Breaking

Showing posts with label Government. Show all posts
Showing posts with label Government. Show all posts

Thursday, January 19, 2023

January 19, 2023

10ம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சை கேள்வி - அரசுக்கு புது நெருக்கடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எது..? 10ம் வகுப்பு வினாத்தாளில் சர்ச்சை கேள்வி - மம்தா அரசுக்கு புது நெருக்கடி

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வங்காள மொழியின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மாதிரி தாளில் கேட்கப்பட்ட கேள்வி இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வழக்கமாக அந்த மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், அதற்கான வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்பு புத்தகமாக தயாரிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் புத்தகத்தில் ஆசாத் காஷ்மீர் வரைபடத்தை காட்டவும் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதாவது, ஆசாத் காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பொருள்படும். 132வது பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மேற்கு வங்காள அரசுக்கும், அந்த மாநில கல்வி வாரியத்திற்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் திலீப்கோஷ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மம்தா தலைமையிலான அரசு ஆன்டி – இந்தியா மனப்பான்மையை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், பல பா.ஜ.க. தலைவர்களும் இந்த விவகாரத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள பள்ளிக்கல்வி தலைவர் ராமானுஜ் கங்கோபத்யாய் அளித்துள்ள விளக்கத்தில்,  “எங்களது நிபுணர்கள் வினாத்தாளை ஆய்வு செய்வார்கள்.

யார் இந்த வினாத்தாளை உருவாக்கியது? இதற்கு ஒப்புதல் வழங்கியது யார்? என்று கண்டறியப்பட்டு சட்டவிதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்தும் சட்டவிதிப்படி நடக்கும்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி எம்.பி.யான சாந்தனுசென் கூறியிப்பதாவது,  “பள்ளிக்கல்வி ஆணையம் தனது கடமையை செய்யும். ஆனால், பா.ஜ.க.விற்கு இதைப்பற்றி பேசுவதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை. தேசிய கல்விக்கொள்ளை 2022 மூலம் நாட்டின் கல்வி முறையை காவிமயமாக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது” என்று கூறியுள்ளார். இந்த கேள்வித்தாள் விவகாரம் தற்போது மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக நிகழ்ந்து வருகிறது. மேலும், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதனால், காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நிகழ்ந்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதால் அவர்களுடனும் இந்திய ராணுவம் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ.க. இந்த விவகாரத்தில் பெரியளவில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 01, 2023

January 01, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்வு கொடுக்குமா அரசு? கண்டுகொள்ளாத தி.மு.க - Will the government give life to secondary teachers? The DMK did not notice

இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்வு கொடுக்குமா அரசு? கண்டுகொள்ளாத தி.மு.க - Will the government give life to secondary teachers? The DMK did not notice

இடைநிலை ஆசிரியர்களை கண்டு கொள்ளவில்லை தமிழக அரசு என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம், தகுதி தேர்வு ரத்து செய்தல் என பல்வேறு அறிக்கைகளையும் தன்னுடைய தேர்தல் பணிகளில் கொடுத்தது தி.மு.க. ஆனால் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதிகளையும் தற்போது வரை நிறைவேற்றாமல் மௌனம் சாதிப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்கள். பள்ளி கல்வித்துறையில் வேறொரு பணிகளிலும் இல்லாத அளவிற்கு ஊதியம் முரண்பாடு பிரச்சனையை தான் இடைநிலை ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். பணியாற்றியவர்களுக்கு காலம் முறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படை ஊதியம் 4000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு ஏழாவது ஊதிய குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு 4,200 ரூபாய் தர வேண்டும் ஊதியம் இணை நிர்ணயித்தது.

ஆனால் மாநில அரசு வெறும் 2,800 தான் வழங்குகிறது. தொடர்ந்து இதனுடைய ஆசிரியர்களுக்கு நடக்கும் ஊதியம் முரண்பாடுகள் குறித்து தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். தனது வாக்கு வங்கியை மாற்ற தி.மு க பல்வேறு அறிக்கைகளை தனது வாக்குறுதியாக வெளியிட்டது. ஆனால் ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.

Tuesday, September 20, 2022

September 20, 2022

மாணவர்களின் உயிரை 'காவு' வாங்கும் முன் போதிய பஸ் இயக்குமா அரசு?

