Breaking

Showing posts with label engineering colleges. Show all posts
Showing posts with label engineering colleges. Show all posts

Monday, November 27, 2023

November 27, 2023

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள AICTE அனுமதி

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள AICTE அனுமதி AICTE allows admission of any number of students in engineering colleges

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள ஏஐசிடிஇ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த ஏஐசிடிஇ முடிவு எடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளின் போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும் ஆய்வு முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கும் என்றும் ஏஐசிடிஇ அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஏஐசிடிஇயின் புதிய சலுகை சிறு மற்றும் நடுத்தர பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கலாக அமையும். அளவுக்கு அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்போது தரமான கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் வரும் நிலையில், ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகவும், சிறு கல்லூரிகளுக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.

Tuesday, November 14, 2023

November 14, 2023

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு - AICTE வெளியீடு

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு: அடுத்த 3 ஆண்டுகளுக்கான வரைவு அறிக்கையை ஏஐசிடிஇ வெளியிட்டது

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறைகள் அடங்கிய 3 ஆண்டு வழிகாட்டி கையேட்டின் வரைவு அறிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள் ளது.

இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குத்தான் தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இந்நிலையில், முதல்முறையாக கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளிக்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டு கையேட்டின் வரைவு அறிக்கையை (2024-27) வடிவமைத்து, ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 286 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான செயல் முறைகள், விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

திருத்தப்பட்ட செயல்முறைகள்: புதிய கல்லூரிகள், படிப்புகள்தொடக்கம் மற்றும் அங்கீகார நீட்டிப்புக்கான திருத்தப்பட்ட செயல் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை, முதுநிலைப் படிப்புகளைத் தொடங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் அனுமதி கோரலாம். மேலும், ஒரு கல்வி நிறுவ னத்தை மூடும் கல்லூரிகள், அதே கல்வியாண்டில் வேறொரு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு சிறந்த கற்றலை வழங்க ஏதுவாக கல்வியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஒத்துழைப்புடன், தகுதியான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட சார்ந்த கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

மேலும், முறையான அங்கீ காரம் பெறாத கல்லூரிகள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும். அதே போல, ஒரு கல்லூரியானது ஓராண்டுக்கும் மேலாக முதல்வர் இல்லாமல் இயங்கினால், அந்த இடத்துக்கு தகுதியான நபர் நியமிக்கப்படும் வரை மாணவர் சேர்க்கைக்கான அனுமதி தற் காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்பன உட்பட பல்வேறு கருத்துருக்கள் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வரைவறிக்கை தொடர்பான தங்களின் கருத்துகளை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் www.aicte-india.org/ எனும் இணையதளம் வழியாக நவம்பர் 17-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Saturday, August 26, 2023

August 26, 2023

இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை



இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

நான்கு வருட படிப்பு குறித்து மணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையே பெரும்பாலான கல்லூரிகளில் நடந்தன. போதிய கல்வித் தரம் இல்லாததே காரணமாக கூறப்படும் நிலையில் கல்லூரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பங்கேற்ற 440 கல்லூரிகளில் 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டு சுற்று கவுன்சிலிங்கின் முடிவில் 37 கல்லூரிகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. 176.99 முதல் 142 வரையிலான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்த 64,286 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இதில் 35,474 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், பங்கேற்ற கல்லூரிகளில் 41 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில் தொடர்புகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.

அதனால் அவ்வாறான கல்லூரிகளில் மட்டும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன, என்றார்.நடைபெற்ற சுற்றுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Thursday, July 27, 2023

July 27, 2023

தமிழகத்தில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு!



தமிழகத்தில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு!

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

80 பொறியியல் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும். உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகள் விரைந்து அவற்றை சரி செய்துகொள்ளுமாறு அண்மா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

Sunday, March 26, 2023

March 26, 2023

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இருந்த தடையை ஏஐசிடிஇ நீக்கியுள்ளது. மேலும், சேர்க்கை இடங்கள் அதிகரிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

நம் நாட்டில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை வகுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஏஐசிடிஇ ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை வரும் 2023-24-ம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதையடுத்து போதிய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் கல்லூரிகள் தொடங்க உரிய விதிகளின்படி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்.

எனினும், வளரும் தொழில்நுட்பப் படிப்புகள் தொடங்குதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை அந்த கல்வி மையங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுதவிர சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 360 வரை கல்லூரிகள் உயர்த்திக் கொள்ளலாம். புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

அதன்படி 50 சதவீத மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளுக்கும் இனி செயற்கை நுண்ணறிவு உட்பட வளரும் தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனுமதிக்கப்படும். எனினும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை, அந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் 3 முதன்மைப் படிப்புகளை ஏற்கெனவே கொண்டிருக்க வேண்டும். ஆலோசகர்கள் நியமனம்: பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிஎம் கேர் சூப்பர் நியூமரரி சேர்க்கை திட்டம் தொடரப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க கல்லூரிகளில் பிரத்யேக ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பல்கலை.கள் மற்றும் ஆய்வு மையங்களுடன் நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறவும், நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Saturday, February 11, 2023

February 11, 2023

Anna University | Engineering கல்லூரிகளுக்கு மூக்கணாங்கயிறு! அண்ணா பல்கலை. அதிரடி

Anna University | Engineering கல்லூரிகளுக்கு மூக்கணாங்கயிறு! அண்ணா பல்கலை. அதிரடி Anna University | Noose for Engineering colleges! Anna University. action



