Breaking

Showing posts with label SCIENCE. Show all posts
Showing posts with label SCIENCE. Show all posts

Tuesday, March 03, 2026

March 03, 2026

10th Science Public Exam - Expected Blue Print Detailed Analysis



10th Science Public Exam - Expected Blue Print Detailed Analysis

10th Science Public Exam 2026 - Expected Blue Print Detailed Analysis - Mr M.Abbs Manthiri

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD 10th Science Public Exam - Expected Blue Print Detailed Analysis

Wednesday, November 29, 2023

November 29, 2023

SSLC Science 6 Years Public Questions One Marks Analysis

SSLC SCIENCE | 6 PUBLIC QUESTIONS ONE MARKS ANALYSIS



இதுவரை நடந்த 6 அரசு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட 1 மதிப்பெண் வினாக்கள் குறித்த பகுப்பாய்வு:

1) இயக்க விதிகள் பாடத்தில் இருந்து ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் என்ற வினா மட்டுமே (மூன்று வினாத்தாள்கள்)கேட்கப்பட்டுள்ளது. இந்த அலகில் வேறு வினாக்கள் கேட்கப் படவில்லை.

2) அலகு *3,13 மற்றும் 23* ஆகியவற்றில் ஒரு 1 மதிப்பெண் வினா கூட கேட்கப்படவில்லை.

3) BB வினாக்கள் அலகு 12 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 5BB+1CR)

4) CREATIVE வினாக்கள் அலகு 14 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 1BB+5CR)

5) அலகு 5, 10 லிருந்து 1 வினா கேட்கப்பட்டுள்ளது.

6) 6 அரசு பொதுத்தேர்வுகளில் 47 BB + 25 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.

7) அதிக பட்சமாக செப் 2020 வினாத்தாளில் 6 BB + 6 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.

8) அலகு 22 இல் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுமே CREATIVE வினாக்கள்.

9) creative வினாக்கள் புத்தக கோடிட்ட வினாக்கள் மற்றும் மேலும் அறிந்து கொள்வோம், மின்னோட்டவியல் பாடத்தில் இருந்து தீர்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

நன்றி

ப.லோகநாதன்

பட்டதாரி ஆசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி,

கெட்டுஅள்ளி.

Tuesday, February 28, 2023

February 28, 2023

தேசிய அறிவியல் நாள் -2023 | இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும்

தேசிய அறிவியல் நாள் -2023 | இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தேசிய அறிவியல் நாள் -2023

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28-ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம். நம்முடைய வாழ்க்கையில் அறிவியலும், அறிவியலாளர்களும், அறிவியல் முன்னேற்றங்களும் வழங்கிவரும் முக்கியத்துவமிக்க பங்களிப்பை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக இந்த நாளை அனுசரிக்கிறோம். 

                                                                                                                                                                                                           ’அறிவியல்’ என்பதை சுருக்கமாக நாம் விவரிக்க முற்பட்டால், அது ஏதேனும் ஓர் உண்மையைப் பற்றிய புலனாய்வுக்காக பரிசோதனைரீதியான அவதானிப்புகளின் அடிப்படையில் அமைந்த முறைப்படுத்தப்பட்ட அறிவு என்று சொல்லலாம். இந்தச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு முறை சொன்னார் : “ அறிவியல் என்பது கெட்டிதட்டிப்போன வறட்டுத் தத்துவங்களைக் கொண்ட மதம் அல்ல; மாறாக, தவறுகளைத் திருத்திக்கொண்டும், புத்தாக்கங்களை முன்வைத்துக் கொண்டும் செல்லும் முன்னேற்றமாகும்.”

                                                                                                                                                                                            அந்தக் கூற்று மிகச்சரியானது. இந்த ஒட்டுமொத்த உலகமே அறிவியல் என்னும் மிக வலிமையான ஒரு கயிற்றினால் பிணைக்கபட்டுள்ளது என்று நாம் கட்டாயமாகக் கூறமுடியும்.  

   இன்றைய சூழலில் நாம் அறிந்திருப்பது போல, அறிவியலும், பயன்பாட்டு அறிவியலும் படிப்படியாக மேம்பட்டு வந்திருக்கின்றன. அது நமது வாழ்க்கையை மிக எளிதாகவும்,மேம்பட்ட விதத்திலும் நடத்திச்செல்ல உதவுகிறது. பிரச்சினைகளை அறிவியல் கண்ணோட்டத்துடனும், அறிவியல் மனப்பான்மையுடனும் அணுகித்தீர்வு காண்பதற்கு ஒரு திசைவழியைக் காட்டுகிறது. 

                                                                                  எனவே, நாம் அறிவியலைத் தவிர்க்கவே முடியாது. அறிவியல் நமக்கு இவ்வளவு காலமும் வழங்கியிருப்பவை அனைத்தையும் பற்றிய எல்லா நினைவுகளையும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வதற்குப் பயன்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. தேசிய அறிவியல் நாளைப்பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

                                                                                                                                                                                       *தேசிய அறிவியல் நாளின் வரலாறு :* 

   இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். பிப்ரவரி-28 ஆம் நாளன்று ஏன் அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது? எப்போது இது முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது?

  இங்கு மேற்கண்ட ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்:

    சர்.சி.வி.ராமன் எனப்பிரபலமாக அறியப்பட்டுள்ள சர். சந்திரசேகர் வெங்கட்ராமன், இந்தியாவின் ஆகப்புகழ் பெற்ற, தன்னிகரற்ற அறிவியலாளராவார்.’ராமன் விளைவு’ என அறியப்படும் தனது ஆய்வுக்கோட்பாட்டைப் பரிசோதனைகளின் மூலம் நிறுவி அதை உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாள்,1928-ஆம் ஆண்டு,பிப்ரவரி,28 ஆகும். 

  அவர் நிகழ்த்தியது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் உலகம் முழுவதிலும் அறியப்பட்டவராக ஆனார். ‘ராமன் விளைவு’ என்ற இந்தக்கண்டுபிடிப்பு காரணமாக, அவர் கவுரவிக்கப்பட்டார்; விருதுகள் வழங்கப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற ‘நோபல் பரிசு’ இயற்பியலில் 1930-ஆம் ஆண்டு ராமனுக்கு வழங்கப்பட்டது. இயற்பியலில் இந்தப் பரிசைப்பெற்ற முதல் ஆசிய அறிவியலாளர், சர்.சி.வி.ராமன்தான்.

                                                                                                                                                                                                      இந்தியாவின் மிக உயரிய விருதான ’பாரத ரத்னா’, இவருக்கு 1954-இல் வழங்கப்பட்டது. அதோடு 1956-ஆம் ஆண்டு உலக அளவில் மதிக்கப்படும் மாபெரும் ‘லெனின் சமாதானப் பரிசு’ ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

                                                                                                                                                                          சர்.சி.வி.ராமனின் ‘ராமன் விளைவு’ என்னும் வரலாற்றுச்சிறப்பு மிக்க மாபெரும் கண்டுபிடிப்பைக் கொண்டாடும் விதத்தில், பிப்ரவரி-28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற முன்மொழிவை நமது மத்திய அரசுக்கு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான தேசியக்கவுன்சில் சமர்ப்பித்தது. அதன்பிறகு, அவர்களுடைய மேற்கண்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு 1986-இல் அனுமதியளித்தது. என்சிஎஸ்டிசி-யின் முன்மொழிவுப்படியே தேசிய அறிவியல் நாளைக் கொண்டாடும் அறிவிப்பையும் வெளியிட்டது. 

                                                                                                                                                                      1987-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று நாடு முழுவதும் முதன் முறையாகத் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது.  

  இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும் :

 தேசிய அறிவியல் நாளின் முதன்மையான நோக்கம், நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வூட்டுவதே. இதோடு கூடுதலாக, குழந்தைகள் அல்லது மாணவர்கள் தமது எதிர்காலப் பணிகளுக்கான பாடமாக அறிவியலைத் தேர்வு செய்வதற்கு உத்வேகம் ஊட்டுவதுமாகும்.

     நமது நாட்டை முற்போக்கான திசைவழியில் இட்டுச்செல்லப்போகும் எதிர்காலச் சந்ததியினர் அவர்கள்தாம் என்பதால் அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. அறிவியலின்பால் தாகங்கொண்டவர்களாக இருக்கும் மாணவர்களைக் கவர்ந்து ஈர்க்கவும், உத்வேகமூட்டவும் அறிவியல் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. 

