Breaking

Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி - தலையங்கம்

அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், சிறு வயதிலேயே இந்த கால மாணவர்கள் அதில் ஆற்றல் மிகுந்தவர்களாக ஆகிவிடுவதாலும், அவர்கள் பெரியவர்களைவிட எல்லாம் தெரிந்து வைத்திருந்தாலும், மனதளவில் மிகவும் பலவீனமாகி விடுகிறார்கள். பெற்றோரும், வீடுகளில் மாணவர்களை அந்தகால பெரியவர்கள் போல அடிப்பதில்லை, கிள்ளுவதில்லை, முழங்காலில் நிற்க சொல்வதில்லை, தோப்புகரணம் போட சொல்வதில்லை. சொன்னாலும், அதை கேட்டு கீழ்படிதல், இந்தகால குழந்தைகளுக்கு இல்லை. மேலும், சிறு குழந்தைகள் என்றாலும், அவர்கள் கேட்பதையெல்லாம் தங்களுக்கு அதை வாங்கிக்கொடுக்க பணம் இல்லையென்றாலும், கஷ்டப்பட்டாவது பெற்றோர் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதனால், அந்த குழந்தைகளுக்கு எந்த ஏமாற்றமும் வாழ்வில் இல்லை. இப்படி வளர்க்கப்படும் அந்த குழந்தைகள், அதே உணர்வோடுதான் பள்ளிக்கூடங்களிலும் இருக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். பழைய கால முறையில், மாணவர்களை ஆசிரியர்களும் இப்போது கண்டிக்க முடியாது. மாணவர்களை அடித்தால், பதிலுக்கு மாணவர்கள் திருப்பி அடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆசிரியர், ஆசிரியைகளை மாணவர்களே கத்தியால் குத்திய, ஏன் கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆக, "மாணவர்களை திருத்துவதற்கு அடியும், உதையும் இனி தேவை இல்லை. வேறு அன்பான, அவர்கள் மனதை தொடும் வழிகள்தான் வேண்டும்" என சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக்கூடம் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளை கையாளும் சில வழிமுறைகளை தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. பொது போக்குவரத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், ஆசிரியர்களை உடல் ரீதியாக காயப்படுத்துதல், அச்சுறுத்துதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார ரீதியாக மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்தல், புண்படுத்துதல் உள்பட குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகளை பட்டியலிட்டு, அந்த ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய குற்றங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். இதே தவறை அவர்கள், 2-வது மற்றும் 3-வது முறையாக செய்தால், ஆசிரியர்கள் கையாள வேண்டிய ஒழுங்குமுறை நுட்பங்களை கையாளலாம் என்று கூறியுள்ளது. அதன்படி, 5 திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியர்களிடம் எழுதிக் காட்டவேண்டும், 2 நீதிக்கதைகளை பெற்றோரிடம் இருந்து கற்று, வகுப்பறையில் சொல்ல வேண்டும், 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும். வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்துக்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்கவேண்டும். 5 வரலாற்று தலைவர்களைப்பற்றி அறிந்துகொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்கவேண்டும். சிறந்த ஆளுமைகளின் உண்மைக் கதையை கற்றுக்கொண்டு, வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்கவேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள் பற்றிய வரைபடம் எழுத வேண்டும், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதவேண்டுமென்பது உள்பட மேலும் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. 3-வது எச்சரிக்கையிலும் திருந்தாவிட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைகள் நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்கவேண்டும். இவ்வளவுக்கும் பிறகு 5-வது முறையாக தவறு செய்தால், சுற்றுசூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால், பள்ளி நிர்வாக குழு ஒப்புதலோடு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது வரவேற்கத்தக்க பரிந்துரைகளாகும். எந்த இடத்திலும் மாணவர்களை அடிக்க சொல்லவில்லை. தவறு செய்யும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும், தன்னைப்பற்றி உயர்வான எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த வகைகளிலேயே குழந்தைகளை திருத்தலாம்.

