Breaking

Showing posts with label WhatsApp accounts. Show all posts
Showing posts with label WhatsApp accounts. Show all posts

Monday, January 29, 2024

January 29, 2024

WhatsAppல் சூப்பர் அப்டேட் அறிமுகம்... பயனாளர்கள் குஷி.



வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட் அறிமுகம்... பயனாளர்கள் குஷி.

ஃபோட்டோ, வீடியோ, ஆவணங்கள் போன்றவற்றை நம்முடைய நண்பர்கள், குடும்ப உறவுகள், அலுவலக ஊழியர்கள் போன்றோருக்கு பகிர்ந்து கொள்ள நாம் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாக நாம் ப்ளூடூத் வசதியை பயன்படுத்தி வந்தோம். இவ்வாறு ப்ளூடூத் மூலமாக அனுப்பி வைக்கும்போது நீண்ட நேரம் பிடித்தது. இதனால் ஷேர் இட், ஷேர் மீ போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினோம்.

அதில் எவ்வளவு பெரிய ஃபைல் ஆக இருந்தாலும் நொடிப் பொழுதில் நமக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால், ஷேர் இட், ஷேர் மீ போல எண்ணற்ற ஷேரிங் ஆப்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு செயலியை பயன்படுத்தி வந்ததால், அவர்களுடன் நாம் இணைக்க முற்படும்போது நாமும் புதிய, புதிய செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப் மூலமாகவே ஆவணங்களை அனுப்பி வைக்கத் தொடங்கினர்.

இன்டர்நெட் மூலமாக இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதே சமயம், வாட்ஸ்அப்பில் பெரிய ஃபைல்களை அனுப்பி வைக்க முடியாது என்றொரு குறை இருந்தது. அதற்கும் கூட கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.

அதன்படி வாட்ஸ்அப்பில் 2 ஜிபி வரையிலான ஃபைல்களையும் கூட தங்கு தடையின்றி அனுப்பி வைக்க முடிந்தது.

ஆனால், இதிலும் கூட நம்முடைய டேட்டா காலியாகி விடுகிறது என்றொரு குறை மக்கள் மனதில் இருக்கிறது. மேலும் பெரிய ஃபைல் என்றால் அதன் அப்லோடிங் நேரம் அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தான், அருகாமையில் இருக்கும் நபர்களிடம் வீடியோ மற்றும் ஃபோட்டோ போன்ற ஃபைல்களை நேரடியாக அனுப்பி வைக்கும் வசதியை செயல்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்தப் புதிய வசதியை பயன்படுத்துவதற்கு, வாட்ஸ்அப் செயலியில் புதிய ஆப்சன் ஒன்று இடம்பெறும் என்று தெரிகிறது.

அங்கு சென்று இரு தரப்பு யூசர்கள் தங்களுக்கிடையே ஆவணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

அதேசமயம், வாட்ஸ்அப் சேட்டிங்கில் உள்ளதைப் போல இதற்கும் எண்டு-டூ-எண்டு பாதுகாப்பு வசதி உண்டு.

ஆண்டிராய்டு ஃபோன்களில் ஏற்கனவே நியர்பை என்ற செயலியும், ஆப்பிள் ஐஃபோன்களில் ஏர் டிராப் என்ற செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், வாட்ஸ்அப்பில் இடம்பெறும் புதிய அம்சமானது பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.

Saturday, January 20, 2024

January 20, 2024

WhatsApp New Updates



WhatsApp Update:

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை போன்று, சேனலிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா.

அதுமட்டுமன்றி சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களை தருவதால் வாட்ஸ்அப் பயனர்கள் மகிழ்ச்சி! வாட்ஸ்அப்பில் (Offline) புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்!

ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று 'ஷேர் ஃபைல்ஸ்' என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்து கொள்ளலாம்.

பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும்.

இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டா தகவல்.

புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களை ஈர்த்து வருகிறது வாட்ஸ்அப்.

Sunday, September 24, 2023

September 24, 2023

WhatsApp Group Call New Update - புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்!



இனி குரூப் கால்களில் 31 நபர்கள் பங்கேற்கலாம்.

புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்...


குரூப் காலிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், வாட்ஸ்அப் தற்போது 31 நபர்களுடன் குரூப் கால்களை இனி செய்யலாம் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

WABteaInfo வழங்கிய அறிக்கையின்படி, இனி 31 நபர்களுடன் குரூப் கால்களை செய்யலாம்

இதற்கு முன்பு வாட்ஸ்சப்பில் 15 நபர்கள் கொண்ட குரூப் கால்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டத்தில் 7 நபர்கள் மட்டுமே குரூப் கால்களில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை 31 ஆக உயர்த்தி உள்ளது.

Thursday, August 24, 2023

August 24, 2023

பெயர் இல்லாமலேயே Whatsapp Group Create செய்யலாம் – வெளியான புதிய அப்டேட்!

