Breaking

Showing posts with label GOVT EMPLOYEE. Show all posts
Showing posts with label GOVT EMPLOYEE. Show all posts

Monday, August 15, 2022

August 15, 2022

சுதந்திர தினத்தில் அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி, 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்

- முதலமைச்சர்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை இன்று முதல் 18,000-இல் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tuesday, June 28, 2022

June 28, 2022

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் முறை: அரசாணை வெளியீடு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் முறை: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டநிலையில் வெயிட்டேஜ் கணக்கீட்டுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 56 வயதில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 57 வயதில் ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 19, 2022

March 19, 2022

தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: ஊழியர் சங்கம் கருத்து

“தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தந்துள்ளது” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக அரசின் 2022- -23 பட்ஜெட்டில் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது அரசு ஊழியர்கள் தான். ஆனால் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையும் படிக்க | ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பட்ஜெட்டில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப் படும் என அறிவித்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரானாவின் போது முடக்கப்பட்ட சரண்டர், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் 'அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்' என முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார். அந்த மனநிலையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அவர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது, என்றார்.

Saturday, March 05, 2022

March 05, 2022

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு மார்ச் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித் துள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஏப்.9, 10-ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்.23-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு மற்றும் இளநிலை தட்டச்சு (ஆங்கிலம் அல்லது தமிழ்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் தனித்தேர்வராகவோ அல்லது ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பயிலகத்தின் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம் ரூ.530-ஐ ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.

கடந்த 2021-LD ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி ஏற்கெனவே ஆன்லைனில் விண்ணப்பித்த தேர்வர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. முன்பு தேர்வுக்கட்டணம் செலுத்திய விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் உரிய தகவல்களுடன் குறிப்பிட வேண்டும். ஆன்லைனில் (www.tndtegteonline.in) விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 16-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மார்ச் 19-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
March 05, 2022

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை- -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (01.03.2022)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை- -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (01.03.2022)

Wednesday, February 23, 2022

February 23, 2022

பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - மாவட்டந்தோறும் நடைமுறைப்படுத்தும் பரவலாக்கப்பட்ட அடிப்படை பயிற்சி - ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்கள், கணக்கு அலுவலர்கள், உதவி இயக்குநர்களை விரிவுரையாளர்களாக நியமிக்க போதிய அலுவலர்கள் கிடைக்கபெறாதது - கீழ்நிலை அலுவலர்களை கொண்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

Monday, February 21, 2022

February 21, 2022

அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்?

அமைப்பு சார்ந்த துறைகளில், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத ஊதியம் பெறுவோருக்கு என, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, தொழிலாளர் சேமநல நிதியமான, இ.பி.எப்.ஓ., பரிசீலித்து வருகிறது

இதையும் படிக்க | ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022

தற்போது, அமைப்பு சார்ந்த துறைகளில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை மாத அடிப்படை ஊதியம் பெறுவோரிடம், தொழிலாளர் சேம நல நிதியத்தின் ஓய்வூதிய திட்டத்திற்காக, 8.33 சதவீத தொகைபிடித்தம் செய்யப்படுகிறது.அதே சமயம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத அடிப்படை ஊதியம் பெறுவோரும், 15 ஆயிரம் ரூபாய்க்கான 8.33 சதவீத தொகையைத் தான் தொழிலாளர் சேம நல நிதியத்திற்கு தர வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப, கூடுதலாக சேம நல நிதியத்தில் சேமித்து, அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.இது குறித்து, தொழிலாளர் சேமநல நிதியத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:தற்போது, 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை ஊதியம் பெறுவோர், கட்டாயம் தொழிலாளர் சேமநல நிதியத்தில், மாதம் 8.33 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.

இந்த வரம்பை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, அதிக ஊதியம் பெறுவோரின் நீண்ட கால கோரிக்கை. இதன் வாயிலாக, தொழிலாளர் சேமநல நிதியத்திற்கு, மாதம் அதிக சந்தா செலுத்தி, ஓய்வூதிய பலன்களை கூடுதலாகப் பெறலாம்.இது குறித்து, அசாமில் மார்ச் 11ல் நடக்க உள்ள தொழிலாளர் சேமநல நிதியத்தின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க | 133 இளநிலை பொறியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்று கடைசி

இக்கூட்டத்தில், ஓய்வூதியப் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட துணைக் குழுவும் அதன் அறிக்கையை அளிக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, உயர் ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, February 05, 2022

February 05, 2022

துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter

துறைத்தேர்வு எழுத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி ( OD ) உண்டா? RTI Letter

Department Exam Special Permission ( OD ) மனுவில் தாங்கள் கோரியுள்ள துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு optional or obligatory எழுத சிறப்பு அனுமதி அளிப்பது குறித்து , ' தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 ( 6 ) ( b ) ( ii ) - ல் உள்ளது. இவ்விதியின்படி தேர்வுக்கு செல்லும் நாளை பணிக்காலமாக கருதலாம். இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் கானலாம்.

மேலும் NTSE , NMMS போன்ற பிற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க அடிப்படை விதிகளில் வழிவகையில்லை

Thursday, February 03, 2022

February 03, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பள்ளி ஆசிரியர் கள் மற்றும் பணியாளர்கள் யாரும் வாக்கு சேகரிப் பில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்பட் டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறி வுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட் டமாக நடைபெற உள் ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறி வித்து வருகின்றன. அவ் வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர். ஆனால் வேட்பா ளர்களுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியர்கள் மற் றும் கல்வித்துறை பணி யாளர்கள் யாரும் வாக்கு யாளர்கள் யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூ. டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tuesday, February 01, 2022

February 01, 2022

அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:

மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சமூக காப்பீட்டு பயன்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநில அரசு பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பிடித்தம் 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். புதிய சலுகை மூலம் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களும் பயன்பெற முடியும்.

Monday, January 31, 2022

January 31, 2022

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

RBI Serverல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்னை சீராகும் என்று Treasury தகவல்கள் தெரிவிக்கின்றன!

RBI இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தடங்கல் காரணமாக இம் மாத ஊதியம் மாலைக்குள் அனைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தமிழக முழுவதும் ஊதியம் இன்று தாமதமாகும்.

மாலை வரவு வைக்கப்படும்.

Sunday, January 30, 2022

January 30, 2022

தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி

தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் மூன்று கட்டமாக, பயிற்சி வகுப்புகள் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும், முதல் கட்ட பயிற்சி வகுப்பை, நாளை நடத்த வேண்டும்.

பிப்., 9ம் தேதி, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்., 18ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தேர்தல் பணியாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ள, மென்பொருள் உதவி யுடன் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Wednesday, January 12, 2022

January 12, 2022

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - CM CELL Reply!

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்!

Covid Positive Leave - CM Cell Reply - Download here...

Friday, January 07, 2022

January 07, 2022

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்தி இம்மாநில முதல்வர் உத்தரவு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog