீட்டுக் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூபாய் 2 லட்சம் செலுத்துபவர்களுக்கு பழைய வருமான வரி கணக்கீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்

12. எனவே வீட்டுக் கடன் வட்டியை கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி அதாவது இரண்டு லட்சத்திற்கு கீழாக வட்டி கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி, எது குறைவாக வருகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

13. ஆண்டு வருமானம் 7 லட்சம் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு முறைகளிலுமே வருமான வரி கட்டத் தேவையில்லை.

14. புதிய வருமான வரி கணக்கிட்டு படிவத்தின் படி,
50,000 STSNDARD DEDUCTION உண்டு. மேலும்,
UPTO 3 LAKHS
NIL TAX
3 LAKH TO 6 LAKH
5%
6 LAKH TO 9 LAKH
10%
9LAKH TO 12 LAKH
15%
12 LAKH TO 15 LAKH
20%
ABOVE 15 LAKH
30 %

Tuesday, November 21, 2023

November 21, 2023

வருமான வரி சரிபார்க்க - வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு

வருமான வரி சரிபார்க்க - வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு Income Tax Check – Notification issued by Income Tax Department

வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:

வருமான வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் கணக்கு விபரங்கள், இ - வெரிபிகேஷன் என்ற, ஆன்லைன் சரிபார்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை, 2021ல் அறிமுகமானது.

வருமான வரித்துறையின், https://incometaxindia.gov.in/ என்ற இணையதளத்தில், வரி செலுத்துவோருக்கான இணைய பக்கத்தில், ஆண்டு கணக்கு விபரங்களுடன், நிதி பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.

தாங்கள் தாக்கல் செய்த கணக்கு விபரங்கள் மற்றும் வங்கி நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்து கொள்ளவும். வரி கணக்கு அறிக்கைக்கும், நிதி பரிவர்த்தனைக்கும் இடையே முரண்பாடு இருந்தால், மேம்படுத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம். சரியாக இருந்தால், சம்மதம் என ஆன்லைன் பதிவை மேற்கொள்ளவும்.

இதில் முரண்பாடுகள் இருந்தால், வரி செலுத்துபவரின் ஆவணங்கள், 'சோர்ஸ்' என்ற மூல ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 11, 2023

October 11, 2023

Income Tax outstanding demand and Form 26AS பார்ப்பதற்கான வழிமுறைகள்

Income Tax outstanding demand and Form 26AS பார்ப்பதற்கான வழிமுறைகள் (Instructions to view Income Tax outstanding demand and Form 26AS)...

Income Tax website CLICK HERE

https://www.incometax.gov.in/iec/foportal/

Outstanding Demand

Login



User name - (PAN Number)



Password



Pending Actions



Response to outstanding Demand.



use Check your outstanding Demand. year wise Showing.



Form 26AS download

Login.



e-file



Income tax returns



View Form 26AS (Click)



Confirm



I agree and proceed.



view tax credit (Form 26 As/Annual Tax Statement) Click





Assessment year



View As HTML -> View/download -> Export as PDF

மேற்கண்ட முறையில் வருமான வரி செலுத்த வேண்டிய தொகை இருப்பின் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, August 22, 2023

August 22, 2023

Income Tax - அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க உத்தரவு: பாலிசிதாரர்கள் அதிர்ச்சி



Income Tax - அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க உத்தரவு: பாலிசிதாரர்கள் அதிர்ச்சி

தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (பிஎல்ஐ), கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் (ஆர்பி எல்ஐ) பாலிசிகளின் முதிர்வு தொகைக்கு 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க தபால்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலிசிதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தபால் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆயுள் காப்பீடு திட்டம் மற்ற காப்பீடு திட்டங்களை விட குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டை வழங்குகிறது. மேலும், முதிர்வு தொகையை நிர்ணயிக்கும் போனஸ் விகிதம், மற்ற எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்களை விட மிக அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரும்போது டிடிஎஸ் தொகை தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்கப்படாத நிலையில், தற்போது, தபால் துறை இயக்குனரகம் பிஎல்ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ பாலிசிகளின் முதிர்வு தொகையானது ஒரு லட்சத்தை தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தபால் துறை வெளியிட்ட உத்தரவால் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்ட திட்டத்தின் காப்பீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள பீல்டு ஆயுள் ஆபீசர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் பாலிசிதாரர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். எனவே, புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலிசிதாரர்கள் மற்றும் பீல்டு ஆபிசர்கள் கூறியதாவது: முதிர்வு தொகை ஒரு லட்சம் தாண்டினால் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்க வேண்டும் என்ற உத்தரவால் பல பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