பெயர் இல்லாமலேயே Whatsapp Group Create செய்யலாம் – வெளியான புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்பில் பெயர் இல்லாமலேயே குரூப் கிரியேட் செய்யும்படியான புதிய அப்டேட்டை Whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Whatsapp:

Whatsapp நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக வகையில் ஏகப்பட்ட அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கியபடி இருந்து வருகிறது. அந்த வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்டிக்கர்களை உருவாக்கம் செய்வது, பயனர்களுக்கு உயர்தர HD புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வது, வீடியோ கால் மூலமாகவே ஸ்கிரீன் ஷேர் செய்வது, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்வது என தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்டுகளை வழங்கியபடி இருக்கிறது. இதனை தொடர்ந்து, இமெயில் மூலமாக whatsapp அக்கவுண்டை லாகின் செய்யும் வசதியையும் whatsapp அறிமுகம் செய்திருக்கிறது, இந்நிலையில், புதிதாக whatsapp குரூப் கிரியேட் செய்யும்போது எந்தவித பெயரும் இல்லாமலேயே உருவாக்கம் செய்யும்படியான அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், whatsapp குரூப்பில் நீங்கள் Save செய்துள்ள நண்பர்களின் பெயர் காண்பிக்கப்படாது.

அதாவது, whatsapp குரூப்பில் நண்பர்களின் மொபைல் எண் மட்டுமே தெரியும்படியான அம்சமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் தற்போது whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டால் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Wednesday, April 19, 2023

April 19, 2023

3 செக்யூரிட்டி அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்; ஒரு ஈ கூட நுழைய முடியாது!



3 செக்யூரிட்டி அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்; ஒரு ஈ கூட நுழைய முடியாது!

வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக 3 பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

பயனர்களின் பிரைவஸி (User's Privacy) மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம், நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. முன்னதாக ஸ்டேட்டஸ் பாதுகாப்பு குறித்த அப்டேட்டை வழங்கியது. அதன்பின் சமீபத்தில் க்ரூப் அட்மின்களுக்கான அப்டேட்டை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து தற்போது பயனர்களின் ப்ரைவஸி (User's Privacy) மற்றும் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த புதிதாக 3 பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

அக்கவுண்ட் ப்ரொடெக்ட், ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ், டிவைஸ் வெரிஃபிக்கேஷன் என மூன்று பாதுகாப்பு அப்டேட்களை வழங்கியுள்ளது.

அதில் முதலாவதாக அக்கவுண்ட் ப்ரொடெக்ட் (Account Protect) அம்சம், ஒரு புதிய டிவைஸ்க்கு மாற முயற்சிப்பது உண்மையிலேயே நீங்கள்தானா என்பதை உறுதி செய்ய இந்த அம்சம் செயல்படுகிறது.

அதாவது, உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வேறொரு டிவைஸில் யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அது குறித்த எச்சரிக்கை உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் அதை மறுக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட அங்கீகரிக்கப்படாத முயற்சி தடுத்து. அடுத்ததாக, ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ் (Automatic security codes) அம்சத்தை பொறுத்தவரை, வாட்ஸ்அப்பிற்குள் நடக்கும் உங்களுடைய செயல்பாடுகள் பாதுகாப்பான கனெக்ஷனின் கீழ் நடக்கிறதா என்பதை 'டக்கென்று' சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை அணுக, என்கிரிப்ஷன் டேப்பின் (Encryption tab) கீழ் உள்ள காண்டாக்ட் இன்ஃபர்மேஷன் (Contact's info) என்கிற அம்சத்தை கிளிக் செய்யவும்.

உடனே உங்களுடைய பெர்சனல் சாட் (Personal Chat) ஆனது செக்யூர்ட் (Secured) ஆக உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்கலாம்.

அதேபோல் மூன்றாவது அப்டேட்டான, டிவைஸ் வெரிஃபிக்கேஷன் (Device verification) அம்சம் பற்றி பார்க்கும் பொழுது, இது உங்கள் அக்கவுண்ட்டை அங்கீகரிக்க உதவும். இதுதன்னிச்சையாக செயல்படும் இதற்காக நாம் எதுவும் செய்யவேண்டாம்.

இது, உங்கள் அக்கவுண்ட்டை மால்வேர் அட்டாக்கில் இருந்தும் பாதுகாக்கும். அதேபோல், உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்பட்டால் அதுவே சிறப்பான முறையில் அதை மீட்டெடுக்கும்.

Monday, April 03, 2023

April 03, 2023

lock private conversations on WhatsApp - WhatsAppல் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி!



A user can lock their private chat using group info or a chat's contact. Once the chat has been locked it will be added to a list of locked chats. This list will appear separately in the app. The chat will then only be accessible using the user's passcode or fingerprint

WhatsAppல் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி! The facility to lock private conversations on WhatsApp!

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி!

வாட்ஸ்அப் பயனர்கள் குறிப்பிட்ட சில தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டி வைத்துக்கொள்ளும் (Lock) செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சேட் கான்டாக்ட்’ அல்லது ‘குரூப் இன்ஃபோ’வைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது தனிப்பட்ட உரையாடல்களை ‘லாக்’ செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிடும் WAbetainfo இணையத்தளத்தில் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்படி ‘பூட்டு’ போடப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் ‘லாக்டு சேட்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். வாட்ஸ்அப்பில் அப்பட்டியல் தனியாகத் தோன்றும்.

