pensioners
December 18, 2025
Showing posts with label PENSION. Show all posts
Showing posts with label PENSION. Show all posts
Thursday, December 18, 2025
Wednesday, December 17, 2025
pensioners
December 17, 2025
50வது முறையாக இன்று விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!
Friday, November 14, 2025
Sunday, January 12, 2025
Monday, December 30, 2024
Friday, September 06, 2024
Tuesday, March 19, 2024
Tuesday, March 05, 2024
Tuesday, January 30, 2024
pensioners
January 30, 2024
அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்!
அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்! If a female government employee dies, the child will get a pension instead of the husband!
மத்திய அரசு அறிவிப்பு - அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம்! அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிள்ளையை நியமிக்கலாம்
அரசு ஊழியர்கள் மரணத்துக்கு பிறகு, அவர்களது வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாழ்க்கை துணை மறைந்த பிறகுதான், தகுதியுள்ள ஒரு பிள்ளைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமிக்கலாம். இதுகுறித்து தங்கள் துறைத்தலைவரிடம் அவர்கள் எழுத்துமூலமாக எழுதி தர வேண்டும். பிரதமர் கொள்கை
இதன்மூலம், கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுைம தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரதமர் மோடி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைனராக இருந்தால்..
ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு தகுதியுள்ள பிள்ளை இல்லாவிட்டால், அவருடைய கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். ஒருவேளை அவரது பிள்ளை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில், கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த பிள்ளை, ‘மேஜர்’ ஆன பிறகு, பிள்ளைக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். மரணம் அடைந்த பெண் ஊழியரின் பிள்ளை, தகுதிநிலையை எட்டாவிட்டாலும், பிள்ளைக்கே ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, January 04, 2024
pensioners
January 04, 2024
Amendment to CCS (Pension) Rules, 2021 – Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension amid marital discord: DoPPW Order dated 01.01.2024
Amendment to CCS (Pension) Rules, 2021 – Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension amid marital discord: DoPPW Order dated 01.01.2024
Office Memorandum
Subject: Amendment to CCS (Pension) Rules, 2021 Allowing female Government servants/female Pensioner to nominate her child/children for family pension in precedence to her husband in the event of marital discord leading to filing of divorce proceedings in a Court of Law or filing of a case under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or Indian Penal Code- reg.
The undersigned is directed to state that, as per the provisions of sub-rule (8) and sub-rule (9) of Rule 50 of CCS (Pension) Rules, 2021, if a deceased Government servant or pensioner is survived by a spouse, family pension is first granted to the spouse and the children and other family members become eligible for family pension, on their turn, only after the spouse of the deceased Government servant/pensioner becomes ineligible for family pension or dies.
2. This Department has been receiving a large number of references from Ministries/Departments, seeking advice as to whether a female Government servant/female Pensioner can be allowed to nominate her eligible child/children for family pension in place of her spouse in the event of marital discord leading to filing of divorce proceedings in a Court of Law or filing of a case under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code.
3. The matter has been examined in consultation with Ministry of Women and Child Development. Accordingly, it has been decided that in case divorce proceedings in respect of a female Government servant/female pensioner are pending in a Court of Law, or the female Government servant/female pensioner has filed a case against her husband under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code, such female Government servant/Female Pensioner may make a request for grant of family pension after her death to her eligible child/children, in precedence to her husband and such request may be considered in the following manner: (a) Where, in respect of a female Government servant/female pensioner, divorce proceedings are pending in a competent Court of Law, or the female Government servant/female pensioner has filed a case against her husband under Protection of Women from Domestic Violence Act or Dowry Prohibition Act or under Indian Penal Code, the said female Government servant/female pensioner, may make a request in writing to the concerned Head of Office to the effect that, in the event of her death during the pendency of any of the aforesaid proceedings, family pension may be granted to her eligible child/children in precedence to her spouse; (b)
In the event of the death of the female Government servant/female pensioner, who had made a request under clause (a), during the pendency of any of the aforesaid proceedings, the family pension shall be disbursed in the following manner, namely (i) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower and no child/children is eligible for family pension on the date of death of the female Government servant/female pensioner, family pension shall be payable to the widower.