     இதே போல, நமது எதிர்காலத் தலைமுறையினர் தங்களுடைய அசாதரணமான முயற்சிகளால் அறிவியல் களத்தில் மகோன்னதமான வெற்றிகளை ஈட்டக்கூடியவர்களாவர். ஆம், அது நம் நாட்டின் பெருமிதமாக அமையும்.

   புத்தாக்கத் திறன் வாய்ந்த அறிவியலாளர்கள் அல்லது மாணவர்களின் புதிய புத்தாக்கப் படைப்புகளுக்கு ஆதரவளிப்பதும்,உத்வேகமூட்டுவதும் இந்தக் கொண்டாட்டத்தின் குறிக்கோளாகும். இந்தக்கொண்டாட்டத்தின் மிக முக்கியக்குறிக்கோள் என்பது ஒட்டு மொத்த உலகின் அறிவியல் சாதனைகளையும், அறிவியலின் முக்கியத்துவத்தையும் பற்றி பொதுவெளியில் அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் செய்வதுதான். 

                                                                                                                                                                       இந்த நாளின் மையமான கருக்கள் :

    வெவ்வேறுவிதமான தேசிய, சர்வதேசிய நிகழ்வுகளுக்காக வெவ்வேறுபட்ட மையக்கருக்களைத் தேடுவதில் நீங்கள் ஆர்வங் கொண்டவராக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவேதான்,பின்வரும் தகவல் வரைபடத்தின் மூலம், சமீபத்திய வருடங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் மையக்கருக்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். இனி, நீங்கள் தேசிய அறிவியல் நாளை பிப்ரவரி 28 அன்று உத்வேகத்துடன் கொண்டாடத் தயாராகலாம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். 

National Science Day Theme

1999 was “Our Changing Earth”.

2000 was “Recreating Interest in Basic Science”.

2001 was “Information Technology for Science Education”.

2002 was “Wealth from Waste”.

2003 was “50 years of DNA & 25 years of IVF- in-vitro fertilisation (IVF) – The Blue print of Life”.

The theme of the year 2004 was “Encouraging Scientific Awareness in Community”.

2005 was “Celebrating Physics”.

2006 was “Nurture Nature for our future”.

2007 was “More Crop per Drop”.

2008 was “Understanding the Planet Earth”.

2009 was “Expanding Horizons of Science”.

2010 was “Gender Equity, Science & Technology for Sustainable Development”.

2011 was “Chemistry in Daily Life”.

2012 was “Clean Energy Options and Nuclear Safety”.

2013 was “Genetically Modified Crops and Food Security”.

2014 was “Fostering Scientific Temper”.

2015 was “Science for Nation Building”.

2016 was on "Scientific Issues for Development of the Nation".

2017 was "Science and Technology for Specially Abled Persons"

2018 was "Science and Technology for a sustainable future."

2019 is "Science for the People, and the People for Science"

2020 is "Women in Science.

2021 - "Future of STI: (Science, Technology and Innovation) Impacts on Education, Skills and Work

2022 – “Integrated approach in science & technology for sustainable future”.

2022 - "நிலைப்புறு எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை".

*2023 - “Global Science for Global Wellbeing

*2023 - “உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்”.

Friday, October 21, 2022

Wednesday, March 16, 2022

March 16, 2022

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற, இம்மாதம் 7ம் தேதி வரை, அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Friday, February 25, 2022

February 25, 2022

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-2021-அறிவியல் ஆசிரியர் பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல் சார்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Monday, February 21, 2022

February 21, 2022

DSE - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

DSE - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

இதையும் படிக்க | TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?

பள்ளிக் கல்வித் துறையில் 15.09.2011, 20.09.2011 மற்றும் 21.09.2011 ஆகிய நாட்களில் பணிநியமன ஆணை பெற்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

Friday, August 20, 2021

August 20, 2021

அறிவியல் பாட செயல்பாடுகள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் வகையில், அறிவியல் பாட செயல்பாடுகளுக்கான தயாரிப்பு குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அரசு பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக இப்பயிற்சி நடந்தது.உடுமலையில் தனியார் பள்ளியில் நடந்த இந்த பயிற்சியில், 3 முதல் 5ம் வகுப்புக்கான அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், பள்ளி தாளாளர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சித்தராமையா பேசினார். முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணி, ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் பாட செயல்பாடு தயாரிப்பு, கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்தல் குறித்து விளக்கினர்.பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறியதாவது:
அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு பணியில், சின்னகுமாரபாளையம், ஆலாம்பாளையம், சமத்துவபுரம், எரிசனம்பட்டி, பாலப்பம்பட்டி மற்றும் கருப்பட்டிபாளையம் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கல்வித்திறனையும், கருத்துகளையும் வலுவூட்டும் வகையில் பாட செயல்பாடுகளின் தயாரிப்பு இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.

Sunday, May 16, 2021

Thursday, May 06, 2021

May 06, 2021

அறிவியல் ஆய்வக கருவிகளை (6,7 மற்றும் 8ஆம் வகுப்பு) பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் குறித்த ஆசிரியர் கையேடு - வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Tuesday, May 04, 2021

May 04, 2021

Automatic irrigation system - செடிகளுக்கு ஈரப்பதத்தை கண்டறிந்து தானாகவே தண்ணீர் ஊற்றும் இயந்திரம் கண்டுபிடிப்பு

நீங்கள் வெளியூர் செல்கின்றீர்களா? வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளைப் பற்றி இனி கவலைபட தேவையில்லை!
(அறிவியல் அரட்டை) ரியாஸ் முகமதுவின் 26 வந்து கண்டுபிடிப்பு!
Automatic irrigation system. (தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஈரப்பதத்தை கண்டறிந்து தானாகவே தண்ணீர் ஊற்றும் இயந்திரம்)
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் 26 வது கண்டுபிடிப்பு!

https://youtu.be/XfgBUrPB9GY

Thursday, March 04, 2021

March 04, 2021

ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் அமைக்க வேண்டும்: வட்டார கல்வி அதிகாரி

மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக அறிவு வளர்ச்சிக்கு ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் தொடங்க வேண்டும் என்று பங்காருபேட்ைட தாலுகா வட்டார கல்வி அதிகாரி பி.பி.கெம்பையா ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க முதுநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
பங்காருபேட்டை தாலுகா அறிவியல் ஆய்வு மையத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, உலகம் தற்போது மிகவும் வேகமாக சுழன்று கொண்டுள்ளது. புதிய கண்டுப்பிடிப்புகள் மக்களிடம் புழக்கத்தில் வருவதற்கு முன் மற்றொரு புதிய கண்டுப்பிடிப்புகளை விஞ்ஞானிகள் அறிமுகம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் அச்சாணியாக இருப்பது அறிவியல் மட்டுமே. நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக பல தகவல்கள் சொல்லி கொடுக்க வேண்டும். விஞ்ஞானிகளை அறிமுகம் செய்வதுடன் அவர்கள் என்னென்ன கண்டுப்பிடித்துள்ளனர். அதனால் மனித சமூகம் அடைந்து வரும் நன்மைகள் என்னவென்பதையும் சொல்லி ெகாடுக்க வேண்டும். சுற்றுச்சூழல், வனமேம்பாடு அவசியத்தையும் இளம் வயதில் மூடநம்பிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவியில் சார்ந்த ஞானம் கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் தொடங்க வேண்டும்.
08.03.2021 திங்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாதத்திற்கு ஒருநாள் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களை சொல்லி ெகாடுக்க வேண்டும். இதன் மூலம் சிறந்து விஞ்ஞானிகளை நாம் உருவாக்க முடியும். கல்வி அறிவு இல்லாத காலத்தில் பல மேதைகள் உருவாகியுள்ளனர். தற்போது கூகுல் போன்ற அறிவு களஞ்சியங்கள் அதிகம் உள்ளது. அதை நல்ல தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

Thursday, February 25, 2021

February 25, 2021

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் 2018-2019 & 2019- 2020 - Press Release No : 167 - Dt :25.02.2021 - Science City - National Science Day Celebration

Thursday, January 28, 2021

January 28, 2021

அரசுப்பள்ளி மாணவன் ரியாஸ் முகமதுவின் 17 வது அற்புதக் கண்டுபிடிப்பு - Advance Scale (எவ்வித அளவுகோல்களும் இல்லாமல் அளவுகளை (Distance) துல்லியமாக கண்டறிய)!

CLICK HERE TO WATCH THE VIDEO& SUBSCRIBE THE CHANNEL

Total Pageviews

Search This Blog