Textbook
January 23, 2026
Showing posts with label Textbook. Show all posts

Friday, January 23, 2026
Friday, December 05, 2025
Saturday, May 10, 2025
Friday, January 03, 2025
Thursday, January 02, 2025
Tuesday, December 17, 2024
Friday, May 03, 2024
Thursday, May 02, 2024
Wednesday, October 25, 2023
textbooks
October 25, 2023
இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் Bharat instead of India in textbooks
இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத்
என்சிஇஆர்டி ன் ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.இனி என்சிஇஆர்டி யின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாரத் என்ற வார்த்தையே இருக்கும். இந்தியாவுக்கு பதில் பாரத் - NCERT பரிந்துரை!
சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை - கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!
ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் மேஜையிலும் | இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது!
பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவும் இந்த கவுன்சில் பல்வேறு நிபுணர்களை கொண்டு குழுக்களை அமைத்துள்ளது.
இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என அச்சடிக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரிந்துரையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இனி அச்சடிக்கப்படும் NCERT-ன் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இதே போன்று, இந்திய வரலாறு பாடப்புத்தகத்தில் பண்டைய வரலாறு என்ற தலைப்புக்கு பதிலாக, கிளாசிக்கல் வரலாறு என்ற பெயர் மாற்றவும், இந்திய அறிவு அமைப்பை பிரதானப்படுத்தவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tuesday, September 26, 2023
textbooks
September 26, 2023
30-50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் - அக்டோபர் 15 வரை விற்பனை!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் 30-50 சதவீத தள்ளுபடி விலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும்.
எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும்.
நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். *இணைய வழியில் (Internet Banking) தொகை செலுத்தும் முறை.*
வங்கி கணக்கு பெயர் – INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
கணக்கு எண் – 33068172999
ஐஎப்எஸ்சி(IFSC) குறியீடு எண் – SBIN0013361
இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்
பயிலக வளாகம் தரமணி, சென்னை – 600 113.
தொடர்புக்கு – 044- 22542992, 044 – 22541436 / 9600021709.
Saturday, December 17, 2022
textbooks
December 17, 2022
'தமிழகத்திலேயே பாட நூல்களை அச்சடிக்க ஏற்பாடு’

பாட நூல்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி தெரிவித்தாா்.
சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பாட நூல்கள் அச்சிடுவோா் நலச் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் உதயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ. லியோனி பேசியதாவது:
தற்போது பாட நூல்கள் தமிழகத்தில் உள்ள அச்சகங்களில் 92 சதவீமும், வெளிமாநில அச்சகங்களில் 8 சதவீமும் அச்சிடப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் தமிழகத்திலேயே அச்சிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஒப்பந்தப்புள்ளி பெற வேண்டுமென்றால், அது சா்வதேச ஒப்பந்தப்புள்ளியாக பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. தற்போது அதிகாரிகளிடம் வெளிமாநிலத்தினா் புத்தகம் அச்சிட ஒப்பந்தப்புள்ளி பெற்றாலும், அவா்களது அச்சகம் தமிழகத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன். அதிகாரிகளும் இதற்கு ஒப்புதல் வழங்க உள்ளனா்.
எனவே, வரும் காலங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் அனைத்தும் நமது மாநிலத்திலேயே அச்சிடப்படும். இதனிடையே, அச்சு மை உள்ளிட்டவை விலை உயா்ந்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறும் போது, தற்போதய அச்சடிப்புக் கட்டணத்தைவிட 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, புத்தகங்கள் விநியோகம் செய்யும் மையங்கள் அதிகரித்துவிட்டன. இதனால், போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது என சங்கம் கூறியுள்ளது.
அதிகப்படியான செலவுக்கு ரசீது கொடுத்தால் பாட நூல் கழகம் அந்தத் தொகையை வழங்கத் தயாராக உள்ளது. மேலும், புத்தகங்கள் அச்சிட காகிதம் காலதாமதமின்றி வழங்க நடவடிகை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பாட நூல் அச்சிடுவோா் சங்கச் செயலா் குமரேசன் நன்றி கூறினாா்.

