Breaking

Showing posts with label PEOPLE'S. Show all posts
Showing posts with label PEOPLE'S. Show all posts

Sunday, May 26, 2024

May 26, 2024

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் - தமிழக வெற்றிக் கழகம்

Thursday, November 23, 2023

November 23, 2023

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்



'Looking for you, in your town' - Tamil Nadu government's new scheme for people to complain ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை முதல்வரே களத்துக்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம். "மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்" என்று சொன்ன அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.

மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தீட்டப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும். அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர். தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின் கம்பீரம் மக்களைக் கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர். இந்தத் திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம்; மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்களை குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Saturday, September 23, 2023

September 23, 2023

பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பொதுமக்கள் ஊராட்சி மணி என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள 155 340 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவிக்கலாம். இந்தத் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். ஊராட்சி மணி திட்டத்திற்கான அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவித்திட கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் இயக்குனர் தலைமையில் காணொளி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்களின் விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.

Sunday, September 17, 2023

September 17, 2023

விநாயகர் சதுர்த்தி., எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.?!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


பூஜை செய்ய உகந்த நேரம்


காலை : 06.00 முதல் 07.00 மணி வரை


பகல் : 12.00 முதல் 02.00 மணி வரை


மாலை : 06.00 முதல் 9.00 மணி வரை


விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயகரை போற்றி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம்.


நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.

விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்தவொரு செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கின்றோம்.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
September 17, 2023

விநாயகர் சிலையை வீட்டுக்கு வாங்கி வந்தபின் செய்ய வேண்டிய... செய்யக் கூடாத... விஷயங்கள் என்ன...?



மூன்று நாட்களும் பூஜை அறை விளக்கு அணையாமல் எரிய வேண்டும். மூன்று நாட்களும் பூ அலங்காரங்களால் பளிச்சிட வேண்டும்.

சிவபெருமானின் பக்தனாக இருந்து கடும் தவங்கள் பெற்று கஜமுகாசுரன் என்பவன் மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் இறுமாப்புடன் சுற்றுத்திரிந்த கஜமுகாசுரன் தேவர்களை துன்புறுத்தத் துவங்கினான்.

பின் தேவர்கள் சிவனை நாட சிவனோ யானை தலை கொண்ட மனித உடலாக விநாயகரை படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். பின் விநாயகருக்கும், கஜமுகாசுரனுக்கும் கடும் சண்டைகள் நீள இறுதியாக வினாயகர் தன் கொம்புகளில் ஒன்றை உடைத்து கஜமுகாசுரனை அழித்தார். அன்று ஆவணி சதுர்த்தி என்பதால் விநாயகர் சதுர்த்தியாக வழிபடத் தொடக்கினர்.

அன்று விநாயரை வீட்டிற்கு வாங்கி வந்து வழிபட்டால் அழிக்க முடியாத தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு விநாயகரை வீட்டிற்கு அழைத்து வரும் போது வீட்டில் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதேசமயம் சில விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னென்ன? பார்க்கலாம். விநாயகர் சிலையை வாங்கும்போது அப்படியே வாங்கி வரக்கூடாது. அதற்கென புதிய மனை வாங்கி அதில் வைத்துதான் வாங்கி வர வேண்டும். விநாயகர் அமர்ந்தபடி இருக்க வேண்டும்.விநாயகரை வீட்டிற்கு அழைத்து வரும் முன்னரே வீட்டை சுத்தமாக வைத்து நேர்மறையான விஷயங்கள் வீட்டைச் சுற்றிலும் இருக்குமாறு செய்ய வேண்டும். உள்ளே நுழைவதற்கு முன் ஆரத்தி எடுத்த பின்னரே உள்ளே கொண்டு வர வேண்டும்.சிலையை வடகிழக்கு நோக்கி வைக்க வேண்டும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும்.

அப்போதுதான் வீட்டில் மகிழ்ச்சி நிலை கொண்டிருக்கும்.வீட்டில் இருக்கும் மூன்று நாட்களும் கட்டாயம் காலை மாலை என இரண்டு வேளையும் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த பலகாரங்கள் படைக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.

மூன்று நாட்களும் பூஜை அறை விளக்கு அணையாமல் எரிய வேண்டும். மூன்று நாட்களும் பூ அலங்காரங்களால் பளிச்சிட வேண்டும்.மூன்று நாட்கள் வீட்டில் தவறான வார்த்தைகள், எதிர்மறை விஷயங்களை பரப்பக் கூடாது. உதாரணமாக வீட்டில் சண்டை போடுவது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, அழுவது, கத்திக்கொண்டே இருப்பது இப்படி எதுவும் செய்யக் கூடாது. அதேபோல் சூதாட்ட விளையாட்டுகளும் விளையாடக் கூடாது.

அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது. மூன்று நாட்களும் விநாயகருக்கு படைத்த பின்னரே வீட்டில் உணவு உண்ண வேண்டும்.இவற்றை சரியாக செய்தாலே உங்கள் வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் சூழும். பிரச்னைகளும் நீங்கும். அமைதியும் சாந்தமும் உண்டாகும்...

Wednesday, March 08, 2023

March 08, 2023

G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Wednesday, November 23, 2022

November 23, 2022

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததன் காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமானது நாளை முதல் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 13, 2022

August 13, 2022

அரசு பள்ளிக்கு கிராமத்தினர் சீர்வரிசை

அரசு பள்ளி மாணவர் களுக்கு தேவையான. 20 வகை பொருட்களை, பெற்றோர். சீர்வரிசையாக எடுத்து வந்து, பள்ளியில் நேற்று ஒப்படைத்தனர்.

மேல்மருவத்துார் அடுத்த ராமாபுரம் ஊராட் சியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. வேலா மூர், கீழாமூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ பயில்கின்றனர்.

மாணவியர் பள்ளி மாணவ - மாண வியருக்கு கல்வி கற்ப தற்கான தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தேவையான பொருட்களை வாங்கித்தர கிராமத்தினர் முடிவெசில், டுத்தனர்.

தொடர்ந்து பீரோ, கணினி மேஜை, மின் விசிறி, வண்ண மாணவர்களுக்கு விளையாட்டு பொருட் கள், அறிவியல் உபகரணங் கள், நோட்டு புத்தகங்கள். பென் நாற்காலிகள் போன்ற வற்றை, பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கினர்.

பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று. சோத்துப்பாக்கம் வந்த வாசி சாலையில் ஊர்வல மாக வந்தனர்.

இதை பார்த்த வியாபா ரிகள் மின்விசிறி, டியூப் லைட், நோட்டு புத்தகங் கள், பேனா, பென்சில் ஆகியவற்றை, அவர்களா கவே வந்து வழங்கினர்.

சீர்வரிசை போல் சுமந்து வந்தோருக்கு, பள்ளி மாண வர்கள் வரவேற்பு அளித்த னர். சீர்வரிசை பொருட் களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்களிடம், கிராமத்தினர் வழங்கினர்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கபடுமா? கோரிக்கை வைக்கும் மக்கள்

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் நான்கு நாட்கள் மீதமிருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக பல பயனர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், "இதுவரை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது குறித்த யோசனை பரிசீலனையில் இல்லை. கடந்த முறை, 50 லட்சத்துக்கும் மேலான வருமான வரி கடைசி தேதியில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறை, கடைசி தேதியன்று, 1 கோடிக்கும் மேல் வருமான வரி தாக்கல் செய்யப்படலாம் அதற்கு தயாராக இருக்கும்படி என்னுடைய துறை அலுவலர்களிடம் கூறியுள்ளேன்" என்றார். வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு நிதித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரிப் செலுத்துவர்களின் சங்கமான அனைத்திந்திய வரிப் செலுத்துவர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு சார்பில் இப்படி விளக்கம் அளிக்கப்பட்டது.

காலக்கெடுவை நீட்டிப்பதற்கான கோரிக்கைகளுக்கு மத்தியில், பட்டயக் கணக்காளர்களின் உச்சபட்ச அமைப்பான இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி வரை 2.8 கோடிக்கும் அதிகமான கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.

"#Extend_Due_Date_Immediately" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வருகிறது. காலக்கெடு முடிவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்துவது கட்டாயமானது.

Thursday, July 07, 2022

July 07, 2022

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: பயனாளிகளில் 34 லட்சம் பேர் தேர்வு?

தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் வழங்க முடியாது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என, மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள்;

ஏழ்மையில் உள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மத்திய அரசு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதற்காக, அந்த பயனாளிகளின் வங்கி கணக்கு விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ளன.

