Tamilnadu Budget 2023
March 14, 2025
Showing posts with label Tamilnadu Budget 2023. Show all posts
Showing posts with label Tamilnadu Budget 2023. Show all posts
Friday, March 14, 2025
Tuesday, March 21, 2023
Tamilnadu Budget 2023
March 21, 2023
TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!
TN BUDGET - அரசு ஊழியர் சங்கங்களின் அதிருப்தி அறிக்கை!
, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியிடப்படாததற்கு, பல்வேறு சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டம் அமல், காலியாக உள்ள, 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து, பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடியை களைவதற்கான வழிமுறைகள் குறித்து, எந்த நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத் தலைவர் குமார்:
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோருக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பும் இல்லை.
தி.மு.க., அரசின் மூன்றாவது பட்ஜெட், அரசு பணியாளர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட்:
அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதியான, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடை களைதல், ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் ஊதியக்குழுவின், 21 மாத நிலுவை தொகை வழங்குதல் போன்ற நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Sunday, March 19, 2023
Tamilnadu Budget 2023
March 19, 2023
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? ,
தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என முதல்வர் அறிவித்தார்.
எனவே, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும் என்பதை அறிய, மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.
அவர்களை சமாதானப்படுத்த, முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு. நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இம்மாதம் 31ம் தேதி மாநிலத்தின் கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது எவ்வளவு கடன் உள்ளது என்ற விபரமும் நாளைய பட்ஜெட்டில் தெரியும்.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும். அதன்பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும்.
இக்கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
Thursday, March 02, 2023
Tamilnadu Government
March 02, 2023
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்