GUEST LECTURERS
September 26, 2025
Showing posts with label GUEST LECTURERS. Show all posts

Friday, September 26, 2025
Tuesday, September 02, 2025
Monday, June 02, 2025
Friday, May 30, 2025
Monday, September 04, 2023
Pay Hike
September 04, 2023
ஆசிரியர் தினம் - ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழகம் முழுவதும் 164 அரசு கல்லூரிகளில் உள்ள 7,374 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு;
அரசு பொறியல் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி உத்தரவு;
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.20,000ஆக உயர்த்தி உத்தரவு தமிழக கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர் மதிப்பூதியம் ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ஆக உயர்வு!
அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரம் ஆக உயர்வு!
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ஆக உயர்வு!

Friday, July 21, 2023
Saturday, June 24, 2023
Wednesday, June 21, 2023
Wednesday, January 04, 2023
University
January 04, 2023
தமிழகத்தில் உயா்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைகழகங்கள் பின்பற்றும்: அமைச்சா் பொன்முடி

தேசியக் கல்விக் கொள்கை தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலை.கள் பின்பற்றும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணியிடங்களில் 1,895 கெளரவ விரிவுரையாளா்களை நியமிக்க உயா்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு மாநிலம் முழுவதும் 9,915 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் தகுதியானவா்கள் மட்டும் பணிநியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.
அதன்படி, கெளரவ விரிவுரையாளா் பணிக்கான கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 318 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 76 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதில் கலந்தாய்வில் பங்கேற்ற 56 போ்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே உயா்கல்வி அமைச்சா் பொன்முடி கலந்தாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்து தோ்வான மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கினாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கெளரவ விரிவுரையாளா் பணிக்கு பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
தகுதியானவா்கள் தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபாா்க்கப்படும். தமிழகத்தில் நிதி நிலைமை சீரான பின்னா் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட 4,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இது தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக பல்கலை. துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியின்போது உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Friday, December 30, 2022
Minister Ponmudi
December 30, 2022
கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி
கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி Jan. for the post of Honorary Lecturer. Interview on 3rd - Minister Ponmudi
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 1,895 பேர் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. கடந்த காலங்களில் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்தும் போது அந்தந்த கல்லூரி முதல்வர்களே அவர்களை பணியில் நியமனம் செய்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக நேர்முகத் தேர்வின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 9,915 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு வருகின்ற 3ம் தேதி சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார். 4ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள 8 பல்கலைக்கழகங்களில் பாடவாரியாக நேர்முகத் தேர்வானது நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். PhD, Net, Slet ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நேர்முக தேர்வில் சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்வதற்கு இட ஒதுக்கீடு கிடையாது எனவும், விரிவுரையாளர்கள் பணிகளில் வட மாநிலத்தவருக்கு வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாத அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 11 மாத காலம் பணியாற்றிய பின் அவர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் பணியை விட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தார் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன;4 -12 வரை நேர்முகத் தேர்வு - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Friday, December 23, 2022
GUEST LECTURERS
December 23, 2022
அரசுக் கல்லூரிகளில் 1895 கெளரவ விரிவுரையாளர் பணி - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2022
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி I இல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் - 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான புதிய அறிவிப்பை உயர்கல்வித் துறை (டிஎன்ஜிஏஎஸ்ஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: கௌரவ விரிவுரையாளர்
காலியிடங்கள்: 1895
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்க்கவும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை, முனைவர் பட்டம், நெட், செட், சிலட் தேர்வு உள்ளிட்ட ஏதாவதொரு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக்க கட்டணம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.100, இதரப் பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முதுகலை, எம்.பில்., பிஎச்.டி பட்டம் மற்றும் முதுகலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் புகைப்பட நகல்களுடன் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2022
Wednesday, December 21, 2022
SUSPENDED
December 21, 2022
பாலியல் தொல்லை கொடுத்த புகார் - கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் - Sexual harassment complaint - Honorary lecturers sacked

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் திருச்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கடந்த 16ம் தேதி குற்றச்சாட்டுகள் எழுந்தது. அன்று மாலை பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு ஆதரவாக அவர்கள் உறவினர்கள் அந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் என்பவரை தாக்க முற்பட்டதோடு அவரது இரு சக்கர வாகனத்தையும் கல்லூரிக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அமைதியை ஏற்படுத்திய நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் கவுரவ விரிவுரையாளர்களின் பாலியல் சீன்டகள் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் மனு அளித்து அளித்துள்ளார்.மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தார்.
அந்த விசாரணை குழு அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அக்கல்லூரியில் பணியாற்றி வந்த வணிக நிர்வாகவியல் துறை விரிவுரையாளர் முத்துக்குமரன்,விலங்கியல் துறை கவரவ விரிவுரையாளர் கலையரசன் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்து கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tuesday, November 29, 2022
GUEST LECTURERS
November 29, 2022
கெளரவ விரிவுரையாளா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?: அமைச்சா் பொன்முடியின் அறிவிப்பு
கெளரவ விரிவுரையாளா்களுக்கு விரைவில் இடமாறுதல் கலந்தாய்வு: அமைச்சா் பொன்முடி
அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்ததும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
தொழில்நுட்பக் கல்வித் துறை கட்டுமானப் பிரிவு, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: உயா்கல்வித் துறையில் ரூ.422 கோடியில் ஆய்வகங்கள், நூலகங்கள், வகுப்பறைகள் உள்பட 382 திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு, அவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் முதல்வா் அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதி, அரங்கம், ராணிமேரி கல்லூரியில் விடுதி போன்றவற்றுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
இது தவிர தமிழகம் முழுவதும் உயா்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், கட்டப்பட்டு திறக்கப்படாத கட்டடங்கள் ஆகியவற்றை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் உயா்கல்வித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும். பேராசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இதுவரை 580 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதற்கிடையே, கெளரவ விரிவுரையாளா்கள் தங்களுக்கும் இட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா். அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்ததும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில் உயா்கல்வித்துறைச் செயலாளா் தா.காா்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் லட்சுமி பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Wednesday, November 16, 2022
UGC
November 16, 2022
15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள்
தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் பலர் 15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்ய தேவையில்லை.
கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

Thursday, October 13, 2022
GUEST LECTURERS
October 13, 2022
கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம்

''கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம் செய்யப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.
மாணவ ருக்கு இடங்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கியபின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
பி.எட்., மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட 5,303 கவுரவ விரிவுரையாளர்களில், யு.ஜி.சி., தெரிவித்துள்ள கல்வி தகுதியின்படி, 3,393 பேர் மட்டுமே உள்ளனர். வரும் காலத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் வழியே, யு.ஜி.சி., விதிப்படி தேர்வு செய்யப்படுவர்.
 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இதுவரை இல்லாத வகையில், 4,000 உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே ஒரே கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வில், கவுரவ விரிவுரையாளர்களும் பங்கேற்கலாம். அவர்களுக்கு நேர்காணலில் மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, நவ.,1 முதல் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
தமிழகத்தில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள், 100 ஏக்கர் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன், தங்கள் கல்வி நிறுவன பெயரில், 50 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்தினால், அவற்றுக்கு யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் பல்கலை அந்தஸ்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, October 12, 2022
Sunday, October 09, 2022
Politicians
October 09, 2022
பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பகுதிநேர முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளா்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆசிரியா்களுக்கு செய்யும் அநீதி. திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பிற வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது போல இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றக்கூடாது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பகுதி நேர தகுதி பெற்ற, அனுபவம் பெற்ற விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதிதாக ஆசிரியா் நியமனஆணையத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்போவதாக அரசு சொல்வது இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என அதில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை

Friday, October 07, 2022
GUEST LECTURERS
October 07, 2022
நேர்காணல் முறையில் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு: கூட்டமைப்பினர் கோரிக்கை
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் அருணகிரி, மாநிலத் தலைவர் செந்தில் குமார் அளித்த பேட்டி:
அரசு கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 2019ல் நேர் காணல் முறையின் கீழ் 2,331 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எழுத்து தேர்வு முறைக்கு தயாராக இருங்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்து, கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருவோருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதனால், பணி அனுபவ முறையின் கீழ் விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநில தகுதித் தேர்வு 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. அதனால் விரைந்து தகுதித் தேர்வை நடத்த வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

Tuesday, August 23, 2022
Ramadoss
August 23, 2022
கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கௌரவ விரிவுரையாளா்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கௌரவ விரிவுரையாளா்களும் பணிபுரிகின்றனா். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவா்களின் நிலை கௌரவமாக இல்லை.
மாணவா்களுக்கு உயா்கல்வி கற்பிக்கும் அவா்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.700-க்கும் குறைவு தான். இந்த அளவுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. கௌரவ விரிவுரையாளா்கள் கௌரவமாக பணி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீா்வு அவா்களை பணி நிரந்தரம் செய்வதுதான்.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன.
எனவே, இனியும் தாமதிக்காமல், கௌரவ விரிவுரையாளா்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.