‘பூட்டு’ போடப்பட்ட உரையாடல்களைப் பயனர் தமது விரல்ரேகை அல்லது கடவு எண் (passcode) கொண்டு மட்டுமே பார்க்கலாம். மற்றவர்கள் பார்க்க முடியாது.

ஒருவரின் கைப்பேசியை இன்னொருவர் இரவலாகப் பெறலாம். அப்போது, அவர் அக்கைப்பேசியில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறந்து அதற்குரியவரின் உரையாடல்களைப் பார்க்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ‘லாக் சேட்’ வசதியால் இனி அத்தொல்லை இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

Sunday, February 26, 2023

February 26, 2023

WhatsApp Msg Edit செய்யும்புதிய வசதி - இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!.

தவறுதலாக அனுப்பிய Message! இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!. புதிய வசதியை அப்டேட் செய்யும் வாட்சப்!

ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.

நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது. சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் மெசெஜை டெலிட் ஃபார் மீ அல்லது டெலிட் ஃபார் எவரிஒன் போன்ற தேர்வுகளை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்க முடியும். அதுவும் மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு மணிநேரத்தில் டெலிட் பார் எவரி ஒன் கொடுத்தால் மட்டுமே அந்த மெசெஜை நம்மால் எளிதாக அழிக்கமுடியும்.

வாட்சப் புதிய புதிய அப்டேட்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் ஃஸ்டேட்டஸில் குரல் பதிவுகளை வைக்கும் முறையை வாட்சப் அறிமுகப்படுத்தியது. அதேபோல கணினி அல்லது லேப்டாப்பில் வாட்சப் பயன்படுத்துவோர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை பயன்படுத்தும் முறையை பீட்டா வெர்சன் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒரு கணினியிலோ அல்லது லேப்டாப்பிலோ வாட்சப்பை லாக் அவுட் செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதேபோல நாம் வாட்சப் பயன்படுத்தும் மொபைல் போனில் நெட்வொர்க் அல்லது இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கணிணியில் இருந்தால் போதுமானது. இதனை மல்டி டிவைஸ் பீட்டா வெர்சன் என அழைப்பட்டது. இந்த நிலையில், தற்போது வாட்சப் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதன்படி நாம் ஒரு நபருக்கு தவறுதலாக எழுத்துப் பிழையுடன் பதிவுகள் அனுப்பிவிட்டால் பதறிப் போய் உடனே டெலிட் ஃபார் எவரிஒன் செய்யத் தேவையில்லை. மாறாக நாம் அனுப்பிய பதிவை எடிட் செய்து அதில் இருக்கும் எழுத்துப் பிழைகளை சரிசெய்யவோ அல்லது அந்த சில வார்த்தைகளை நீக்கவோ, சேர்க்கவோ செய்து கொள்ளலாம். நாம் பதிவை அனுப்பிய 15நிமிடங்களுக்குள் இவற்றை எடிட் செய்யும்படியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மொபைலில் வாட்சப் பயன்படுத்துவோராக இருந்தால் இந்த வசதியை பெற காத்திருக்க வேண்டும். காரணம் என்னவெனில் தற்போதைய அப்டேட் பீட்டா வெர்சன் வாட்சப்பை இணையதளத்தில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சேவை மொபைலில் கொண்டு வருவதற்கான பணிகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, February 07, 2023

February 07, 2023

WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம்



WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம் 30 second voice recording can be put in status on WhatsApp - new feature introduced

வாட்ஸ்அப்பில் 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.. புதிய வசதி அறிமுகமாகிறது..

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.

இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர்களுக்கு கூடுதல் வசதியாக, ஸ்டேட்டஸில் வலைதள இணைப்புகளை பகிரும் போது, அதன் உள்ளடக்கத்தின் படமும் அதில் காண்பிக்கும் ‘என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.

அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம்.

Wednesday, November 02, 2022

November 02, 2022

இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் – மெட்டாவின் அதிரடி நடவடிக்கை!

இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் – மெட்டாவின் அதிரடி நடவடிக்கை!

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியானது தீங்கு விளைவிக்கும் நடத்தைகளை தடுக்கும் வகையில் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தடை செய்துள்ளது.

வாட்ஸ்அப்:

சமூக வலைத்தளங்கள் தற்போதைய நவீன உலகில் நமக்கு பெரிதும் பயன்படகூடிய ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் இதனால் சில தீமைகளும் நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள சமூக வலைத்தளங்கள் மாதந்தோறும் பயனர்களின் புகார் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் கணக்குகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. இதனையடுத்து அண்மையில் ட்விட்டர் நிறுவனம் குழந்தைகள் சம்மந்தப்பட்ட பாலியியல் தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் 52,141 ட்விட்டர் கணக்குகளை தடை செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியவர்களின் 26.85 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளை விட செப்டம்பரில் தடை செய்யப்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளின் எண்ணிக்கை 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செப்டம்பரில் பெறப்பட்ட 666 புகார்களில் 23 புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog