Breaking

Showing posts with label committed suicide. Show all posts
Showing posts with label committed suicide. Show all posts

Saturday, November 25, 2023

November 25, 2023

9-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

9-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பலவநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜீவரத்தினம் (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜீவரத்தினம் சரிவர படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. ஒழுங்காக படிக்குமாறு அவரது பெற்றோர் ஜீவரத்தினத்தை கண்டித்தனர்.

வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவரத்தினம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

Thursday, September 28, 2023

September 28, 2023

தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை! - மாணவி பரிதாப மரணம்!



நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஓராண்டுக்கு முன் ஆசிட் குடித்த திருத்தணி மாணவி பரிதாப மரணம்

தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை!

கோட்டாவில் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை!

இந்தாண்டில் மட்டும் இதுவரை கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன

September 28, 2023

8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி

திருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி

திருவெண்ணெய் நல் லூர் அருகே பிறந்த நாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் தூ க்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.

Tuesday, September 26, 2023

September 26, 2023

முடியை வெட்ட சொன்னதால் முடிவை தேடிக் கொண்ட மாணவன் - பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சஸ்பெண்ட்!

மாணவர் தற்கொலை- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முடிவெட்டி வரச்சொல்லி வீட்டிற்கு அனுப்பியதால், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணையா - மாரிக்கண்ணு தம்பதிக்கு மகரஜோதி என்ற மகளும், மாதேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மாதேஸ்வரன், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். மாதேஸ்வரன் அதிகமாக முடி வளர்த்ததால், அவரது தலை முடியை வெட்ட சொல்லி தொடர்ந்து ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர் முடிவெட்டாமல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற மாதேஸ்வரனை முடிவெட்டி விட்டு வரும்படி, தலைமை ஆசிரியர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரவு வரை, மாதேஸ்வரன் வீடு திரும்பாததால், பெற்றோரும், உறவினர்களும் ஊர் முழுக்க தேடி உள்ளனர். இரவு நேரத்தில், பள்ளிக்கு அருகில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாதேஸ்வரன் கண்டுபிடிக்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாதேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், பெற்றோர்கள் அதற்கு உடன்படவில்லை. மாணவன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் எனவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து மாதேஸ்வரனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அரசு மருத்துவமனை முன்பு மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சஸ்பெண்ட்


இதனிடையே, மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் ஆசிரியர் பாரதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

September 26, 2023

அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்!

பள்ளி மாணவர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மாணவரின் உறவினர்களும் இந்திய மாணவர் சங்கத்தினரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன் (17). இவர், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.  திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர் மாதேஸ்வரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மாதேஸ்வரனை தேடிய நிலையில், திங்கள்கிழமை இரவு பள்ளியின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவரின் சடலம் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மாணவரின் உறவினர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Saturday, September 23, 2023

September 23, 2023

படிக்காததை கண்டித்த பெற்றோர் - 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

படிக்காததை கண்டித்த பெற்றோர் - 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.படிக்கா ததை பெற்றோர் கண்டித்த தால்இந்தவிபரீதமுடிவுவை எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

சென்னைபள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக் கத்தை சேர்ந்தவர் மாணவி ஹரிதா (16),தனியார் பள்ளி யில்11ம் வகுப்பு படித்துவந் தார்.

பெற்றோர் மாணவிபடிக் காததை கண்டித்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தனி அறையில் உறங்கச் சென்ற மாணவி, காலையில் பெற்றோர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை, கதவை உடைத்து பார்த்த போது புடவையில் தூக் கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைத் கண்டு அதிர்ச் சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன் சிற்கு தகவல் கொடுக்கப் பட்டு சோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்ததன் பேரில் பள்ளிக்கரணைகாவல்துறை யினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டைஅரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்

Wednesday, August 23, 2023

August 23, 2023

பெற்றோரை அழைத்து வரும்படி கூறிய பள்ளி நிர்வாகம் - 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!



புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடலில் விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

வகுப்பறையில் நடைபெற்ற சோதனையில் செல்போன் சிக்கியதால் பள்ளி நிர்வாகம் கண்டிப்பு

பெற்றோரை அழைத்து வரும்படி மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகம்

அச்ச உணர்வு, மன உளைச்சலால் கடலில் விழுந்து மாணவன் சிவராஜ் தற்கொலை

பிரேத பரிசோதனைக்கு பின் சிறுவன் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

Thursday, August 17, 2023

August 17, 2023

IIT மாணவர்கள் தற்கொலை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!



சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்குஉள்ளானது.

இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றது. பல்வேறு கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 700 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை அந்தக் குழு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த அறிக்கையை திலகவதி தலைமையிலான குழுவினர் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்வதுடன், அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உட்பட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த அறிக்கையை பொது வெளியில் வெளியிட்டு, தொடர் நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐஐடி நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன தலைமை அந்த அறிக்கையை மறு ஆய்வு செய்து,கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கும். நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தப் பரிந்துரைகள் பொது வெளியில் பகிரங்கமாக வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 16, 2023

August 16, 2023

ஒரே மாதத்தில் 4 பயிற்சி மாணவர்கள் தற்கொலை: தொடரும் சோகம்!

ஒரே மாதத்தில் 4 பயிற்சி மாணவர்கள் தற்கொலை: தொடரும் சோகம்!

பிகாரை சேர்ந்த ஐஐடி-ஜேஇஇ மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானில் கோடாவில், மேலும் ஒரு பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த நான்காவது தற்கொலையாகும்.

பிகாரை சேர்ந்தவர் வால்மீகி பிரசாத். கடந்தாண்டு ஐஐடி-ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு கோடாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

மாணவன் மகாவீர் நகர் பகுதியில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தங்கியிருந்த அறையில் தற்கொலைக்கான எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. போலீஸார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கோடா மாவட்டத்தில் 2 ஐஐடி-ஜேஇஇ மாணவர்கள் மற்றும் ஒரு இளநிலை நீட் பயிற்சி மாணவர்கள் உள்பட ஒரே மாதத்தில் நான்கு பயிற்றிச மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 15 பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் தற்கொலைக்கு பெரும்பாலும் மனஅழுத்தமே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 06, 2023

April 06, 2023

நீட் பயிற்சி மாணவி தற்கொலை... ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்தார்

நீட் பயிற்சி மாணவி தற்கொலை... ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்தார்

ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடலூர்: வடலூர் ரெயில் நிலையம் அருகே இன்று தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான நிஷா என்ற பெண், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று மாலை பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரெயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீட் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

Tuesday, November 01, 2022

November 01, 2022

நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

திருப்பூர்: திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் நீட் கோச்சிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படியூரைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியின் மகள் படித்து வந்தார்.

இந்தநிலையில், ஆனந்தி வழக்கம்போல் பயிற்சி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். இதன் பிறகு பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடிக்குச் சென்ற ஆனந்தி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tuesday, September 27, 2022

September 27, 2022

மது அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு

கமுதி அருகே மது அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு

கமுதி, செப். 26: கமுதி அருகே ஞாயிற்றுக் கிழமை மது போதை யில் ஆரம்ப சுகாதார நிலையத் தில்சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்ற பள்ளி மாண கௌதம் வர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள போத்தநதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்ப சாமி மகன் கெளதம் (17). இவர் மண்டலமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கி ழமை மாலை தனது நண்ப ரான அழகுபாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற கௌதம் வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கௌதமை அவ ரது உறவினர்களானசரவணன், முத்துப்பாண்டி ஆகியோ ரின் உதவியுடன் தாயார் சித் ராதேவி மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுவிட்டு வீட்டிற் குச் சென்றுள்ளனர். ஆனால் இரவு 9 மணிக்கு கௌதம் சுயநி னைவின்றி கிடந்ததால் அவரை கமுதி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் கெளதம் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சித்ராதேவி அளித்தப் புகாரின் பேரில் மண்டலமா ணிக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Monday, September 26, 2022

September 26, 2022

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Audio link

Touch Here

Total Pageviews

Search This Blog