தமிழகத்தில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிம தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின், உரிம தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்

ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில், 28 மாணவர்கள் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.70 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர்.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிக்க | TET - தகுதித்தேர்வு நிபந்தனைகளை அரசு கைவிட்டு 10 ஆயிரம் ஆசிரியர்களை காப்பாற்ற கோரிக்கை

இதுகுறித்து ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல்.சுரேஷ்சேனாதிபதி கூறியது:

கஜா புயல் பாதிப்பின்போது, எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஆம்பல் ரிலீப் ஃபண்ட் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, நிதி வசூலித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம்.

பின்னர், அதே பெயரில் கிராம வளர்ச்சி மற்றும் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டினோம். தொடக்கத்தில், இலுப்பைத்தோப்பு அரசுப் பள்ளியில் 1,500மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது 500-க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர். எனவே, இப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என 21 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பெற்று, இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளோம். வரும் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளோம் என்றார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு! - உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் கூறியபோது, “கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உள்ள இந்தப் பகுதியில், பரிசு பெறும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அந்தத் தொகை மிக உதவியாக இருக்கும் என்றுகூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். பரிசுத் தொகையை பெறுவதற்காக மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்” என்றார்.

Saturday, March 19, 2022

March 19, 2022

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு..பெற்றோரே... வாங்க! வீடுவீடாக சென்று ஆசிரியர்கள் அழைப்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதற்காக, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து அழைப்பிதழ் வழங்கி பெற்றோருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.பள்ளி மோலண்மை குழுக்களுக்கு, பெற்றோர்களில் இருந்து, 15 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் ஒளிவுமறைவற்ற முறை பின்பற்றப்பட வேண்டும்.பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படிக்க | கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!!

பெற்றோர் தலைவராகவும், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 20 உறுப்பினர்களில், 15 உறுப்பினர்கள் பெற்றோர்களாகவும், அதில் குறைந்தபட்சம், 10 பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக இடம் பெற்று இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் கூறியதாவது: பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு முறையாக பெற்றோர்களை அழைக்க வேண்டும்.

வருகை பதிவேடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

கூட்டம் நடத்தும் போது, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கூட்டம் நடக்கும் இடம், கழிப்பிடம் உள்ளிட்ட இடங்களை குறிக்கும் வகையில், பதாகைகள் வைக்க வேண்டும்.பள்ளிகளில் இடவசதிக்கேற்ப, வகுப்புகள் வாரியாக பிரித்து அல்லது ஆண், பெண் என தனித்தனியாக வைத்து கூட்டம் நடத்தலாம்.

இதையும் படிக்க | SMC - கூட்டம் நடத்த தேவையான விழிப்புணர்வு வீடியோக்கள்!

இந்த குழுவின் பணிகள், எதற்காக இந்த குழு அமைக்கப்படுகிறது என்பது குறித்து பெற்றோரிடம் விளக்கமளிக்க வேண்டும்.பெற்றோரின் மொபைல் எண்கள் மற்றும் முகவரி சேகரிக்க வேண்டும்.

ஏப்., மாதத்தில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நடப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இக்கூட்டத்துக்கு பெற்றோரை முறையாக அழைக்க வேண்டும்.

அரசு பள்ளியில் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்து, வசதிகளை மேம்படுத்துவதில், இக்குழுவின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். நம் பள்ளி, நம்பெருமை!

மண்ணுார், கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோரிடம் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், ரேஷன் கடைகளுக்கும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று, 'நம் பள்ளி, நம்பெருமை' என்ற அழைப்பிதழை, பெற்றோரிடம் வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியை சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tuesday, December 21, 2021

December 21, 2021

அரசு பள்ளி அறைகளை பூட்டி பொதுமக்கள் முற்றுகை

திருக்கழுக்குன்றம் அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி, பள்ளி அறைகளை பொதுமக்கள் பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆரம்ப பள்ளி கட்டிடம் உள்ளது. அந்த பள்ளி வளாகத்திலேயே உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. இப்பள்ளிகளில், 240 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலையில் உள்ளது.

மேலும், இப்பள்ளி பழைய கட்டிடங்களில் இயங்குவதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அருகில் புதிதாக அரசு பள்ளிக்கு ஒதுக்கிய இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று மாலை கிராம மக்கள், அரசு பள்ளியின் அருகே திரண்டனர். அங்கு, பள்ளியின் அறைகளை பூட்டி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பள்ளி அறைகளை பொதுமக்கள் திறந்து விட்டனர். அனைவரும் கலைந்து சென்றனர்.

Total Pageviews

Search This Blog