காப்பீடு திட்டத்தில் இணையும்போது இதுபோன்ற எவ்வித தகவல்களும் அளிக்காத நிலையில், திடீரென டிடிஎஸ் கழிக்கப்படும் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, காப்பீட்டில் இணையும்போது ஜிஎஸ்டி பிடிக்கப்படும் என தெரிவிக்காத நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு 4.5 சதவீதம் ஜிஎஸ்டியும், ஒரு வருடத்திற்கு பிறகு 2.3 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது முதிர்வு தொகையில் 5 சதவீதம் டிடிஎஸ் கழிக்கப்படும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.மேலும், தபால்துறையின் திடீர் உத்தரவால் பாலிசிதாரர்கள் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தபால்துறை இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, February 02, 2023

February 02, 2023

தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New Regime (புதிய முறைக்கு) மட்டும் தான் பொருந்தும் என்பதை Old Regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியீடு - செய்தி வெளியீடு எண் : 210 - நாள் : 01.02.2023

தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New Regime (புதிய முறைக்கு) மட்டும் தான் பொருந்தும் என்பதை Old Regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியீடு!
செய்தி வெளியீடு எண் : 210

நாள் : 01.02.2023

தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை - தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்", "இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு". “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்", “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது" போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைந்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை. அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, February 01, 2023

February 01, 2023

Income tax slab : Budget2023: புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

Income tax slab :Budget2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

new income tax slabs:புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேசமயம், பழைய வரிவிதிப்பு முறை தொடரும். இந்த வரிவிதிப்பு முறையிலும் ஐடி ரிட்டன் தாக்கல் செய்து, வரிவிலக்கு, முதலீட்டு, செலவுக் கழிவுகளை அரசிடம் இருந்து பெற முடியும்.
அதேசமயம், புதிய வருமானவரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்கள் எந்தவிதமான முதலீட்டுக் கழிவுகளையும், விலக்குகளையும் அரசிடம் இருந்து பெற முடியாது. 

ஆனால், ரூ.50 ஆயிரம்வரை நிரந்தரக் கழிவு மட்டும் பெறலாம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பழைய வரிவிதிப்பு முறையில் இதேபோன்ற கழிவுகள் இருப்பதால், ரூ.5 லட்சம்வரை வருமானம் இருப்போர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2.50 லட்சம் வரை பழைய வரிவிதிப்பு முறையில் இருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் ஈட்டுபவர் ரூ.33,800 வரை சேமிக்க முடியும். 

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.23,400 வரையிலும், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.49,400வரை சேமிக்க இயலும். உயர்வருமானம் உள்ள பிரிவினரான ஆண்டுக்கு ரூ.2 கோடிவரை வருமானம் ஈட்டுவோருக்கான சர்சார்ஜ் 37சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5.50 கோடி வருமானம் ஈட்டுவோர் ரூ.20 லட்சம்வரை சேமிக்க முடியும்.

புதிய வருமானவரி முறையின் படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரிவதிக்கப்படும்.

 ரூ.6 முதல் ரூ.9 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வரிவிதிக்கபப்டும்.

ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரிவிதிக்கப்படும்

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். 

ரூ.15.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக ரூ.52.500வரை நிரந்தரக் கழிவு பெறலாம்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு Action against higher education minister in income tax case? - Madras High Court order
வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, அமைச்சர் பொன்முடிக்கு ரூ .60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் , அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், " எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை" என்று கூறினார். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, நோட்டீஸின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Total Pageviews

Search This Blog