Breaking

Showing posts with label IAS/IPS. Show all posts
Showing posts with label IAS/IPS. Show all posts

Monday, January 30, 2023

January 30, 2023

தமிழகத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
*🛑⚡தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்*

*⭕தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம்*

*⭕மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமனம்*

*⭕செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕பழனி விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவராக நியமனம்*

*⭕ஸ்ரீதர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கற்பகம் நியமனம்*

*⭕கிராந்தி குமார் பதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕சாரு ஸ்ரீ திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஜவகர் தமிழ்நாடு வேளாண்மை நவீனப்படுத்துதல் துறையின் இயக்குனராக நியமனம்*

*⭕இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் செயலாளராக நியமனம்*

CLICK HERE TO DOWNLOAD

Friday, September 24, 2021

September 24, 2021

அயல்நாடுகளில் செவிலியா் பணி புரிய விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செவிலியா்கள், அயல்நாடுகளில் பணி புரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழக அரசின் கீழ் அரசு சாா்ந்த நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு மனித வளம் வழங்கும் நிறுவனமாக நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, பக்ரைன், லிபியா, குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தாா் ஆகிய நாடுகளில் 10,350-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மருத்துவத் துறையைச் சாா்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள், திறனுடைய மற்றும் திறனற்ற பணியாளா்கள் இந்நிறுவனம் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் அயல்நாட்டில் பணிபுரிய விரும்பும் வேலை தேடுபவா்களை அங்கீகாரமற்ற மற்றும் நோ்மையற்ற நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுவதாகும். அயல்நாட்டுப் பணிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த பணிகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதேவேளையில், வேலை தரும் நாடுகள் தங்கள் நாட்டு மொழி அறிவு மற்றும் மிகுந்த திறன்படைத்த செவிலியா்களை பணியமா்த்த விரும்புகின்றன. இதற்காக ஆண்டுதோறும் 500 செவிலியா்களுக்கு ஆங்கில மொழிப் புலமைத் தோ்வு நடத்த தீா்மானித்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமாக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 18 லட்சம் வரை கிடைக்கும். இதற்காக இங்கிலாந்து, குவைத் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை பயன்படுத்தி அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.


மேலும், விவரங்களுக்கு நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 23, 2021

September 23, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணி நியமனம் ஒன்றியத்தில் இருக்க வேண்டும் - கலெக்டரிடம் ஆசிரியர்கள் மனு..

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணி நியமனம் ஒன்றியத்தில் இருக்க வேண்டும் - கலெக்டரிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் மனு..

Tuesday, August 10, 2021

August 10, 2021

IAS தேர்வு என்றால் என்ன ? உங்கள் கேள்விகளுக்கான அனைத்து கேள்வி பதில்களும்!

IAS தேர்வு என்றால் என்ன ? உங்கள் கேள்விகளுக்கான அனைத்து கேள்வி பதில்களும்!
*🔰IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.*
*🔴IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
*ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்*

*🔴IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?* *குறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.*
*அதிகபட்ச வயது :*
*பொதுப்பிரிவினர் (GENERAL) : 32*
*பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35*
*ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37*
*மாற்றுத்திறனாளிகள்: 42* *🔴ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
*பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை*
*பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை*
*ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)*
*🔴ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
*சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு*
*ஆளுமை அதிகாரம்*
*பெருமதிப்பிற்குரிய பணி* *சமூகத்தில் மிகவும்* *அதிகமான மரியாதை* *மேலும் பல…*
*🔴IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
*இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது*
*🔴IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
*முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.*
*🔴IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
*இல்லை.*
*ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.*
*🔴IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*இல்லை.*

*🔴தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
*IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்* *அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்*
*🔴IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?*
*முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 6 மாத காலம் போதுமானது.*
*🔴IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
*IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.* *அது ஓர் போட்டித் தேர்வு* *ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.*
*🔴IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும்.* *கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
*முற்றிலும் தவறான கருத்து*
*மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது*
*🔴IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
*இல்லை.*
*அப்படி எதுவும் இல்லை.*
*நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்*
*அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்:*

*🔴கட்டாயமான மதிப்பெண்:*
*தற்போது தேர்வு காலம், பல்வேறு போட்டி தேர்வுகள் ஒருபக்கம் இருக்க 5, 8ம் வகுப்புகளுக்கே பொதுத் தேர்வுகள் என்ற அடிப்படை வந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் நுழைவுத் தேர்வுகளிலும், அரசு பொதுத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நினைத்த வேலையில் அமர முடியும். கல்வித் துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.*