பொறியியல் கல்வி தரத்தை வலுப்படுத்தும் விதமாக போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகார நீட்டிப்பை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெற்றுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள் இல்லை என்று தொடர் புகார்கள் எழுந்தன. தனியார் கல்லூரிகளுக்கு அவற்றின் தரம், வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அடிப்படையில் தரக்குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளை களை எடுக்கும் வகையில் வரும் 2023,2024 கல்வி ஆண்டு முதல் உறுப்பு கல்லூரிகளுக்கு தரம் மதிப்பின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட கல்லூரியின் தரம், பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த தரக்குறியீடுகளுடன் அடுத்த கல்வி ஆண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. இதனால் தரம் குறைந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது தடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய தரக்கொள்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Wednesday, December 14, 2022

December 14, 2022

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களாக யுஜிசி வழிமுறைபடி பணி நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களாக யுஜிசி வழிமுறைபடி பணி நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடங்களை பயிற்றுவிக்க யுஜிசியின் வழிமுறையின்படியே பட்டதாரிகள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற 2 புதிய தமிழ் மொழி பாடங்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இப்பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வழிமுறைகளின்படியே பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதாவது, முதுநிலை தமிழ் படித்து நெட், ஸ்லெட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதுவரை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படும்.

வெளிநாடுகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தமிழகத்தில் பொறியியல் படிக்கின்றனர். அவர்களும் தமிழர் மரபை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த 2 பாடநூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவர்களுக்கு கற்றுத் தரப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற அரசியல் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். உயர்கல்வி துறை செயலர் தா.கார்த்திகேயன் உடன் இருந்தார்.

Saturday, November 19, 2022

November 19, 2022

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு.

பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்களாக 9,731 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Saturday, August 27, 2022

August 27, 2022

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் க. பொன்முடி பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள், உள் ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் யார் சேர முடியும் என்பது குறித்து தெளிவான விவரங்களை அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது, செப்டம்பர் 10ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த பொறியியல் கலந்தாய்வில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்கள்ஒதுக்கப்படும். அதாவது, பொறியியல் கலந்தாய்வில் ஒரு சதவீதம் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

சமூக நீதியின்அடிப்படையில் எல்லா பிரிவுகளில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எட்டாம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டமும் இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு

வரும் செப்டம்பர் 10 முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி 12ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூன்று நாள்கள் நடைபெறும். பிறகு, அக்டோபர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 29ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை 4வது கட்ட பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

நவம்பர் 10 முதல் 20ஆம் தேதி வரை எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார் அமைச்சர் க. பொன்முடி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

Thursday, August 25, 2022

August 25, 2022

B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்

பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி செப்.12ம் தேதி வரை நடக்கவுள்ளது என மாணவர் சேர்க்கை செயலாளரும், கல்லூரி முதல்வருமான முனைவர் பழனி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 22, 2022

August 22, 2022

TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!

TNEA Engineering counseling cut off for top colleges in Tamilnadu: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டாப் மோஸ்ட் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று தேதிகள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மற்றும் கோவையில் உள்ள டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

கடந்த ஆண்டுகளில் கல்லூரியின் தரம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் முதல் பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் தனித் தனியாக கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.

கட் ஆஃப் 200க்கு 200 வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குத் தான் அதிகமான கட் ஆஃப் உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ள கல்லூரிகளிலும், அந்த படிப்புக்கே கட் ஆஃப் அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐ.டி மற்றும் இ.சி.இ, சிவில் போன்ற படிப்புகள் உள்ளன. அதேநேரம் தமிழ் வழி கல்விக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20% இடஓதுக்கீடு வழங்கியுள்ள நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலே அதற்கான ஆர்வம் குறைவாக இருந்து வருகிறது.

Saturday, August 20, 2022

August 20, 2022

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20) தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-இல் தொடங்கி அக்டோபர். 23 வரை நடைபெறும்.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும். அவர்களுக்கு பின்னால் இருக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும். அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த இடம் தனக்கு தேவை எனவும், அடுத்த சுற்றில் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேற்று 250 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 146 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

Monday, August 01, 2022

August 01, 2022

TNEA Counselling 2022: இதர மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

TNEA Counselling 2022: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது; இதர மாணவர்களுக்கு எப்போது?

பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது

கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நேரடியாக தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விளையாட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 3093 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் நாளொன்றுக்கு 300 மாணவர்கள் வீதம் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) உதவியுடன் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சரிபார்க்கப்படும். இதர மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் நடப்பாண்டு முதல் குறையும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

Monday, July 18, 2022

July 18, 2022

பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்கள் காலியாகக் கிடக்கும்?

பொறியியல் படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்தாண்டு 50 சதவிகித இடங்கள் காலியாக கிடக்கும் சூழல் எழுந்துள்ளது.



கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக கடந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



இதனால், அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு விருப்பம் காட்டியதால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்தாண்டு 59 சதவீத இடங்கள் நிரம்பின.

ஆனால், இந்தாண்டிற்கான சூழல் முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் இந்தாண்டிற்கான விண்ணப்பம் தொடங்கி ஒரு மாதமாகியும், இதுவரை 1.79 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதிலும், 1.28 லட்சம் பேர் மட்டுமே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.



கடந்தாண்டு விண்ணப்பம் வெளியிடப்பட்டு 9 நாள்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும், பொறியியல் படிப்புகளில் கணினி துறையை தவிர பிற துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



இத்தகைய சூழலில், தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு 50 சதவீத இடங்கள் காலியாகக் கிடக்கும் எனத் தெரிகின்றது.

Total Pageviews

Search This Blog