Breaking

Showing posts with label confrence. Show all posts
Showing posts with label confrence. Show all posts

Wednesday, August 31, 2022

August 31, 2022

துணை வேந்தர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

''மாநில அரசின் கொள்கைகளை பின்பற்றியே, துணை வேந்தர்களும், பல்கலைகளும் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 22 பல்கலைகளின் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கம், முதல்வர் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. ரூ.3,000 கோடிமுதல்வர் பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 22 பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக அரசு ஆண்டுதோறும், 3,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், 27.1 சதவீதம். அதில் தமிழகத்தின் பங்கு, 51.4 சதவீதம். தேசிய தரவரிசையில் தமிழக நிறுவனங்கள், 16 சதவீதம் இடம் பெற்றுள்ளன; இந்த நிலை மேலும் உயர வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற திறனை வளர்க்கும், ஒருங்கிணைந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

இதற்கு ஏற்ற, ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.உலகத் தரத்துக்கு தமிழக பட்டப் படிப்புகளை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஆண்டுதோறும், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்களிடம் பெறப்படும்.

மேலும், 'முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்' துவங்கப்படும். மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தி, இதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, பல்கலைகள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனையுள்ள சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், பல்கலைகள் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணைய பரிந்துரைப்படி, துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இது, மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை.எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில், பல்கலைகள் செயல்பட வேண்டும். துணை வேந்தர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும்.

கல்வியை அன்னியப்படுத்தும் அத்தனையையும் எதிர்க்க வேண்டும்.புதிய பாடங்கள்எனவே தான், 'நீட்' தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கிறோம். மாநில கல்வி கொள்கை அமைக்க, குழு அமைத்துள்ளோம். கல்லுாரிகளில் புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்; புதிய பட்டப் படிப்புகளை கொண்டு வாருங்கள், இந்த ஆட்சி காலத்தை உயர் கல்வியின் பொற்காலமாக திகழ வைப்பது துணை வேந்தர்களின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.

Tuesday, August 30, 2022

August 30, 2022

சென்னையில் செப். 10ம் தேதி 5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

Chennai in Sep. Conference of 5 lakh teachers on 10th: Chief Minister M.K.Stalin will attend

புதுக்கோட்டையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிக ளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங் கேற்ற அமைப்பின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப் பாளருமான சண்முகநா தன் அளித்த பேட்டி:

பள்ளி கல்வித்துறை யில் ஆணையர் என்ற பொறுப்பு, ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப டுத்தி உள்ளது. ஆணைய

ரின் செயல்பாடு தான் தீவுத்திடலில் நடக்கிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அந்த பதவியை ஒழிக்க வேண் டும் என்பது தான் எங்க ளின் கோரிக்கை. அதை நிச்சயம் முதல்வர் செய் வார் என்ற நம்பிக்கை எங் களுக்கு உள்ளது.

இதில் தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்கிறார். செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப் பின் முக்கிய கோரிக்கைக ளான பழைய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு ணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்று நம்பு கிறோம். இவ்வாறு அவர்

செப்டம்பர் 10ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் பங் கேற்கும் வாழ்வாதார நம் பிக்கை மாநாடுசென்னை கூறினார்.

Monday, August 29, 2022

August 29, 2022

பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் அமைச்சா்கள் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவலுக்குபின் அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. எனினும், ஆசிரியா் பணிநியமனம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு நிதி விடுவிப்பில் தொடா் தாமதம் நிலவிவருகிறது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ந.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.

இந்த கூட்டத்தில் பள்ளிகளில் பழுதடைந்த வகுப்பறைகளுக்கு பதில் 2,500 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது, மாதிரிப் பள்ளிகளில் தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்குவது, மடிக்கணினி, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியா் பணியிடங்களை உருவாக்குவது, தகைசால் பள்ளிகளுக்கு தேவைப்படும் ரூ.171 கோடி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் மாணவா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

Thursday, August 25, 2022

August 25, 2022

சென்னையில் செப்.10-இல் 'ஜாக்டோ ஜியோ' மாநாடு: முதல்வர் பங்கேற்பு

'ஜாக்டோ ஜியோ' அமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 10 இல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் முந் தைய ஆட்சியின்போது கோரிக்கை களை வலியுறுத்தி பல போராட் டங்களை நடத்தியபோதும், எங்க ளது மனுவைக் கூட பெறவில்லை.

தற்போதைய திமுக அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கை கள் தொடர்பாக 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. எங்க ளது கோரிக்கை மனுவையும் முதல் வரிடம் வழங்கியுள்ளோம்.

முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளுக்காக போராட் டம் நடத்தியபோது, குறைந்தபட் சம் பேச்சுவார்த்தை கூட நடத்த வில்லை. அதனால் போராட்டங் களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் 'ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதி அளித்திருக்கிறார்.

'ஜாக்டோ ஜியோ' சார்பில் சென் னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி மாநாடு நடத்தவுள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்றார்.

'ஜாக்டோ - ஜியோ' மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க. நீதி ராஜா, வெ. பாபு பிரேம்குமார், உயர்மட்டக்குழு உறுப்பினர் இரா. தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.

Total Pageviews

Search This Blog