Breaking

Showing posts with label reservation. Show all posts
Showing posts with label reservation. Show all posts

Sunday, February 18, 2024

February 18, 2024

பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?



4% Reservation in Promotion - Will the Expectations of Disabled Govt Servants Fulfilled? - பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு - மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காகவும், சமூக நீதிக்காக பாடுபடும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்தும் தமிழகத்தில் இதுவரை நடைமுறைப் படுத்தாதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பாரா என எதிர்பார்த்துள்ளனர் மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34-இன் படி மாற்றுத்திறனாளிகளின் சம உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் 2021-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியது.



அதன்படி மத்திய அரசு பணியிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தீர்ப்பை ஏற்று ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.



ஆனால், சமூக அக்கறையுடன் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் திமுக அரசு இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் சில மாற்றுத் திறனாளி அரசு அலுவலர்கள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 % இட ஒதுக்கீடு 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என 2023 ஜனவரியில் தீர்ப்பு வழங்கினார். ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டிய தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் 7 மாதமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது.

இதனால் தமிழகத்திலுள்ள மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக மன வேதனையுடன் உள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் கூறியதாவது: “உடலில் ஊனமுடையவர்களை வார்த்தைகளில் கூட ஊனப்படுத்தி விடக்கூடாது என எண்ணிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க அரசாணை பிறப்பித்தார்.

அவரது கொள்கை வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு 4% இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.” என்றனர்

Saturday, October 07, 2023

October 07, 2023

45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு! - ஒன்றிய அரசு

THE CENTRE has informed the Supreme Court that there “shall be” reservation for Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Class in temporary appointments, which are to last for 45 days or more

45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு! - ஒன்றிய அரசு

தற்காலிக பணி நியமனங்களிலும் இடஒதுக்கீடு!

பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அரசின் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது! 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக பணி நியமனங்களில் SC/ST/OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய ரிட் மனு மீது ஒன்றிய அரசு பதில்

Wednesday, October 04, 2023

Monday, October 02, 2023

October 02, 2023

"சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது" - தலைமை நீதிபதி அமர்வு

"Minority Educational Institutions: Seat Reservation Policy Not Applicable" - Chief Justice Bench - "சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது" - தலைமை நீதிபதி அமர்வு

"சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது"

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது - சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த உயர்கல்வித்துறை உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க தேசிய ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; "50% இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும் மீத இடங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி அடிப்படையில் போட்டியிடலாம் - தலைமை நீதிபதி அமர்வு

Sunday, September 03, 2023

September 03, 2023

7.5% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு!

7.5% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு!

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளிகளில் பயின்ற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களின் கல்லூரி படிப்பு முடியும் வரை அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவது பாராட்டுக்குரியது

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

Thursday, July 27, 2023

July 27, 2023

செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; வரலாறு படைத்த கேரளா

செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; வரலாறு படைத்த கேரளா

கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும், பொது செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும் ஒதுக்கீடு செய்யப்படும். செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.

அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு இந்த அரசு சிறந்த பணியாற்றி வருகிறது என தெரிவித்த ஜார்ஜ், அதன் தொடர்ச்சியாக, சுகாதார பிரிவிலும் திருநங்கை சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Sunday, April 09, 2023

April 09, 2023

ஆதரவற்ற மாணவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு: அரசு உத்தரவு

ஆதரவற்ற மாணவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு உத்தரவு

மகாராஷ்டிர அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் நடத்தும் இல்லங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். பெற்றோரை இழந்து உறவினர் வீடுகளில் வாழும் ஆதரவற்ற மாணவ, மாணவியரும் இந்த சலுகையைப் பெறலாம்.

ஆதரவற்ற மாணவ, மாணவியர் ஏ, பி, சி என 3 வகைகளாக பிரிக்கப்படுவர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், ஏ பிரிவின் கீழ்சேர்க்கப்படுவர். தாய், தந்தையைஇழந்து ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், பி பிரிவிலும், உறவினர்களின் அரவணைப்பில் வளரும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவியர் சி பிரிவிலும் சேர்க்கப்படுவர். ஆதரவற்ற இல்லங்களின் பொறுப்பாளர் மூலம் இடஒதுக்கீடு உரிமையை கோரலாம். உற வினர்கள் இல்லங்களில் வளரும் ஆதரவற்ற சிறார், மாவட்ட மகளிர், குழந்தைகள் நலத் துறை அதிகாரி மூலம் இடஒதுக்கீடு கோரலாம். இந்த இடஒதுக்கீட்டை பெற சாதி சான்றிதழ் தேவையில்லை. அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

இவ்வாறு அரசாணையில் தெரி விக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆதரவற்றோர் இல்லங்களில் 4,000 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் சுமார் 800 ஆதரவற்ற மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீட்டை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, September 10, 2022

September 10, 2022

பொறியியல் கலந்தாய்வு; இட ஒதுக்கீடு குறித்த முழு விபரம்

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று துவங்க இருக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கான விவரங்களையும் இடஒதுக்கீடு குறித்த தகவல்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது ''இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் என 431 கல்லூரிகள் பங்குபெற உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடுகள் 1,48,711 இடங்கள் உள்ளது. தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு கோட்டா. இதில் அரசுப்பள்ளி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள். இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி (vocational) பாடப்பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது''

"பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி(இன்று) துவங்க இருக்கிறது. 10 ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டமாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முதல்கட்டம் நடைபெறும். இரண்டாவது கட்டம் செப்டம்பர் 25 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் உள்ள காலம் மாணவர்களின் நலன் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டம் அக்டோபர் 13 ல் தொடங்கி 15 வரை நடைபெறும். நான்காவது கட்டம் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறும். நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த கலந்தாய்வுகளில் பொதுப்பிரிவு 31%. இந்த பொதுப்பிரிவில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 30% ல் உள் ஒதுக்கீடாக 3.5% இஸ்லாமியர்களுக்கு என்று ஒதுக்கப்படும். அதிலும் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 7.5% உள் ஒதுக்கீடு.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். 18% பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் அதிலும் 3% உள் ஒதுக்கீடு அருந்ததியர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1% இடஒதுக்கீடு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதிலும் உள் ஒதுக்கீடாக 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கொடுக்கப்படும். துணைநிலை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இரண்டாம் முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கப்படும். செப்டம்பர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை பொறியியல் பிரிவிலும் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

Friday, September 09, 2022

September 09, 2022

பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின்கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை எதிா்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிா்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமா்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீதத்தை பெண் விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளா் தோ்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது.

இது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது. இதே நடைமுறைப்படி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப் பிரிவையும், பிறகு சமூகரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூா்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனா். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிா்காலத்தில் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி , வழக்குகளை முடித்து வைத்தனா்.

Total Pageviews

Search This Blog