Breaking

Showing posts with label TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS - 2022. Show all posts
Showing posts with label TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS - 2022. Show all posts

Friday, July 08, 2022

July 08, 2022

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 5 நாள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
July 08, 2022

அரசு கல்லுாரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், https://tngasa.in/ என்ற இணையதளத்தில், கடந்த 22ம் தேதி பதிவு துவங்கியது. விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை, 3.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிப்பதா அல்லது மாணவர் சேர்க்கை பணிகளை துவங்குவதா என்பது குறித்து, இன்று உயர்கல்வி துறை ஆலோசனை நடத்த உள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், முதன்மை செயலர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் முடிவில், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, July 07, 2022

July 07, 2022

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகம் முழுதும் 163 அரசு கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஜூன் 20ல் வெளியான நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலையில் சேர விரும்புவோர், https://tngasa.in/# என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். நேற்று வரை 3.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 2.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, இன்னும் பிளஸ் 2 தேர்வு முடிவு வராததால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் தரப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Wednesday, June 22, 2022

June 22, 2022

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை - 2022 TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS - 2022 - பதிவு செய்யும் முறை - PDF

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை - 2022 TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS - 2022 - பதிவு செய்யும் முறை - PDF

Total Pageviews

Search This Blog