Monday, July 04, 2022

July 04, 2022

தேர்வு முடிவுகள் சொல்லும் செய்தி! பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தலையங்கம்

அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் பல அம்சங்கள் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 2019-இல் 95.2%-ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இப்போது 90.07%-ஆக சரிந்திருக்கிறது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் கடுமை காட்டக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தபோதும் 47,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 42,519 பேர் தேர்வுக்கே வரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.12 லட்சம் பேர் எதிர்கொண்டனர். அவர்களில் 8.21 லட்சம் பேர் (90.07%) தேர்ச்சி பெற்றனர். சுமார் 5.21 லட்சம் பேர் மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு 300-க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக கற்றலில் மாணவர்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இவை உணர்த்துகின்றன. www.kalviseithiofficial.com



மொழிப்பாடத்தில் 47,055 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது கவலையளிக்கிறது. இதில் 36,589 பேர் மாணவர்கள், 10,466 பேர் மாணவிகள். பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 63,642 பேர் தேர்ச்சி பெறவில்லை.

மொழிப்பாடங்களில் மலையாளம், தெலுங்கு போன்றவை இருந்தாலும் 90%-க்கும் அதிகமானவர்களுக்கு தமிழ்தான் மொழிப் பாடமாக உள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழை தூக்கிப் பிடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அப்படியிருந்தும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் தமிழில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறவில்லை என்பது ஆட்சியாளர்களின் அசிரத்தையையும் அக்கறையின்மையையும்தான் வெளிப்படுத்துகிறது.



பத்தாம் வகுப்பில் மாணவர்களைவிட மாணவிகள் 8.55% பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் மாணவர்களைவிட 7.75% அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்விலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களில் 95% மாணவியரும், 84.9% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-இல் மாணவ - மாணவிகளுக்கு இடையே இருந்த தேர்ச்சி இடைவெளி விகிதம் 3.1%-ஆக இருந்து இப்போது 10.1%-ஆக அதிகரித்துள்ளது.



இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கைப்பேசியில் மூழ்கி இருத்தல், கரோனா கால பொருளாதார நெருக்கடிக்குப் பின் பெற்றோருக்கு உதவுவதற்காக வேலைக்குச் சென்றதால் படிப்பில் கவனம் செலுத்துவதில் உள்ள குறைபாடு, மீண்டும் அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்படுவார்கள் என்கிற அதீத நம்பிக்கை போன்றவற்றால் மாணவிகளைவிட மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்று கல்வித் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகள் என்றில்லை, இப்போது ஐஏஎஸ், எம்பிபிஎஸ் என பெரும்பாலும் எல்லாவித தேர்வுகளிலும் மாணவிகளே கோலோச்சுகின்றனர். பெண்கள் முன்னேறுவது மகிழ்ச்சிதான் என்றாலும் மாணவர்கள் பின்தங்கினால் எதிர்காலத்தில் அது மது, போதைக்கு அடிமையாதல், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல், மன அழுத்தம் உள்ளிட்ட பலவிதமான பிரச்னைகளுக்கு வழிகோலும் என்பது கவலையை ஏற்படுத்துகிறது. அனைத்து நிலைகளிலும் இருபாலரும் தேர்ச்சி பெறுவது அவசியம். www.kalviseithiofficial.com



பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்றோர் 85.25% பேரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயின்றோர் 98.31% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போன்று, பிளஸ் 1 தேர்விலும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 99.35% பேரும், அரசுப் பள்ளிகளில் 83.27% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் அரசுப் பள்ளிகளில் 78.48% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.



தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில், அரசு, தனியார் பள்ளிகள் உள்பட 4,145 பள்ளிகளில் 1.26 லட்சம் மாணவர்களிடம் 2021-இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய சாதனை ஆய்வில், எட்டாம் வகுப்பிலும் 10-ஆம் வகுப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களைவிட தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் வசதி உள்ளிட்டவை கிடைப்பதும், ஆசிரியர்கள் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்துவதும் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன்.

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எந்தவிதக் கட்டணமும் இன்றி தனியார் பள்ளிகளில் படிக்க கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. இவர்களுக்கான கட்டணத்தை அந்தந்தப் பள்ளிகளுக்கு அரசே அளிக்கிறது.



நிகழாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 31% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பில் 56,687 பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74,383-ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை இது காட்டுகிறது.



"அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல. அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்' என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்திருக்கிறார். அதைச் செயல்படுத்திக் காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.

Total Pageviews

Search This Blog