சீர்காழி சுற்று வட்டார கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பள்ளிக்குப் மாணவர்கள் செல்வதை தடுக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்டு 79 கிராமங்களும் 120-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகருக்கு வரவேண்டி உள்ளது.

இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும், சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பெருகிய நிலையில் கிராமபுற ஏழை எளிய மக்கள் பஸ்கலை மட்டுமே இன்றளவும் நம்பியுள்ளனர். குறிப்பாக காலை பள்ளி, கல்லூரி, வேலை வாய்புக்காக நகர்பகுதிக்கு செல்ல போதிய எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்ஸின் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர். ஒரு நகர பஸ்ஸில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து செல்வதால் அதிக கூட்ட நெரிசலுடன் ஆபத்தும் தொடர்கிறது.

எனவே கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது கிராம புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
September 20, 2022

பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல்

பள்ளியின் உடைமைகளுக்கு பாதுகாப்பு; தமிழக அரசு அரசாணையை வெளியிட வலியுறுத்தல் - Security of school property; Urge Tamil Nadu government to issue an ordinance

தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இந்த மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்ராஜ் எம்.பி., சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் பலர் பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் வகுப்புகளைத் தொடங்க நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க பள்ளிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுமார் 75 சதவீத உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க வேண்டும்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலமும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கல்விக் கட்டணங்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தாளாளர்கள் கலந்து கொண்டுபேசினார்கள். முடிவில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருப்பூர்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Sunday, August 21, 2022

August 21, 2022

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Wednesday, March 09, 2022

March 09, 2022

வெற்றிலையில் 1330 திருக்குறள் எழுதி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு முயற்சி

வெற்றிலையில் 1330 திருக்குறளை எழுதிய அரசு பள்ளி தமிழ் ஆசிரியைக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இவரது சாதனை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி அகோர வீரபத்திரசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். மனநலன் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து, இரவு தங்க வைத்து வேண்டி கொண்டால், நோய் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்வதால் அனுமந்தபுரம் பிரபலமான ஊராக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஊர், தற்போது உலகளவில் புகழ்பெறும் வகையில், மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

அனுமந்தபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நாகப்பட்டினத்தை சேர்ந்த சீதளாதேவி (42), தமிழ் ஆசிரியையாக பணியாற்றுகிறார். அவர், குழந்தையாக இருந்தபோது கிருபானந்த வாரியாரின் மடியில் தவழ்ந்து வளர்ந்த அவர், தமிழில் முதுகலை பட்டம் முடித்து, கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளியில், தமிழ ஆசிரியையாக பொறுப்பேற்று அனுமந்தபுரத்திற்கு வந்தார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட சீதளாதேவி, 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்று, அதனை மாணவர்களுக்கும் போதிக்கும் பணியையும் செய்து வந்தார். இதைதொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை முன் வைத்து அவர், பல்வேறு திருக்குறள் தொடர்பான சாதனைகளை செய்து வருகிறார். ஐஸ் குச்சி எனப்படும் மூங்கில் பட்டைகளை சேகரித்து, 223 குச்சிகளில் 1330 திருக்குறள்களை 19 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். மேலும் உலகளவில் திருக்குரளை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த 2020ம் ஆண்டு கரும்பலகைகளில் எழுதப் பயன்படும் 268 சாக்பீஸ்களில், 12.5 மணிநேரத்தில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைத்தார்.

இதையும் படிக்க | ‘நம் பள்ளி நம் பெருமை’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கம்

இந்நிலையில் கடந்த வாரம் வெற்றிலையில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைக்க முயற்சித்து வெற்றி கண்டுள்ளாம்ா. 43 வெற்றிலைகளை இதற்காக பயன்படுத்திய சீதளாதேவி, அதற்காக 20 மணி நேரமே எடுத்து கொண்டார். ஆரம்பத்தில் வெற்றிலையில் எழுதத் தொடங்கியபோது பேனா மையின் சூடு தாங்காமல் வெற்றிலை வாடி விட்டதாகவும், இதையடுத்து ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று வெற்றிலையை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்துக்கு அனுப்பியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த சாதனை தற்போது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நேற்று நேரடியாக அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று, ஆசிரியை சீதளாதேவிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் அளித்து வாழ்த்து பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சூர்யகுமார் தலைமையில் கிராம மக்களும், தலைமை ஆசிரியர் நேரு தலைமையில் சக ஆசிரியர்களும் சாதனை புரிந்த ஆசிரியை சீதளாதேவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, அனுமந்தபுரம் ஆசிரியை சீதளாதேவியின் சாதனை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அங்கீகாரத்தை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Friday, February 11, 2022

February 11, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்!

''தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மேலும் அதிகப்படுத்துவது என்பது, அரசின் கொள்கை முடிவு. ''அதை அரசால் செய்ய முடியும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேஷ் கூறினார்.

கொள்கை முடிவு

'நீட் நுழைவுத் தேர்வே வேண்டாம்' என்று, தமிழக சட்டசபை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுடைய வாய்ப்பை உயர்த்த, வேறு ஏதேனும் வழி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, வழக்கறிஞர் ஜெயகணேஷ் கூறியதாவது:

இதையும் படிக்க | சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு கிடைக்குமா?

மருத்துவ படிப்பு இடங்களுக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 27 சதவீதம் வழங்கும் முடிவை எடுத்தது, மத்திய அரசு. அது, அரசின் கொள்கை முடிவு. அதேபோல், தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போதுள்ள, 7.5 சதவீதத்தில் இருந்து, 10 அல்லது 15 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க, கொள்கை முடிவு எடுக்கலாம்.இதனால், தகுதியுள்ள இதர பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் முக்கியம். வாய்ப்பு பாதிப்பு

ஏனெனில், தமிழகத்தில் மொத்தமுள்ள, 7,825 மருத்துவ படிப்பு இடங்களில், மாநில தொகுப்பில், 6,999 இடங்கள் மட்டுமே உள்ளன. பல் மருத்துவத்தில் 1,930 இடங்கள் உள்ளன. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 1.10 லட்சம் மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதினர். போட்டி கடுமையாக உள்ள சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுமானால், அது இதர மாணவர்களுடைய வாய்ப்பை பாதிக்கலாம். தங்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று, அவர்கள் நாளை நீதிமன்றத்தை நாடவும் முடியும்.

தற்போதுள்ள சூழலில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தொடர்வதே சரி. அதேசமயம், அரசு பள்ளி மாணவர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதையும் படிக்க | உதயநிதி பிரசாரத்தில் திமுக கொடியுடன் பள்ளி மாணவர்கள்

கூடுதலான மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்படும் போதோ, இருக்கும் கல்லுாரிகளிலேயே மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் போதோ, படிப்படியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்திக் கொள்ளலாம். அப்போது, பொதுப் பிரிவு மாணவர்களுடைய வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்படாது. இவ்வாறு ஜெய கணேஷ் கூறினார். - நமது நிருபர் --

Thursday, February 10, 2022

February 10, 2022

பொதுப்பணி, நீர்வளத்துறையில் 607 உதவிசெயற்பொறியாளர் பணியிடங்கள் காலி: தமிழக அரசு அறிவிப்பு

பொதுப்பணித்துறையில் புதிதாக மண்டலம், கோட்டம், உபகோட்டமும், நீர்வளத்துறைக்கு புதிதாக கோட்டம், உபகோட்டம் ஏற்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையும் படிக்க | மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

அதன்படி, பொதுப்பணித்துறையில் 6 தலைமை பொறியாளர் பணியிடங்களும் நீர்வளத்துறையில் 14 தலைமை பொறியாளர் பணியிடங்கள் என மொத்தம் 20ம், பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளர் 17 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 38 பணியிடங்கள் என மொத்தம் 55ம், பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர் 72 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 154 பணியிடங்கள் என மொத்தம் 226ம், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் 252 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 537 பணியிடங்கள் என மொத்தம் 789 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் 730 பணியிடங்களும், நீர்வளத்துறையில் 1551 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மதிப்பீடு தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறையில் உதவி செயற்பொறியாளர் 363 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் 244 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | 'பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கல்வி

இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளாக உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் வழக்கை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மதிப்பீட்டை வைத்து காலி பணியிடங்கள் நிரப்பபடும்’ என்றார்.

Total Pageviews

Search This Blog