Breaking

Showing posts with label Naturopathy. Show all posts
Showing posts with label Naturopathy. Show all posts

Friday, September 15, 2023

September 15, 2023

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில், 125 இடங்கள் காலி!

யோகா மருத்துவம்: 125 இடங்கள் காலி

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில், 125 இடங்கள் காலியாக உள்ளன.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 993 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.

இப்படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இதில், 125 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.

இதில், நிரம்பாமல் போகும் இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 125 இடங்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புக்கு, 'நீட்' தேர்வு இல்லாததால், பிளஸ் 2 படித்த மாணவர்கள் சேர முடியும் என, தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, February 13, 2023

February 13, 2023

யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு



யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு Yoga-naturopathy: Live consultation tomorrow

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பில் சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.

இதுவரை அந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்காதவா்கள் வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 413 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி பிற்பகலில் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. முதல் சுற்று மற்றும் சிறப்பு சுற்று கலந்தாய்வுகளில் இடங்கள் பெற்றவா்கள் இதில் பங்கேற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 02, 2023

February 02, 2023

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு



What is yoga and Naturopathy?
Is BNYS possible without NEET?
Is BNYS called a doctor?
Is BNYS a good course?
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு Yoga - Naturopathy Course: Special Consultation Date Notification

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: பிப்ரவரி 7-இல் சிறப்பு கலந்தாய்வு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள், அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் உள்ளவா்கள் காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 421 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்களும், இதில் பங்கேற்கலாம் என்றும், தற்போது உள்ள காலி இடங்களில் தகுதியின் அடிப்படையில் சோ்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

Total Pageviews

Search This Blog