Breaking

Showing posts with label Budget 𝟐𝟎𝟐𝟑. Show all posts
Showing posts with label Budget 𝟐𝟎𝟐𝟑. Show all posts

Monday, February 19, 2024

February 19, 2024

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்

சென்னை: “வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, 2497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

> அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட உண்டு. உறைவிட மாதிரிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் 352 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. > நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 ரூபாய் செலவில் 8,200 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi Tech lab) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. மேலும், வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

> கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இல்லத்தில் முடங்கிக் கிடந்தவை குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களது கல்விக் கனவும் தான். அதனை மீட்டு அவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கவும் கற்றல் இழப்பை ஈடுசெய்யவும், இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் முதல்வரால் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை மீட்டெடுத்ததில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. > வாசிப்பை நேசிக்கும் மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிடும் உயரிய நோக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022.23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில், சுமார் 55 லட்சம் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

மேலும், இக்கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72 இளைஞர்கள் அறிவுசார் தளத்தில் உயர்ந்திட நூலகங்கள் முதன்மைக் களமாக உள்ளன. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு - செலவத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

# அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

# தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு # உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

# பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

# இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி

Tuesday, March 21, 2023

March 21, 2023

TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!

, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியிடப்படாததற்கு, பல்வேறு சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:

பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடியை களைவதற்கான வழிமுறைகள் குறித்து, எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத் தலைவர் குமார்:

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.

தி.மு.க., அரசின் மூன்றாவது பட்ஜெட், அரசு பணியாளர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட்:

அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கது.

தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியான, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடை களைதல், ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் ஊதியக்குழுவின், 21 மாத நிலுவை தொகை வழங்குதல் போன்ற நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Sunday, March 19, 2023

March 19, 2023

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?



தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? ,

தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என முதல்வர் அறிவித்தார்.

எனவே, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும் என்பதை அறிய, மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.

அவர்களை சமாதானப்படுத்த, முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு. நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இம்மாதம் 31ம் தேதி மாநிலத்தின் கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது எவ்வளவு கடன் உள்ளது என்ற விபரமும் நாளைய பட்ஜெட்டில் தெரியும்.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும். அதன்பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும்.

இக்கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Monday, March 13, 2023

March 13, 2023

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. எரிசக்தி துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில் முதலீடு, கைத்தறி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது.

Thursday, March 02, 2023

March 02, 2023

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை



தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்

Thursday, February 23, 2023

February 23, 2023

Tamil Nadu Government Budget - 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் !



2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்!!!

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2வது வாரம் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 அறிவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் மாதம் 2வது வாரம் அதாவது 17ம் தேதி கூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் வரவு-செலவு திட்டத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் முடிந்த அடுத்த நாள், 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வு கூட்டத்தில், தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 3வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ‘மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம்’ என்று கூறப்படுகிறது. காரணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதன்படி, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தகுதியான பெண்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே 5 மாதங்களில் உதவித்தொகை வழங்கும் பணியை தொடங்க முடியும். இதனால், தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, February 02, 2023

February 02, 2023

தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New Regime (புதிய முறைக்கு) மட்டும் தான் பொருந்தும் என்பதை Old Regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியீடு - செய்தி வெளியீடு எண் : 210 - நாள் : 01.02.2023

தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New Regime (புதிய முறைக்கு) மட்டும் தான் பொருந்தும் என்பதை Old Regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியீடு!
செய்தி வெளியீடு எண் : 210

நாள் : 01.02.2023

தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை - தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்", "இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு". “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்", “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது" போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைந்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை. அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, February 01, 2023

February 01, 2023

Income tax slab : Budget2023: புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

Income tax slab :Budget2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

new income tax slabs:புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேசமயம், பழைய வரிவிதிப்பு முறை தொடரும். இந்த வரிவிதிப்பு முறையிலும் ஐடி ரிட்டன் தாக்கல் செய்து, வரிவிலக்கு, முதலீட்டு, செலவுக் கழிவுகளை அரசிடம் இருந்து பெற முடியும்.
அதேசமயம், புதிய வருமானவரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்கள் எந்தவிதமான முதலீட்டுக் கழிவுகளையும், விலக்குகளையும் அரசிடம் இருந்து பெற முடியாது. 

ஆனால், ரூ.50 ஆயிரம்வரை நிரந்தரக் கழிவு மட்டும் பெறலாம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பழைய வரிவிதிப்பு முறையில் இதேபோன்ற கழிவுகள் இருப்பதால், ரூ.5 லட்சம்வரை வருமானம் இருப்போர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2.50 லட்சம் வரை பழைய வரிவிதிப்பு முறையில் இருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் ஈட்டுபவர் ரூ.33,800 வரை சேமிக்க முடியும். 

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.23,400 வரையிலும், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.49,400வரை சேமிக்க இயலும். உயர்வருமானம் உள்ள பிரிவினரான ஆண்டுக்கு ரூ.2 கோடிவரை வருமானம் ஈட்டுவோருக்கான சர்சார்ஜ் 37சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5.50 கோடி வருமானம் ஈட்டுவோர் ரூ.20 லட்சம்வரை சேமிக்க முடியும்.

புதிய வருமானவரி முறையின் படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரிவதிக்கப்படும்.

 ரூ.6 முதல் ரூ.9 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வரிவிதிக்கபப்டும்.

ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரிவிதிக்கப்படும்

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். 

ரூ.15.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக ரூ.52.500வரை நிரந்தரக் கழிவு பெறலாம்.
February 01, 2023

𝐔𝐍𝐈𝐎𝐍 𝐁𝐔𝐃𝐆𝐄𝐓 𝟐𝟎𝟐𝟑 - பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

புதிய வருமான வரி:

7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை

தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு

12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15%வரி

7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி

15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

Breaking News: நிதி பற்றாக்குறை 6.4 சதவீதம்

𝐔𝐍𝐈𝐎𝐍 𝐁𝐔𝐃𝐆𝐄𝐓 𝟐𝟎𝟐𝟑 - பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

பழங்குடியின மாணவர்களுக்காக 38000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 78000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வீடுகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக் கூறிய அவர், 3 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான ஒதுக்கீடு 15000 கோடி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்

5G சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்

தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் கொண்டுவரப்பட்டது

2070 ஆண்டுக்குள் ஜீரோ எமிஷன் எனப்படும் பூஜ்ஜிய வெளியேற்றம் நிலை எட்டப்படும்

இதற்காக தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் மீன்வளத்துறைக்கு 6000 கோடி*

விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல் மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.*

இதன்மூலம் மீன்வளத்துறைக்கு பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.*

மத்திய பட்ஜெட் 2023 - 24

அடிப்படை கட்டமைப்பு துறைக்கு 33% நிதி ஒதுக்கீடு*

பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.*

அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.* பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

*✍️போக்குவரத்து துறைக்கு ₹78,000 கோடி ஒதுக்கீடு*

*✍️மீன்வளத்துறைக்கு ₹6,000 கோடி ஒதுக்கீடு*

*✍️பிரதரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு*

*✍️பழங்குடியின மேம்பாட்டுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு*

*✍️கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ₹5,300 கோடி.*

*✍️மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ₹1.3 லட்சம் கோடி*

நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு

தேக்னா அப்னா தேஸ் ( உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டுவரப்படுகிறது நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும். கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கவும் அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம்

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்.

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் ஊழியர்கள் பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்படலாம்.

அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.
*மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் - 1*

47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி

உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு

தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

"விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு

குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை

ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம் 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு *மத்திய பட்ஜெட் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை...* *முக்கிய அம்சங்கள்...*

இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது

கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

"நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்"

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்

9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு

11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது

2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்

சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது

"9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்" *7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்*

*1. ஒருங்கிணைந்த வளர்ச்சி*

*2. அனைவரையும் சென்றடைதல்*

*3. உள்கட்டமைப்பு முதலீடு*

*4. திறன் வெளிக்கொணர்தல்*

*5. பசுமை புரட்சி*

*6. இளைஞர் சக்தி*

*7. நிதித்துறை*

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,04,000 கோடி

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,40,000 கோடி

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்

"157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகளில் அமைக்கப்படும்"

"நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சிறிய நீர்பாசனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ5,300 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு!

கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Total Pageviews

Search This Blog