Breaking

Showing posts with label Cut-off. Show all posts
Showing posts with label Cut-off. Show all posts

Wednesday, August 17, 2022

August 17, 2022

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைகிறது.. கல்வியாளர்கள் கருத்து

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஒட்டு கட் ஆப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு பெரும்பான்மை மாணவர்களுக்கு குறையும் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 மதிப்பெண்கள் வரை குறையும் நிலை உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை: நட்பாண்டில் 190க்கும் மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரிக்கவும், 185லிருந்து அதற்கு குறைவான கட் ஆப் பெற்ற மாணவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்

2022-23 ம் ஆண்டிற்கான இளங்கலை பிஇ, பிடெக் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் ஒரு மாணவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 120 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதே போல் 190க்கும் அதிகமாக கட் ஆப் பெற்றவர்களின் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைந்துள்ளது

கல்வி ஆலோசகர் அஸ்வின்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 120 மாணவர்கள் அதிகமாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 198 கட் ஆப் மதிப்பெண்ணிற்கு கிடைத்த இடங்கள் 200க்கு 200 பெற்ற மாணவர்கள் 2 மதிப்பெண் அதிகரிக்கிறது. 197க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரியில் 199 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 195 .95 மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் 197 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிடைக்கும். அதே சமயம் 190 மதிப்பெண்களுக்கு மேலாக கட்-ஆப் மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது . 196 முதல் 185 க்கு கீழ் கட்-ஆப் மதிப்பெண் குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு 195 கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2 கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது . 192க்கும்.மேல் ஒன்றரை கட் ஆப்.மதிப்பெண் அதிகரிக்கிறது. நடப்பாண்டு 190லிருந்து 192 வரை 1கட் ஆப்.மதிப்பெண் அதிகரிக்கிறது. நடப்பாண்டு 185 கட் ஆப் 1 மதிப்பெண் குறைகிறது . நடப்பாண்டில் 180 கட் ஆப் இந்த ஆண்டு 3 கட் ஆப் குறைகிறது. நடப்பாண்டில் 170கட் ஆப் 7 கட் ஆப் குறைகிறது. 160 கட் ஆப் நடப்பாண்டில் 12கட் ஆப் குறைகிறது. மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியலில் எதிர்பாராதவைகள் வந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 கட் ஆப் பெற்றவர்கள் 132 பேர் அதிகரித்துள்ளனர். 195 கட் ஆப்பிற்கு 1300 பேர் இருந்தனர்.இந்த ஆண்டு 3023 பேர் உள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி, பிஎஸ்ஜி, தியாகராஜா போன்ற கல்லூரிகளில் கடும்போட்டி இருக்கும். இது போன்றக் கல்லூரிகளில் சேர 196 கட்ஆப் மேல் இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு 192 வரையில் 4300 மாணவர்கள் என இருந்தது நடப்பாண்டில் 5800 எனவும்,190 கட்ஆப் கடந்தாண்டு 7530 என இருந்தது நடப்பாண்டில் 8 299 பேர் என உள்ளது. 188 முதல் 191 வரையில் ஒரு மதிப்பெண் அதிகரித்து வருகிறது. 185 கட்ஆப் மதிப்பெண்ணிற்கு பின்னர் தான் குறைகிறது என தெரிவித்தார்.

Tuesday, August 16, 2022

August 16, 2022

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

பொறியியல் தரவரிசை பட்டியலில் 133 பேர் 200-க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர்.

2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். இதில் ரஞ்சிதா, ஹரிணிகா, லோகேஷ் கண்ணன் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிருந்தா, ரோகித், அனிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

விளையாட்டுப் பிரிவில் 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் மமதிஷியா, கார்த்திகேயனி, ரிஷப் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

Monday, August 08, 2022

August 08, 2022

JEE மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு; கட் ஆஃப் எவ்வளவு?

ஜே.இ.இ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 24 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தல்; ஒவ்வொரு பிரிவுக்கும் கட் ஆஃப் எவ்வளவு?

NTA release JEE Main 2022 results check category wise cut off:

தேசிய தேர்வு முகமை (NTA) இன்று JEE (Main 2022) முதன்மைத் தேர்வுக்கான இறுதி முடிவுகளை அறிவித்தது. விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

இந்த ஜே.இ.இ முதன்மை தேர்வுகளில் ஒட்டுமொத்த தகுதிப் பட்டியலில் (அமர்வு 1 மற்றும் அமர்வு 2 செயல்திறன் அடிப்படையில்) 24 பேர் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். இந்த 24 பேரில், இரண்டு பெண்கள் மட்டுமே 100 சதவீதத்தைப் பெற்றுள்ளனர். ஆந்திராவின் பாலி ஜலஜாக்ஷி மற்றும் அஸ்ஸாமின் சினேகா பரீக் ஆகியோர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மொத்தம் 6,48,555 ஆண்களும், 2,57,031 பெண்களும் JEE அமர்வுகளில் கலந்து கொண்டனர். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக ஐந்து தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, இரண்டு அமர்வுகளுக்கும் மொத்தம் 10,26,799 தனித்தேர்வர்கள் பதிவு செய்தனர் அவர்களில் 9,05,590 தனித்தேர்வர்கள் இரண்டு அமர்வுகளிலும் தேர்வு எழுதினர். அமர்வு 1 தேர்வு ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை நடத்தப்பட்டது, அமர்வு 2 தேர்வு ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு இந்தியாவிற்கு வெளியே உள்ள 17 நகரங்கள் உட்பட 440 நகரங்களில் 622 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

NTA ஞாயிற்றுக்கிழமை JEE முதன்மை அமர்வு 2 இன் இறுதி விடைக்குறிப்புகளை வெளியிட்டது. JEE Main 2022 இன் அமர்வு 2 க்கான தற்காலிக விடைக்குறிப்பில், NTA ஆறு கேள்விகளை கைவிட்டது மேலும் ஐந்து கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதில்கள் உள்ளன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர, ஐந்து கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் இருந்ததாகவும் NTA அறிவித்துள்ளது. எனவே, அமர்வு 2 மதிப்பெண் அதற்கேற்ப மாறுபடலாம்.

ஜே.இ.இ தேர்வு முடிவுகளின் அறிவிப்புடன், தேர்வு அதிகாரிகள் தகுதிபெறும் JEE முதன்மை கட்-ஆஃப் 2022 ஐயும் வெளியிட்டுள்ளனர், இது தேர்வில் தகுதி பெற தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆகும்.

JEE முதன்மை தேர்வு 2022 தகுதி கட்-ஆஃப்

பொது பிரிவு – 88.4121383

EWS பிரிவு – 63.1114141

OBC NCL (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) – 67.0090297

ஆதிதிராவிடர் (SC) – 43.0820954

பழங்குடியினர் (ST) – 26.7771328

பொதுப்பிரிவு மாற்றுதிறனாளிகள் – 0.0031029 அதிகாரிகள் அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனியாக JEE முதன்மை தேர்வு 2022க்கான கட் ஆஃப் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையின்படி JEE முதன்மை கட்-ஆஃப் தகுதி பெற வேண்டும்.

EWSக்கான JEE முதன்மை கட்-ஆஃப் 63.1114141 ஆகும், இது முந்தைய ஆண்டு கட்-ஆஃப் விட மிகவும் குறைவு. பொதுப் பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் 88.4121383, இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

இப்போது, ​​JEE முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 28 அன்று IIT பாம்பே நடத்தும் JEE அட்வான்ஸ்டு 2022 தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

என்.ஐ.டி, ஐ.ஐ.டி மற்றும் ஜி.எஃப்.டி.ஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்துகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு, விண்ணப்பதாரர்கள் JEE முதன்மை கட் ஆஃப் தகுதி பெற வேண்டும்.

Total Pageviews

Search This Blog