Breaking

Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 - ரூ.698 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

மாணவிகளுக்கு ₨1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்.

- ₨ 698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு. - அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை

அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இதன்படி மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று கடந்த ஜூன் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரும் மாதமும் 7-ம் தேதி ரூ.1000 செலுத்தப்படும் என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

Wednesday, August 03, 2022

August 03, 2022

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்.: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்.: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகை. மேலும் 1,500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே, அதேநேரம் பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. ஆகவே தமிழக அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பல மாணவர்கள் குடும்ப கொரோனா சூழலில் வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும்

ஆசிரியர்கள் வட்டார வள ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதையும் நடப்பு கல்வி ஆண்டில் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

கொரோனா நோய் தொற்று காலத்தில் இந்திய அளவில் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். தேசிய கல்விக் கொள்கையின் படி குழந்தைகள் இடைநிற்றலை தவிர்த்து பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் 100% பள்ளி செல்வதை 2030ஆம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின்படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நடத்தி, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, ” இடைநின்ற குழந்தைகள் தொடர்பாக அரசு சமர்ப்பித்த புள்ளி விவரங்களில் வேறுபாடு உள்ளது. குழந்தை தொழிலாளர்களை மீட்கும் அதேசமயம் அவர்களின் குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மையில் குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை. தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது.

இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே. ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

ஆகவே தமிழக அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து, தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

Thursday, July 28, 2022

July 28, 2022

டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் 18 கோரிக்கைத் தீர்மானங்கள்

டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள்

1 ) தொடக்கக் கல்வித் துறையினை பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாணை 101,108 ஐ உடனடியாக இரத்து செய்யப்பட்டு தலைவர் கலைஞர் கால நிர்வாக கட்டமைப்பு தொடர்ந்திட வேண்டும்.

2 ) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை இரத்து செய்து , பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.

3 ) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4 ) இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முற்றிலும் களையப்பட வேண்டும்.

5 ) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்திட அனுமதிக்க வேண்டும்.

6 ) மத்திய அரசு அறிவித்த நாள்முதல் அகவிலைப்படி உயர்வினை உடன் வழங்க வேண்டும்.

7 ) பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03.2020 முதல் நிறுத்தப்பட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதை மாற்றி அமைத்து பழைய முறையில் ஊக்க ஊதியமாகவே தொடர்ந்திட ஆணை வழங்க வேண்டும் . 10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி முடித்தோரின் ஊக்க ஊதிய உயர்வு உடன் வழங்கப்பட வேண்டும்.

8 ) 2003-2004 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் தொகுப்பூதியப் பணிக்காலத்தை காலமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.

9 ) மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். 10 ) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும் . இணையதளம் மூலம் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியினை உடனடியாக நிறுத்த வேண்டும் . ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும்.

11 ) தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் அவர்கள் பி.லிட் , தமிழ் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க ஆணையிட்டார் . அதன்படி பதவி உயர்வு பெற்றவர்கள் பி.எட் . , பட்டம் பெற்றமைக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை என்ற பெயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது . தடையினை நீக்கிட ஆணை வழங்க வேண்டும்.

12 ) உயர்கல்வி படித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 6,500 ஆசிரியர்களுக்கு உரிய பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும்.

13 ) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் , அவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கி பணியமர்த்திட வேண்டும்.

14 ) நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிலை இறக்கம் செய்யப்பட்ட 95 துவக்கப்பள்ளிகளுக்கும் புதிதாக துவக்கப்பட்ட 20 துவக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது . உடன் பணியிடம் தோற்றுவித்து ஆணை வழங்கிட வேண்டும். 15 ) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு வைக்கும் அரசாணை 149 இரத்து செய்திட வேண்டும் . தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை கைவிடப்பட வேண்டும் . தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும்.

16 ) “ எண்ணும் , எழுத்தும் ” திட்டத்தை தனியார் ஆய்வு செய்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

17 ) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு என்ற பெயரில் பள்ளியினைக் கண்காணிக்கும் நடைமுறைகளால் கற்றல் , கற்பித்தல் பணியில் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு அத்தகைய நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.

18 ) 2022 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வுகளுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து உடன் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் . காலியிடங்களுக்கு 2022 செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் மாறுதல் வாய்ப்பளித்திட வேண்டும் .
July 28, 2022

தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. ஒன்றிய அரசு நிதியுதவியுடன் மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் லட்சியத்திலிருந்து தமிழகம் பின்வாங்க கூடாது. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும். ஒன்றிய அரசு மூன்று கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக அறிவித்த 157 மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 102 கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட போதிலும் நிலம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றில் பல கல்லூரிகள் 8 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டவை ஆகும். 8 ஆண்டுகளாக அக்கல்லூரிகள் அமைக்கப்படாத நிலையில், அவற்றை தமிழ்நாட்டுக்கு மாற்ற முடியுமா? என்பது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். மற்றொருபுறம், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17 கல்லூரிகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது 6 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகக் கூடிய இலக்கு தான் என்பதால் நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா மூன்று மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் அமைக்க முன்வர வேண்டும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 26, 2022

July 26, 2022

ஆதிதிராவிட, பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு; தமிழக அரசு உத்தரவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிட, பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2013-14ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 700 முழுநேர ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கடந்த 2021-22ம் நிதியாண்டில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஊக்கத் தொகையும் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டதுடன், ஆய்வாளர்கள் எண்ணிக்கையும் 1,200 முதல் 1,600 வரை என உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டமானது, முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் குறிப்பாக, மாநில பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அறிவியல், கலை, சமூக அறிவியல், வணிகவியல், சட்ட பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு பொருந்தும். ஆண்டுக்கு 1,600 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை பெறும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஆணாக இருந்தால் அதிகபட்சம் 50 ஆகவும், பெண்ணாக இருந்தால் 55 ஆகவும் இருக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆய்வாளர் வேறு எந்த உதவித்தொகை, மானியத்தொகை பெற்றிருக்கக்கூடாது. பல்கலைக்கழகம், கல்லூரி, இதர கல்விநிறுவனங்கள், மாநில, மத்திய அரசு பணியாளர்களுக்கு இந்த ஊக்கத் தொகை கிடைக்காது. எம்பில் முடித்தவர்களுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரையும், முதுநிலை பட்டம் முடித்தவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையும் ஊக்கத்தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை 10 மாதங்களாக ரூ.10 ஆயிரம் வீதம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதில், 5 சதவீதம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும். தகுதி அடிப்படையில் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, July 25, 2022

July 25, 2022

ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்களின் வருகை பதிவேடு - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம்

இதையும் படிக்க | Tamil Nadu Government M.G.R. Film and Television Institute - Admission Notification for the year 2022-2023 - Application and Prospectus - PDF

ஆசிரியர்களின் வருகை பதிவேடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை

Saturday, July 23, 2022

July 23, 2022

ஜெயலலிதா இசை-கவின் கலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

ஜெயலலிதா இசை-கவின் கலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

இதையும் படிக்க | கற்றலின் இடைவெளியை குறைக்க வந்தது 'எண்ணும் எழுத்தும்' | Ennum Ezhuthum

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் அலுவல் சாரா தலைவராக துணைவேந்தா் இருப்பாா். அலுவல் சாரா உறுப்பினா்களாக கலைத் துறை செயலாளா், நிதித் துறை செயலாளா், சட்டத் துறை செயலாளா், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையாளா் ஆகியோா் இருப்பா். கலைத் துறையில் சிறந்த இரண்டு போ் வேந்தா் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, பாடகா் சீா்காழி ஜி.சிவசிதம்பரம், வில்லுப்பாட்டு கலைஞா் கலைமாமணி பாரதி திருமகன் ஆகியோா் இருப்பா். துணைவேந்தரின் பரிந்துரைகளை ஏற்று ஆறு போ் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: குரூப்-1 தரவரிசைப் பட்டியல்

ஓவியா் ட்ராஸ்ட்கி மருது, திரைத் துறையைச் சோ்ந்த ராஜீவ் மேனன், இசைத் துறையைச் சோ்ந்த நித்யஸ்ரீ மகாதேவன், நாட்டிய துறையைச் சோ்ந்த அமுதா தண்டபாணி, கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவைச் சோ்ந்த என்.மம்முது, டிஜிட்டல் இசைப் பதிவு துறையைச் சோ்ந்த சாய் ஷரவணம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.

Friday, July 22, 2022

July 22, 2022

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding

தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 3.31 கோடியில் இருந்து ரூ. 4 கோடியாக உயர்த்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது.

Total Pageviews

Search This Blog