Breaking

Showing posts with label application for NEET Exam announced. Show all posts
Showing posts with label application for NEET Exam announced. Show all posts

Saturday, May 14, 2022

May 14, 2022

திட்டமிட்டப்படி மே 21ம் தேதி மருத்துவ முதுநிலை நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மருத்துவ முதுநிலை நீட் தேர்வு

வரும் 21ம் தேதி 2022-க்கான முதுநிலை நீட் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022ம் ஆண்டு நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில், ‘ஏற்கனவே 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால், 2022க்கான தேர்வை நடத்தினால் பெரும் குழப்பம் ஏற்படும். எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நீதிபதி டி.ஒய்.சந்திராசூட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் உட்பட அனைவரும். ‘2021-க்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத வாய்ப்புள்ளது. எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் 2022ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்,’ என கோரினர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதுநிலை நீட் தேர்வை வரும் 21ம் தேதி நடத்த தடை விதிக்க முடியாது. இது, அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. தேர்வு தேதியை மாற்றக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என அறிவித்தனர்.

Tuesday, April 05, 2022

April 05, 2022

NEET Exam 2022 : நீட் தேர்வுக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு எப்போது?

2022 நீட் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது

NEET EXAM UPDATES: 2022 ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப செயல்முறை பற்றி அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்க இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால், தேசிய தேர்வு முகமை இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இதற்கிடையே, 2022 நீட் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என Careers360 தளத்திடம் பேசிய தேர்வு தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தி, ஆங்கிலம் தவிர 11 பிராந்திய மொழிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடக் கேள்வித்தாள் தயாரித்து நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்தப்படுகிறது. இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.



அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Total Pageviews

Search This Blog