DSE
August 26, 2025
Showing posts with label Departments of School Education. Show all posts

Tuesday, August 26, 2025
Thursday, November 28, 2024
Friday, November 24, 2023
DSE
November 24, 2023
வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்

வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல் Abolition of 200 jobless posts: Instruction to School Education Department
பணி ஒதுக்கீடு இல்லாத, 200க்கும் மேற்பட்ட பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு தமிழக நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும், துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள பல்வேறு பதவிகள் உள்ளன. இவை அந்தந்த துறைகளுக்கு தேவையான பணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறையில், பல்வேறு பணிகள் அடிப்படையில், 350 பதவிகள் நியமன பட்டியலில் உள்ளன. இவை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. இவற்றில், தற்போதைய தேவைகள் அடிப்படையில், பழைய, புதிய பதவிகள் குறித்து, தமிழக மனிதவள மேலாண்மை துறை ஆய்வு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, பணிகள் இல்லாத மற்றும் ஒரே பணிக்கு கூடுதலாக உள்ள பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, தமிழக பள்ளி கல்வித்துறையில் தற்போதுள்ள, 350 பதவிகளை ஆய்வு செய்து, அவற்றில், தேவையில்லாமலும், உபரியாகவும் உள்ள, 200 பதவிகளை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்படும் பதவிகளுக்கான பணியிடங்களை, தற்போது தேவைப்படக்கூடிய பதவிகளை, இணையான வேறு பதவி பட்டியலில் இணைத்து கொள்ளலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tuesday, August 16, 2022
Latest News
August 16, 2022
மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் - பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு
1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Friday, August 12, 2022
LEAVE RULES
August 12, 2022
E.L. Deduction Clarification by CEO, CoSE and Deputy Secretary of School Education!!
E.L. Deduction Clarification by Karur CEO, CoSE and Deputy Secretary of School Education!!
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Monday, April 11, 2022
Departments of School Education
April 11, 2022
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு விவரம்
நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9,494 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம்
முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
11, 12-ம் வகுப்பில் Computer Science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனிக் கட்டணம் ரத்து
கட்டணத்துக்கான செலவை அரசே ஏற்கும்.
பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி & இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி செலவில் பள்ளிக்கல்வித்துறை திட்டம்.
அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டிலிருந்து ரூபாய் 200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்
பள்ளிக்குச் செல்ல இயலாது மாணவர்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி.
அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க 7 கோடியில் செம்மைப் பள்ளி
சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும்; போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் விமர்சனங்கள் என்பது கடலில் எறியப்படும் கல்லை போன்றது. கல்தான் காணாமல் போகும்.
விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும் ; நாம் கடலாக இருப்போம் என்று சொல்லி எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 30 கொடியில் ஆங்கில மொழி ஆய்வகங்கள்.
150 கொடியில் 7500 திறன் வகுப்பறைகள்
மணப்பாறை,செஞ்சி,தளி,திருமயம் அந்தியூர்,அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி,ரெட்டியார்சத்திரம் வடலூர்,ஸ்ரீபெரும்புதூர்.
10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று (ஏப்.,11) சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்க உள்ளது.
தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. இதில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை, உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட உள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு
ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற உள்ளது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்தை, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.
தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒரு மனதாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை; கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தராததை கண்டித்து, இன்றைய சட்டசபை கூட்டத்தில் கேள்விகளை எழுப்பவும், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணிக்கவும், அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்றைய சட்டசபை கூட்டம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.