(ii) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower with a minor child/children or a child/children suffering from disorder or disability of mind including the mentally retarded, the family pension in respect of the deceased shall be payable to the widower, provided he is the guardian of such child/children and if the widower ceases to be the guardian of such child/children, such family pension shall be payable to the child through the person who is the actual guardian of such child/children. Where the minor child, after attaining the age of majority, remains eligible for family pension, the family pension shall become payable to such child from the date on which he/she attains the age of majority. (iii) Where the deceased female Government servant/female pensioner is survived by a widower with a child/children who has/have attained the age of majority but is or are eligible for family pension, the family pension shall be payable to such child/children.
(iv) After the child/children referred to in clause (ii) and (iii) above cease to be eligible for family pension under Rule 50 of the CCS (Pension) Rules, 2021, family pension shall become payable to other child/children, if any, eligible for family pension.
(v) After all the children cease to be eligible for family pension under Rule 50 of the CCS (Pension) Rules, 2021, family pension shall become payable to the widower till his death or remarriage, whichever is earlier.
4. All Ministries/Departments are requested to bring the contents of this order to the notice of Controller of Accounts/Pay and Accounts Officers and Attached, Subordinate Offices and Autonomous bodies under them.
5. In so far as the persons serving in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued in consultation with Comptroller and Auditor General of India, as mandated under Article 148(5) of the Constitution of India. 6. Formal amendment to Rule 50 of the CCS (Pension) Rules, 2021 will be notified separately.
7. Hindi version will follow.
1. All Central Government Ministries/Departments
2. Department of Expenditure, Ministry of Finance, North Block, New Delhi. 3. C&AG, Bhahadur Shah Zafar Marg, New Delhi.
4. Ministry of Railways, Railway Board, New Delhi. 5. CGA, Department of Expenditure, INA, New Delhi. 6. AD (OL) for Hindi version.
MIC for posting on the website of this Department
Monday, October 09, 2023
Supreme Court orders
October 09, 2023
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!
Pension benefits for government employees within six months - Madras High Court! - அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் மாம்பலம் – கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் டி.வி.எஸ் பெருமாள். இவர் கடந்த 1987 -ம் ஆண்டு பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார்.
இதனால், அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் கேட்டு சப் – கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2004 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2017 -ம் ஆண்டு ஜெயா பெருமாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே ஜெயா இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவரது மகன் பாபு சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலையாரியாக பணியாற்றிய பெருமாள் இறந்த பின்பு, அவரது மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. அதற்குள் அவரும் இறந்து விட்டார்.
எனவே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டும். அதுக்கு தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Friday, September 29, 2023
PENSION
September 29, 2023
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவு - ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஓய்வூதியம், பணிக்கொடை பெறுதல் சார்ந்த செயல்முறைகள்
Teachers Govt Employees Completion - Processes related to one year increment and pension, gratuity - ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவு - ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஓய்வூதியம், பணிக்கொடை பெறுதல் சார்ந்த செயல்முறைகள்
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவுக்கு அடுத்த நாள் அவருடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு எனில் அவருக்கு ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி அவருக்கான ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் தொகுத்து பெறுதல் சார்ந்து செயல்முறைகள்..
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவுக்கு அடுத்த நாள் அவருடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு எனில் அவருக்கு ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி அவருக்கான ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் தொகுத்து பெறுதல் ஆகியவற்றை அரசாணை 311, 98 ஆகிவற்றின் அடிப்படையில் பெற்று வருகிறோம்.
ஆசிரியர்களின் நலன் சார்ந்த எந்த செயலுக்கும். சில அமைச்சுப் பணியாளர்கள் எப்போதும் முட்டுக்கட்டையாக இருப்பதுபோல இது சார்ந்த விடயங்களிலும் பல அலுவலகங்களில் EL closer , half pay leave closer ஆகியவற்றிற்கு இந்த விதி பொருந்தாது என்று முட்டுகட்டைப் போடுகிறார்கள். அரசாணை 311, 98 ஆகியவற்றின்படி EL closer ,half pay leave closer க்கும் ஒரு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதற்கான அரசு அரசு ஆதாரக் கடிதம் கிடைத்தது .
இந்த அரசு கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.தேவைபடுவோர்க்கு பயன்படும்.
Thursday, September 21, 2023
PENSION
September 21, 2023
40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன் வழங்கும் LIC திட்டம் – முழு விவரம் இதோ!
40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன் வழங்கும் LIC திட்டம் – முழு விவரம் இதோ!
மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க LIC சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுத்தி இருக்கிறது. பென்ஷன் திட்டம்
இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஒரு பிரீமியம் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் 40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச வயது 80 ஆண்டுகள் ஆகும். பாலிசியில் செலுத்திய பிரீமியத்தின் முதல் ஆண்டிலிருந்து வருடாந்திரம் அதாவது ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பெற பிரீமியம் செலுத்த வேண்டும். அதிகபட்ச வருடாந்திரத்திற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு மனைவிக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சிறப்பம்சமும் இருக்கிறது.
Tuesday, August 01, 2023
teachers news
August 01, 2023
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணப்பயன்கள் தாமதமாவதாக புகார்
பணப்பயன்கள் தாமதமாவதாக புகார்
'ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணப்பயன்கள் கிடைப்பது தாமதமாகும்' என புகார் எழுந்துள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16நடுநிலை மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு ஓய்வு பெற்றவர்களுக்கு பல மாதங்களாகியும், இதுவரை பணப்பயன் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) சுப்ரமணியம் கூறுகையில்,
''ஓய்வு பெறும் நாளன்றே பணப்பயன்கள் தரவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அனைத்து சான்றுகளும் பெற்று கல்வி அலுவலகத்தில் வழங்கியும், இதுவரை பென்ஷன் கிடைக்கவில்லை.
மார்ச் மாதம் ஓய்வு பெற்றவர் களுக்கும் இதுவரை பென்ஷன் கிடைக்கப் பெறவில்லை.
மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Tuesday, May 16, 2023
Thursday, May 04, 2023
Wednesday, March 08, 2023
PENSION
March 08, 2023
பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு
பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது மத்திய அரசு
மத்திய அரசு ஓய்வூ தியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது.
'மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.
தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் ௧௮ வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.

Monday, November 07, 2022
TAMILNADU
November 07, 2022
ஓய்வூதியர் உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்துக்கு நியமனதாரர்களை நியமிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு
ஓய்வூதியர் உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்துக்கு நியமனதாரர்களை நியமிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும் போதே குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் நிதி(ஓய்வூதியம்) துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பேரில், அவரின் ஓய்வூதியத்திலிருந்து சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவரது துணைவர் உயிரோடு இல்லாத போது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும்.
மேலும், துணைவர் உயிரோடு இல்லாமலிருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின் வாரிசுதாரர்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும். ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்தத் தொகையினை பெறுவதற்குரிய நியமனதாரரை, ஓய்வூதியரோ அல்லது அவரது துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 12, 2022
PENSION
October 12, 2022
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் – நியமனதாரரை (Nominee) நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள்!
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் – நியமனதாரரை (Nominee) நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள்!
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரரின் விருப்பத்தின்பேரில் , அவரின் ஓய்வூதியத்திலிருந்து சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு , ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவரது துணைவர் உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும் . மேலும் , துணைவர் உயிரோடு இல்லாமலிருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் , ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின் வாரிசுதாரர்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.
Govt. Letter No.30948 - Download here
Sunday, September 04, 2022
pension scheme
September 04, 2022
ரூ.1000 கருணை பென்ஷன்: பட்டியல் தயாரிக்க உத்தரவு
ரூ.1000 கருணை பென்ஷன்: பட்டியல் தயாரிக்க பதிவாளர் உத்தரவு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது ஓய்வு பெறவுள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிதி ஆதாரமில்லாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று உயிருடன் உள்ள பணியாளர்களுக்கு மாதாந்திர கருணை ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள 8,752 பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏதுவாக அரசாணையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை பரிசீலித்து தகுதி பெறாத நபர்களின் விபரங்களை நீக்கி, நிபந்தனைகளின் படி தனியார் கருணை ஓய்வூதியம் பெற தகுதியானவர் என உறுதி மொழி சான்றிதழை தொடர்புடைய சங்கங்களுக்கு அளிக்க வேண்டும்.
அதனை பரிசீலித்து உறுதிமொழி சான்றிதழை சரக துணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை அவர்கள் பரிசீலித்து இணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை சரிபார்த்து மண்டல இணைபதிவாளர்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சங்க பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்களும், விருப்ப ஓய்வில் சென்றவர்களும் கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் கூறியுள்ளார்.