*🔴வேலை வாய்ப்புகள்:*
*அரசு வேலைக்கு தயாராகிறோம் என்றால் நாம் முதலில் செய் வேண்டியது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பெறுவது தான். இன்றைய நவீன இன்டெர்நெட் யுகத்தில் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள பல்வேறு செயலிகளும், இணையதளங்களுமே போதுமானது. அது மட்டுமின்றி ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையதளம், விண்ணப்பிக்கும் கடைசிநாள் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.* *🔴திட்டமிட்ட பயிற்சி:*
*வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தவுடன் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படித்து தயார் செய்து கொள்ளலாம் என விட்டுவிடுவதுதான். முதலில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறையைத் தெரிந்து கொள்வது கட்டாயம். அவ்வாறு அறிந்துகொண்ட தகவல்களைக் கொண்டு தேர்விற்கு என நீங்கள் ஒதுக்கும் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.*

*🔴சில மணி நேரமே போதும்:*
*போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் சிறு வயது முதல் கல்லூரி வரையில் நாம் பயின்றவையாகத் தான் இருக்கும். எனவே அரசுத் துறை தேர்வுகளுக்குத் தினமும் சில மணி நேரங்களை முழுமையாக ஒதுக்கினால் போதுமானது.*

*🔴மாதிரி வினாத்தாள்கள்:*
*தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நாட்களிலேயே நாம் பயின்றவற்றை ஒரு தேர்வாக எழுதிப் பார்ப்பது சிறந்தது. முன்னதாக கூறியது போல் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களையும், அதற்கான விடைகளையும் சேகரித்து இதனை மேற்கொள்ளலாம்.*

*🔴கூடுதல் திறமைகள் :*
*தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் உலகமே கணினி மயமாகிவிட்டது. அதில் அரசு அலுவலகங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. எனவே, அனைத்து விண்ணப்பதாரர்கள் மத்தியில் தங்களுடைய தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் என்பது அவசியம். தட்டச்சு, கணினி பயன்பாடு மற்றும் அந்தந்த துறைகளுக்குச் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது.*

*🔴பொது அறிவும் அவசியம்:*
*போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் பின்தங்கும் பகுதியே பொது அறிவு பகுதியில் தான். மாதக்கணக்கில் புத்தகத்தை மட்டுமே படித்து வரும் அவர்கள் சமீபத்திய, பொதுவான சில தகவல்களைச் சேகரிக்க தவறிவிடுகின்றனர். எனவே, தற்காலிக நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வது கட்டாயம். பொது அறிவிற்கும், தற்காலிக நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம் முதல் 30 நிமிடங்கள் வரையில் இதற்காக ஒதுக்க வேண்டும்.* *🔴மன வலிமை மிக அவசியம்:*
*குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு பல ஆயிரம், லட்சம் பேர் போட்டி போடும் நிலையில் தங்களுக்கான மன வலிமையை பெற்றிருப்பது மிக மிக அவசியம். தேர்வு அறையில் அந்த 2 முதல் 3 மணி நேரத்தில் தாங்கள் தயார் செய்தவற்றை எந்த பதட்டமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். எத்தனையோ பேர் இந்த திறமையை வளர்க்க தவறிவிடுவதால் தான் தோற்று விடுகின்றனர்.*

*🔴யுபிஎஸ்சி:*
*யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது பொருந்தும். அதில், ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தாலே போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யூ.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படித்தால் வெற்றி உங்கள் கைவசம் தான்.*

*🔴முதல் நிலை முதன்மை நிலை:*
*பொதுவாக ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதில், முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.*

*🔴முதன்மைத் தேர்வு:*
*முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலையான முதன்மைத் தேர்வில் பங்கேற்க முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.* *🔴படிக்கும்போதே அரசு வேலை:*
*படிக்கும்போது சிவில் சர்வீஸ் போன்ற அரசுத் தேர்விற்கு தயாராவது தவறில்லை. ஆனால், முழு நேரத்தையும் அரசு வேலைக்காக என ஒதுக்கிவிடாமல் இருந்ந வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் போதே செய்தித்தாள்களைப் படியுங்கள். அரசியல், சுற்றுவட்டார செய்திகளை கவனியுங்கள். நண்பர்களுடன் இதுகுறித்தான நல்ல விவாதங்களில் மேற்கொள்ளுங்கள்.*

*🔴எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறதா?*
*ஒரு முறை அல்லது தொடர்ச்சியாக படித்தாலும் அது மனதில் நிற்காமல் மறந்துவிடுவதற்கான காரணம் படித்தவற்றை மீண்டும் படிக்காமல் இருப்பதுதான். இயல்பான மனப்பாங்கில் படிக்கும்போது 24 மணி நேரத்தில் 70 சதவிகிதம் பகுதி மறந்துவிடும் எனவும், ஒரு வாரத்தில் மீதம் உள்ள 50 சதவிகிதமும் மறந்துவிடும் என்றும் உளவியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.*

*🔴வெற்றி நிச்சயம்:*

*எந்த ஒன்றில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். படிக்கும் போதே ஆர்வத்துடன் படித்தால் தேர்வின் போது வெற்றி நிச்சயமே. மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை மனதில் வைத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடையுங்கள்.*

Saturday, August 07, 2021

August 07, 2021

பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம்

தமிழகத்தில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நில நிர்வாக இணை ஆணையராக செந்தாமரை, பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக அருணா, குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் இயக்குநராக ஸ்ரவண்குமார் ஜதாவத், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணைச் செயலாளராக ஆனி மேரி ஸ்வர்ணா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை இணை செயலாளராக ஜான் லூயிஸ், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சி.இ.ஒ.வாக லட்சுமி ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.* *5. பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".*

Wednesday, July 28, 2021

July 28, 2021

கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி நிச்சயம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அறிவுரை

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று‘ஆளப் பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ என்ற இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த 25-ம் தேதி நடத்தியது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சியாளர் ஆகியோர் இணைய வழியில் கலந்துகொண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்தும், அதற்கு தயாராகும் முறை பற்றியும் மாணவ, மாணவிகள் இடையே உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்: ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு இளம் வயதில் பலருக்கு இருக்கும். அந்த ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், பெற்றோர் பெரிய அளவில் படித்தவர்கள் கிடையாது. சுய ஆர்வம் காரணமாக ஐஏஎஸ் தேர்வு குறித்து அறிந்துகொண்டேன். கடந்த 2015-ம் ஆண்டு ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உத்வேகம் பெற்றவர்களில் நானும் ஒருவன். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது தேர்வுக்கு தயாரானேன். முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. 2-வது முயற்சியில் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ் பணிக்கு தேர்வானேன். இத்தேர்வுக்காக இரண்டரை ஆண்டு காலம் தீவிரமாக படித்தேன். என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்கள்தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அடிப்படை. ஆனால், பாடப்புத்தகங்களில் இருந்து நேரடி கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. ஊகிக்க முடியாத வகையில் கேள்விகள் இருக்கும். புத்தகங்கள் மற்றும்இதர வழிகளில் நாம் கற்றுணர்ந்த விஷயங்களை யோசித்துபதில் எழுதுவதுபோல வினாக்கள்இருக்கும். தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கான போட்டி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஈடுபாட்டுடன் கூடியகடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அவசியம். நல்லஆங்கில அறிவு வேண்டும் என்றஅவசியம் இல்லை. மெயின் தேர்வில் தமிழிலேயே விடை அளிக்கலாம். நேர்காணலையும் தமிழிலேயே எதிர்கொள்ளலாம். மெயின்தேர்வு, நேர்காணலை தமிழ்வழியில் எதிர்கொண்டு பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி (ஊரகம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.ஹரி பாலாஜி ஐபிஎஸ்: சிறுவயதில் இருந்தே காக்கி உடை மீது எனக்குஓர் ஈர்ப்பு உண்டு. ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்று இளம் வயதிலேயே முடிவெடுத்தேன். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றேன். பிளஸ் 2 முடித்ததும் ஏதேனும் ஒரு இளங்கலை படித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக திட்டமிட்டிருந்தேன். ஆனால், மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட எனக்கு, மருத்துவக் கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு குணம் அடைந்தேன். நாளடைவில், மருத்துவப் படிப்பில் ஆர்வம் அதிகமானது. எம்பிபிஎஸ் முடித்ததும், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் ஆசை வந்தது. இதற்கிடையே, ஐஏஎஸ் தேர்வுக்கும் படிக்கத் தொடங்கினேன். முதல் முயற்சியில் மெயின் தேர்வில் தோல்விஅடைந்தேன். 2-வது முயற்சியில்நேர்காணல் வரை சென்றும், வெற்றிபெற முடியவில்லை. இதன்பிறகு, மருத்துவப் பணியை தொடர்ந்தேன். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012-ல் மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, 3-வது முயற்சியில் வெற்றி பெற்றேன். உலகில் பிறந்த அனைவருக்குமே ஒரே மூளைதான். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றில் தனித் திறமையுடன் இருப்பார்கள். நம்மிடம் இல்லாத திறமைகளை பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள முடியும். கடின உழைப்பு, தொடர்முயற்சி ஆகியவைதான் ஐஏஎஸ்தேர்வில் வெற்றி பெற அடிப்படையான விஷயங்கள். தோல்வி வரும்போது, மனச்சோர்வு அடைவதால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். முயற்சியை அதிகப்படுத்த வேண்டும். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து தவறுகளை சரிசெய்தால் வெற்றி உறுதி.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்சியாளர் சந்துரு: சங்கர் ஐஏஎஸ்அகாடமி, சென்னையில் மட்டுமல்லாமல், டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் என நாடு முழுவதும் கிளைகள் பரப்பி, விரிந்துபரந்து நிற்கிறது. இதுவரை எங்கள்மையத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு மாநிலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும்,3 ஆயிரம் பேர் வங்கி மற்றும் எஸ்எஸ்சி தேர்வுகளிலும் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் உள்ளனர். கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 201 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 13 பேர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்கள் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறோம். முன்பு 24 விதமான பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்போது 19 விதமான பணிகளுக்காக நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 700 முதல் 800 காலியிடங்கள் வரை வருகின்றன. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதலாம். பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும் என்பதுபோல எந்த கட்டுப்பாடும் கிடையாது. அஞ்சல் வழியில் படித்துபட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வயது வரம்புபொதுப் பிரிவினருக்கு 32. ஓபிசிபிரிவினருக்கு 35. எஸ்சி, எஸ்டிவகுப்பினருக்கு 37. சாதாரணகுடும்ப பின்னணி உடையவர்களும் அரசின் உச்சநிலை பதவி வரை செல்லக்கூடிய வாய்ப்பை வழங்கும் ஒரே தேர்வு சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள் https://bit.ly/3y8s8Wx என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

Sunday, July 11, 2021

July 11, 2021

வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் படிக்கும் புதிய முறை இணையவழி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது

வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்திலும் படிக்கும் புதிய முறை இணையவழி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது. சைதை துரைசாமியின் பயிற்சி மையம்

மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கும் இலவச பயிற்சியை அளித்து வருகிறது. நேரடி பயிற்சி வகுப்புகள், கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள், காணொலி மாதிரி நேர்முகத்தேர்வு பயிற்சிகளை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி வழி பயிற்சி வகுப்புகளை தொடங்கியது.

வருத்தம்

அதனை பார்த்து பயன்பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ். தேர்வுகள் தரத்தில் தரமான நேரடி வகுப்புகளை போன்று இணையதள வழியில் முழுமையான வகுப்புகளை, பயிற்சி வகுப்புகளின் தன்மையோடும், தரத்தோடும் வடிவமைத்து கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் எனவும், அதற்கேற்ப அடுத்தநிலை பயிற்சியையும் அமைத்து கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொலைக்காட்சி மூலமாக நடத்தப்பட்ட வகுப்புகள் வாரநாட்களில் குறிப்பிட்ட ஒருமணி நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்துவரும் அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் பயன்பெறமுடியாத நிலை உருவானது. பணியிலிருப்போர் பெரிதும் இந்த வாய்ப்பை இழந்ததாக வருத்தம் தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இணையவழி பயிற்சி இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இப்போது அதே முறையில், அடுத்ததாக இன்னும் சற்று மேன்மைவாய்ந்த, தகவல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட இணையதள வகுப்புகளை, இப்போது ஐ.ஏ.எஸ். தேர்வுகளின் பாடத்திட்டத்தை முழுமையாக வடிவமைத்து, பாடங்களை நேரடி வகுப்புகளில் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் ‘‘புதிய முறை இணையவழி ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளை’’ இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வி மையம் வடிவமைத்து இருக்கிறது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்த வகுப்புகளை எந்த நேரத்திலும் கவனிக்கவோ, பார்க்கவோ முடியும். விரைவில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கும்...

இந்த பயிற்சி வகுப்புகள் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்காகவும், உரிய பயிற்சியை அளிப்பதாகவும் இருக்கும். இணையவழியில் நடத்தப்பட உள்ள இப்பயிற்சி வகுப்புகளில், இளநிலை பட்டம் முடித்தவர்கள், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பணியிலிருப்போர் மட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும் (முதலாம், 2, 3 மற்றும் இறுதியாண்டு) மாணவர்கள்கூட கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஐ.ஏ.எஸ். பயிற்சியையும், இதன்மூலம் சிரமமின்றி பெறும் வகையில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. மேலும் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கான இதே பயிற்சியும் இணையவழியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கும் இந்த இணையவழி பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும். அடுத்தகட்டமாக பதிவுசெய்துகொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு, உரிய முழுமையான பாடத்திட்ட அடிப்படையிலான வகுப்புகளும் முழுவீச்சில் நடத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், மனிதநேய இலவச கல்வி மையத்தின் www.mntfreeias.com என்ற இணையதளத்தில் தங்களுடைய சுயவிவரங்களை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். பதிவுசெய்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் இ-மெயில் வாயிலாக ‘‘யூசர்ஸ் ஐ.டி., பாஸ்வேர்டு’’ அனுப்பப்படும். அதனை உபயோகித்து இப்பயிற்சிக்கான வகுப்புகளில் பங்குபெறமுடியும்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாகவும், செலவினங்கள் இல்லாமலும் வீட்டில் இருந்தபடியே தரமான பயிற்சியை பெறவும், தொலைக்காட்சி வகுப்புகளை கவனிக்க முடியாமல் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் எளியமுறையில் பயிற்சியை பெறவும் இந்த புதியமுறை இணையவழி பயிற்சி வகுப்புகள் வழிசெய்கிறது.

மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

Friday, July 09, 2021

July 09, 2021

இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

இலவச தையல் இயந்திரம் பெற விதவை, ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் கட்டணமில்லா தையல் இயந்திரம் பெற ஜூலை 30 ஆம் தேதி வரை கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, July 06, 2021

July 06, 2021

11 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு உடல்தகுதி தேர்வு ஜூலை 26இல் தொடக்கம்!

சட்டமன்றத் தேர்தல், கரோனா இரண்டாம் அலை ஆகியவற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 11,741 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26ஆம் தேதிமுதல் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள், ஆயுதப்படைகளில் காலியாக உள்ள 3,784 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், சிறப்பு காவல்படையில் 6,545, சிறைத்துறையில் 119, தீயணைப்புத்துறையில் 1,311 என மொத்தம் 11,741 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப். 17ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கரோனா இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அத்தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாநகரக் காவல்துறை, 29 மாவட்டக் காவல்துறை, 5 சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மைதானங்களில் வரும் 26ஆம் தேதிமுதல் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க, மாநகர, மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

Sunday, July 04, 2021

July 04, 2021

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது சென்னை, ஜூலை 3: குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாண வர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னையில் இயங்கி வரும் கிங் மேக் கர்ஸ் அகாதெமி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில், 'ETHICS - AN EASY WAY FOR AN IAS EXAM' என்ற தலைப்பில் அகாதெமியின் ஆசிரியர் மாதவி கலந்துரையாடுகிறார்.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் https://kingmakersiasacademy.com/events என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள் ளலாம்.

அதே நேரம், 2020-21-ஆம் ஆண்டுக்கான IAS,IPS தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன்,நேரடி) ஜூலை 15-ஆம் தேதி (ரெகுலர்,வார இறுதி வகுப்புகள் ) தொடங்கவுள்ளதாக இம்மையத்தின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணையோ, அண்ணாநகரில் உள்ள அகாதெமி யின் அலுவலகத்தையோ நேரில் அணுகலாம்.

Friday, July 02, 2021

July 02, 2021

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்: மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்த ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின்

மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார், தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின் சோமிதரன். அரசு ஊழியர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறா.

மதுரை அருகே திருப்பாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். ஐஆர்எஸ் அதிகாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளான ஆதிரை, ரெனி ஆகிய இருவரையும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். ஆதிரை இரண்டாம் வகுப்பிலும் ரெனி எல்கேஜி வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்தது ஏன் என்பது குறித்து ஷெரின் ஐஆர்எஸ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

''நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் அத்தகைய பள்ளிச் சூழலை உணர்ந்திருக்கிறேன். அது என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகவே நானும் ஆவணப்பட இயக்குநராகிய கணவரும் மாற்றுச் சிந்தனை கொண்டவர்கள்தான். இருவரும் இயற்கை விவசாயப் பண்ணையில்தான் எந்தவித ஆடம்பரச் செலவும் இல்லாமல் கழிவுகளை உருவாக்காமல் திருமணம் செய்துகொண்டோம். நம்மாழ்வாருடன் இணைந்து பயணித்திருக்கிறோம். இயற்கை, சூழலியல், மண் சார்ந்த விருப்பங்கள் உண்டு.

மகள்கள் பிறந்ததில் இருந்தே அவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பது குறித்து யோசித்தோம். பாடங்கள், மதிப்பெண்கள், வேலை சார்ந்து மட்டுமே அவர்களை இயங்க வைக்காமல் வாழ்க்கையின் மீது தன்னம்பிக்கையை, பிடிப்பை ஏற்படுத்த ஆசைப்பட்டோம். அதேபோலப் பல தரப்பட்ட மக்களுடன் அவர்கள் பழக வேண்டும் என்று விரும்பினோம். கல்வி வணிகமயமாகி வரும் சூழலில், பள்ளி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதற்கு அரசுப்பள்ளி சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்தோம். மற்ற பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள், எந்த ஒரு சூழலையும் தைரியத்துடனும் நேர்மறைச் சிந்தனையுடனும் அணுகுவார்கள்'' என்கிறார் ஷெரின்.

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்துத் தொடர்ந்து பொதுச் சமூகத்தில் ஐயங்கள் எழுப்பப்படுவது குறித்துக் கேட்டபோது, ''ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன்மூலம் இயல்பாகவே பள்ளிகளின் உள் கட்டமைப்பு, வசதிகள், கல்வித் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும். அவற்றை அமைப்பதற்கான கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.

இதன் மூலம் கிராமங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சி அடையும். எனினும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தேடி அங்கு சேர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன'' என்று ஷெரின் கூறுகிறார். அரசுப் பள்ளியில் மகள்களைச் சேர்த்தது குறித்து சக அலுவலக நண்பர்கள் கருத்து என்னவாக இருந்தது என்று கேட்டதற்கு, ''பெரும்பாலானோர் தைரியமான, வரவேற்கத்தகுந்த, முன்மாதிரியான முடிவு என்றுதான் கூறினர். அரசுப் பள்ளிகள் குறித்த பிம்பம் மாறியதன் அடையாளமாகத்தான் இதை நினைக்கிறேன். அதேவேளையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நிலை இல்லை'' என்று புன்னகைக்கிறார்.

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள சூழலில் அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்தும் பேசுகிறார் ஷெரின். ''கற்றல் என்பது வாழ்க்கை முழுமைக்குமான நிகழ்வு. குழந்தைகள் பள்ளியில் மட்டுமே கற்பதில்லை. அது ஒரு பகுதிதான். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் என்னென்ன முறைகளில் அவர்களுக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வகையில் படிக்கட்டும். இதனால் அவர்கள் படிப்பதற்கான வேகம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். அதை மதிப்பெண்கள், தேர்வுகள் என்று மட்டுமே பார்க்க வேண்டியதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த வகையிலாவது கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். படிப்பு மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், நெசவு, தையல், தச்சு வேலை என கலைகள் சார்ந்தும் மகள்களை வளர்த்தெடுக்க ஆசை. அரசுப் பள்ளிகளில் இத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அதிகாரமிக்க பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்'' என்று விடைகொடுக்கிறார் ஷெரின் ஐஆர்எஸ்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

Tuesday, June 29, 2021

June 29, 2021

G.O.(2D) No.148 - Dated: 29.06.2021 - தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி.யாக சைலேந்திரபாபு நியமனம்!

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி.யாக சைலேந்திரபாபு நியமனம்!
தற்போதைய டி.ஜி.பி. திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
ORDER:
In pursuance of the orders dated 22.09.2006, 03.07.2018 and 13.03.2019 of the Supreme Court of India in WP (Civil) No.310/1996 (Prakash Singh and Others Vs. Union of India & others), a proposal was sent to the Union Public Service Commission, New Delhi on 18.05.2021 in the letter fifth read above to convene the Empanelment Committee Meeting to prepare a panel of IPS officers for appointment to the post of Director General of Police and Head of Police Force, in lieu of the retirement of Thiru J.K.Tripathy, IPS, on completion of two years of his tenure as Director General of Police and Head of Police Force, Tamil Nadu on 30.06.2021. 2. Accordingly, the Union Public Service Commission, New Delhi convened the Empanelment Committee Meeting on 28.06.2021 at New Delhi and recommended a panel of the names of IPS officers as suitable for appointment to the post of Director General of Police and Head of Police Force, Tamil Nadu, in the letter sixth read above.

3. The Government have examined recommendations of the Commission carefully independently along with their service records. the and

4. The Government after due consideration appoint Dr.C.Sylendra Babu, IPS, (TN:1987) as Director General of Police, Tamil Nadu and Head of Police Force with effect from 01.07.2021.

Sunday, June 27, 2021

June 27, 2021

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்!
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு.

Friday, June 25, 2021

June 25, 2021

அரசுப்பள்ளியில் திடீரென்று ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலெக்டர் - ஆசிரியர்களுக்கு அறிவுரை

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நடப்புக் கல்வியாண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்கிய திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாணவிகளுக்குக் கணிதப் பாடம் நடத்தி சிறிது நேரம் ஆசிரியராக மாறியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவிகளுக்கு 2021- 2022ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, நடப்பாண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்கினார்.

அதையடுத்து அவர் பேசியதாவது:
''கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் அரசின் நிலையான வழிகாட்டுதல் அடிப்படையில் விலையில்லாப் பாடப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 799 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துப் பாடப் புத்தகங்களைப் பள்ளியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களை வாங்க வரும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை செய்து அதன் பிறகு பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒரு நாளைக்குத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் 50 முதல் 60 மாணவர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு நாளைக்கு 200 மாணவர்கள் வீதம் விலையில்லாப் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். இதை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டு எந்தத் தேதியில், எந்த நேரத்தில் பாடப் புத்தகங்களை வாங்கப் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இதுவரை அறிவிப்பும் வெளியிடவில்லை. இருந்தாலும், அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடிநீர், கழிப்பறை, இருக்கைகள், சுற்றுச்சுவர், வகுப்பறைகள், பள்ளிக் கட்டிடம் என அனைத்தையும் ஆசிரியர்கள் கண்காணித்து அதன் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே ஆசிரியர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்''.
இவ்வாறு ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசினார்.
இதைத் தொடர்ந்து, பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா கணிதப் பாடம் குறித்த சில கேள்விகளை மாணவிகளிடம் எழுப்பினார். அப்போது, ஒருசில மாணவிகள் பதில் அளிக்கத் தயங்கியபோது, மாணவிகளை இருக்கையில் அமர வைத்த ஆட்சியர், கரும்பலகையில் கணக்குப் பாடங்களை எழுதி, அதை மாணவிகளுக்கு எளிதாகப் புரியும்படி அரை மணி நேரத்துக்கு மேலாகப் பாடங்களை நடத்தி ஆசிரியராக மாறினார்.
மாணவிகளுடன் சேர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் நடத்திய பாடங்களை கவனித்தனர். அதன் பிறகு ஆசிரியர்களிடம் பேசிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ''கடந்த ஓராண்டுக்கு மேலாக நேரடி வகுப்புகள் இல்லாததால் மாணவிகள் சோர்வடைந்துள்ளனர். எனவே, ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு எளிதாகப் புரியும்படி பாடங்களை நடத்த முன்வர வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களும் தினந்தோறும் பாடங்களைப் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடங்களை உள்வாங்கிப் படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் பாடங்களைப் படிக்க வேண்டும்'' என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, ஆய்வாளர்கள் தாமோதிரன், தன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, June 17, 2021

June 17, 2021

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசு மாற்றியுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் பட்டியல் - TN Collectors List - as on 16.06.2021

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசு மாற்றியுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் பட்டியல்

Tuesday, June 15, 2021

June 15, 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் - செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு எண்:274 - நாள்: 15.06.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளதையும், படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும், ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதையும், ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள்.

மேலும், கல்வியில் வேலைவாய்ப்பில் சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு!

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்கள்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக - தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மாநில அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றி சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Total Pageviews

Search This Blog