Monday, December 12, 2022
Textbook
December 12, 2022
பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை
பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு
புதிதாக வழங்க நடவடிக்கை
பலத்த மழை காரணமாக மாணவ, மாணவிக ளின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகள் பாதிப்படைந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தன. இதனால் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சான் றிதழ்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக மாணவர்கள்,பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும் போது, 'புயல் மற்றும் கனமழையால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் எதுவும் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும். இதன் விவரங்கள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக சேகரிக்கப்பட்டு விநியோ கிக்கப்படும்.
அதேபோல், கல்வி ஆவணங்கள் ஏதும் சேதமடைந்தால் மாற் றுச் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும். பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீர், முறிந்து விழுந்த மரங்களை உடனே அகற்றவும் தலைமையாசிரியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருந் தால் மாற்று வகுப்பறைகளில் மாணவர்களை அமர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

Sunday, October 30, 2022
Textbook
October 30, 2022
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதஉள்இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில்சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கு தற்போது நடந்து முடிந்துள்ள முதல்கட்ட கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் என்பதால், முதல் ஆண்டில்ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் இணைந்து மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிட்டுள்ளன.
முதல்கட்டமாக மாணவர்களுக்கான ‘கிரேஸ் அனாடமி கைட்டன்’,‘ஹால் டெக்ஸ்ட் புக் ஆஃப் மெடிக்கல் பிசியாலஜி’ உள்ளிட்ட4 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் 30-க்கும்மேற்பட்ட மருத்துவப் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவக் கல்விஇயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ் பாடத் திட்டங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. தாய்மொழியில் மருத்துவம் தொடர்பான புரிதலுக்கு இது உதவியாக இருக்கும். ஆனால், தேர்வை தமிழில் எழுதுவது குறித்து முடிவு எடுக்கவில்லை” என்றனர்.

Wednesday, August 03, 2022
பாடங்களில் அதிரடி மாற்றம்
August 03, 2022
11ம் வகுப்பு பாடங்களில் அதிரடி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
11ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, "கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள்" பாடத்துக்கு மாற்றாக, இனி "வேலைவாய்ப்பு திறன்கள்" பாடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனை, tnschools.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 01, 2022
மாணவிகள்
August 01, 2022
இந்த வயசுல இப்படி ஒரு திறமையா.. 3 மொழிகளில்16 புத்தகங்களை எழுதிய +1 மாணவி..
Coimbatore Latest News : கோவை புத்தக திருவிழாவில் 16 வயதில் 16 நூல்கள் எழுதியுள்ள இளம் எழுத்தாளரின் புத்தகங்கள் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில் 6வது புத்தக கண்காட்சி கோவை அவினாசி சாலை பகுதியிலுள்ள கொடிசியா வணிக வளாகத்தில் கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தக கண்காட்சியில் 250 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தினர்.
சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..
இதில் சக்தி ஸ்ரீ தேவி என்ற 16 வயது இளம் எழுத்தாளர், தான் எழுதியுள்ள 16 புத்தகங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்-பிரியா தம்பதியரின் மகள் சக்திஸ்ரீதேவி, டேராடூனில் 11ம் வகுப்பில் பயின்று வருகிறார்.
தனது 8 வயது முதல் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் கற்பனை கதைகள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள் என பல்வேறு வகைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.
16 புத்தகங்களும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. இருந்த போதிலும் அவற்றின் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் உள்ளன. இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் புத்தகங்களை எழுதியுள்ளார்.
சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்.. புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாது பாடகராகவும், பேச்சாளராகவும் உள்ளார் சக்திஸ்ரீதேவி.
சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..
ஒவ்வொரு கதைகளை படிக்கும்போதும் 30 நாளில் ஒருவரின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் இவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பேன் என்கிறார்நம்பிக்கையுடன்.

Friday, July 29, 2022
புத்தக அட்டை
July 29, 2022
புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை
கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடகத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையை பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Sunday, July 17, 2022
பாடப்பிரிவு
July 17, 2022
பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.

2022-2023ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு , அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் , பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் மட்டும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மறுசீரமைக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
Tuesday, July 12, 2022
பாடப்புத்தகங்கள்
July 12, 2022
விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது.
காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் விநியோகிக்க ஏற்பாடுகள் தீவிரம்

Tuesday, June 21, 2022
Textbook
June 21, 2022
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு
The case against the provision that private schools should provide free textbooks to students was dismissed. The High Court dismissed the petition claiming that the case was delayed 12 years after the rules were brought.
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. விதிகள் கொண்டு வரப்பட்ட 12 ஆண்டுகள் கழித்து தாமதமாக வழக்கு எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.