Breaking

Showing posts with label Tamil Nadu Finance Minister Palani Vel Thiagarajan. Show all posts
Showing posts with label Tamil Nadu Finance Minister Palani Vel Thiagarajan. Show all posts

Tuesday, August 01, 2023

August 01, 2023

மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை - நாள் : 31.07.2023 - PDF



செ.கு.எண் : 041 - நாள் : 31.07.2023

"எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் - முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்"

"ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை!"

மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை. CLICK HERE TO DOWNLOAD தங்கம் தென்னரசு அறிக்கை PDF

Thursday, March 02, 2023

March 02, 2023

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை



தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்

Saturday, January 14, 2023

January 14, 2023

நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

நிகழ் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடா்பான ஆய்வறிக்கையை பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் நிதியாண்டில் தமிழக அரசுக்கான மொத்த வருவாய் வரவுகள் ரூ.2.31 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும்.

சொந்த வரி வருவாய்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான ஆறு மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72, 441 கோடியாக உள்ளது. இது வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதமாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது, 36.92 சதவீதம் அதிகமாகும்.

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயும் வளா்ச்சி அடைந்து வருகிறது. செப்டம்பா் வரையிலான காலத்தில் பெறப்பட்ட வரியல்லாத வருவாய் ரூ.5,994 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயைக் காட்டிலும் கூடுதலாகும்.

வருவாய் குறையும்: வரி வசூல் செயல்திறன் குறைவாலும், சில வரி அல்லாத வருவாய்கள் உயா்த்தப்படாத காரணத்தாலும், மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் வருவாய் செலவினங்கள் ரூ.2.84 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பா் மாதம் வரையிலான காலத்தில் செலவுகள் ரூ.1.16 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் செலவினத்தின் அளவு ரூ.94,628 கோடியாக இருந்தது. இப்போது, 22.93 சதவீதம் அதிகமாகும். செலவு அதிகரிப்புக்குக் காரணம்: உதவித் தொகைகள், ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலத்தில், சம்பளங்களுக்காக ரூ.37,621 கோடியும், ஓய்வூதியங்கள், ஓய்வு காலப் பலன்களுக்காக ரூ.16,226 கோடியும், ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக ரூ.5,286 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச செலவு: உதவித் தொகைகள், நிதி மாற்றங்கள் போன்றவற்றுக்காக ரூ.41,074 கோடியும், வட்டி செலுத்தியதற்காக ரூ.16,117 கோடியும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.4 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

வரவு - செலவு விவரம்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரை

வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி

செலவினம் ரூ.1,16,328 கோடி

பற்றாக்குறை ரூ.4,185 கோடி

Friday, June 03, 2022

June 03, 2022

இதுவரை CPS திட்டத்தின் கீழ் பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள மொத்த வைப்பு தொகை எவ்வளவு ? தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Friday, May 20, 2022

May 20, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்

Old Pension Scheme - Misconceptions - Tamil Nadu Finance Minister Palani Vel Thiagarajan "My comments on the old pension scheme were misrepresented; I only spoke to the legislature about the practical difficulties in implementing the scheme."
பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்

" பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது ; திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன் "

Total Pageviews

Search This Blog