Breaking

Showing posts with label TNPSC Notice. Show all posts
Showing posts with label TNPSC Notice. Show all posts

Friday, July 17, 2026

Friday, July 14, 2023

Tuesday, May 17, 2022

May 17, 2022

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு எப்போது? - ஆணையம் விளக்கம்

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு

குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களிலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
ஆணையம் விளக்கம்

நடப்பாண்டில் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் அறைக்குள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

Wednesday, April 20, 2022

April 20, 2022

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்: TNPSC அறிவிப்பு

இந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என TNPSC அறிவித்துள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் TNPSC இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog