Breaking

Showing posts with label TREASURIES. Show all posts
Showing posts with label TREASURIES. Show all posts

Wednesday, January 18, 2023

January 18, 2023

TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Oral Test) - 18/01/2023 - PDF

TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Oral Test)

POST OF ACCOUNTS OFFICER, CLASS III INCLUDED IN THE TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE

LIST – OT

The list of register numbers of candidates provisionally admitted to onscreen certificate verification in the ratio of 1:3/1:4 for the post of Accounts Officer, Class-III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service was published on the Commission’s Website on 13.01.2023 based on the results of the examination (Computer Based Test) conducted by the Commission on 08.10.2022 FN & AN.

Based on the outcome of onscreen certificate verification, the register numbers of candidates mentioned below have been provisionally admitted to Oral Test in the ratio of 1:2/1:3 based on the marks obtained by the candidates in the examination (Computer Based Test) and with reference to rule of reservation of appointments. The Oral Test will be held on 25.01.2023 at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications.

The above details will be made available in the Commission’s website and the candidates will be informed of the above fact only through SMS and email accordingly. Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post.

CLICK HERE TO DOWNLOAD

Thursday, June 23, 2022

June 23, 2022

கருவூல கணக்குத் துறை 2022 - ம் ஆண்டு வருடாந்திர நேர்காணல் - அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக

கருவூல கணக்குத் துறை 2022 - ம் ஆண்டு வருடாந்திர நேர்காணல் - அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக

Saturday, September 25, 2021

September 25, 2021

10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.

கோரிக்கை விவரம் அரசாணை எண்.37, நாள்.10.03.2020 மற்றும் P&AR துறை அரசாணை எண்:116, P&AR துறை நாள்.15.10.2020 ஆகிய 10.03.2020க்கு முடித்து ஊக்க தகுதியுள்ளவர்கள் அரசாணைகளின்படி முன் உயர்கல்வி ஊதிய உயர்வு பெற அரசுக்கு பட்டியல் நிதித்துறை அனுப்பப்பட்டு, எப்போது கிடைக்கும்? மேற்கண்ட நடவடிக்கை பற்றிய விவரம் மேற்கண்ட அரசாணைகளின்படி ஊக்க ஊதிய உயர்வு சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆசிரியர்களின் விவர பட்டியல் பெறப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.

Tuesday, August 31, 2021

August 31, 2021

September Month Professional Tax 1250 - நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில் வரி நினைவூட்டல் தகவல்.

தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2021-2022ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில்வரியினை கீழ்கண்ட அட்டவணையின்படி தொழில்வரி தொகையினை பிடித்தம் செய்து பணியாளர்களின் பெயர் மற்றும் அவரவர்களின் ஆறு மாத ஊதிய விவரங்கள் அடங்கிய வரைவு கடிதத்துடன் இந்நகராட்சிக்கு அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, August 28, 2021

August 28, 2021

சம்பள பட்டியல் இணையதளம் முடக்கம்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திணறல்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பட்டியல் தாக்கல் செய்வதற்கான இணையதளம் முடங்கி உள்ளதால், ஊழியர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் இதர பண பலன் பட்டியல், கருவூலத்துறையில் நேரடியாக வழங்கப்படாமல், நிதித்துறை அறிமுகம் செய்துள்ள இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.அந்த பட்டியலுக்கு, உயர் அதிகாரிகள் அனுமதி அளித்த பின், கருவூலத்தில் இருந்து, ஊழியர்களின் வங்கி கணக்குக்கு, ஆன்லைனில் சம்பளம் வரவு வைக்கப்படும். இந்த இணையதளம், அ.தி.மு.க., ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டு, அதன் வேகம் மிகவும் குறைவாக இருந்து வந்தது.சம்பள பட்டியலை பதிவு செய்ய, ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் வரை, ஊழியர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த இணையதளம் சரியாகும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இணையதள 'மக்கர்' பிரச்னை இன்னும் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத சம்பளத்துக்காக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், நான்கு நாட்களாக இணையதளத்தில் தகவல்களை பதிவேற்ற முயற்சித்து வருகின்றனர்.'சர்வர்' சரியாக செயல்படாததால், இணையதளத்தின் ஒவ்வொரு பக்கமும் பதிவாக பல மணி நேரமும் ஆவதால், சம்பள பட்டியலை பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்

Friday, July 23, 2021

July 23, 2021

அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு மாநில கணக்காயர் அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் - பி.எஃப். குறித்து தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவை : மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம்
தமிழகத்தில் அனைத்து நிலை அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்)தொடர்பாக தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவையை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. 24 மணி நேர சேவை

பல்வேறு அரசு, தனியார் துறைகளின் சேவை சார்ந்த தகவல்களைபயனாளிகள் 24 மணி நேரமும் பெறுவதற்கு ஏதுவாக, ஐவிஆர்எஸ்(Interactive Voice Response System) சேவை சமீபகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு மூலம் பதில் அளிக்கப்படும். இந்த சேவை தற்போது மாநில கணக்காயர் அலுவலகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் மேம்படுத்தப்பட்ட ஐவிஆர்எஸ் முறையை கடந்த ஜூலை 14-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. 044 - 24325050 என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு தகவல்களை பெறலாம்

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி, ஆசிரியர் சேமநல நிதி சந்தாதாரர்கள் தங்கள்வருங்கால வைப்புநிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித் தொகையை பெற அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவை குறித்த விவரங்களை இந்தசேவை மூலம் அறிந்து கொள்ள லாம். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட அதிகாரிகள், ஓய்வூதியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்தவசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும்மற்ற அரசு ஓய்வூதியர்கள், சிறப்புபிரிவின் கீழ் கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், சம்ஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். அதிகாரிகள் தங்கள் ஊதியச் சீட்டை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

Saturday, July 17, 2021

July 17, 2021

Procedure For Download Pensioner Pay Slip & Pension Pay Drawn & Form 16

கீழ்காணும் வழிமுறைகளின்படி ஓய்வூதியர்கள் online- ல் மாதாந்திர ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விபரங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Procedure For Download Pensioner Pay Slip & Pension Pay Drawn & Form 16

1 . Login - www.Karuvoolam.tn.gov.in

2. User Type - Pensioners

3 . Enter Pension Payment Order Number ( Example : PPO No : A125456 )

4. Password - Pensioner Date of Birth ( Ex : DDMMYYYY )

5. Click Reports ( Right Side Top Corner )

Thursday, July 08, 2021

July 08, 2021

NHIS Covid Cases Reimbursementநேரடியாக அசல் ஆவணங்களுடன் சென்னை கருவூலத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் - TREASURIES AND ACCOUNTS DEPARTMENT - New Health Insurance Scheme for Employees and Pensioners - Inclusion of treatment of Critical and Non-Critical care for COVID 19 positive cases under NHIS-medical reimbursement Reg

TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

New Health Insurance Scheme for Employees and Pensioners - Inclusion of treatment of Critical and Non-Critical care for COVID 19 positive cases under NHIS-medical reimbursement-Reg

Kind attention invited to the references cited.


In the references cited, the Government have issued the orders to include the treatment of Critical and Non-Critical care for COVID-19 positive cases under New Health Insurance Scheme for Employees and Pensioners/Family Pensioners. The Government have further directed that to Submit the claims for reimbursements for the treatment taken for COVID-19 Non-Critical cases with effect from 01.03.2020 by making appeal to the Commissioner of Treasuries and Accounts, Chennai.


Therefore, all the Treasury Officers/PAO's/RJD's/PPO's are requested to inform the above to the Employees/Pensioners who are seeking reimbursement in respect of Non Critical care for COVID-19 positive cases and send their representation in the prescribed format enclosed herewith to this Commissionerate for further necessary action. NHIS Covid Cases Reimbursement பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்யக் கூடாது. நேரடியாக அசல் ஆவணங்களுடன் சென்னை கருவூலத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் -

Wednesday, June 16, 2021

June 16, 2021

2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் - முதுநிலை துணை கணக்காயர் தகவல்

2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்
முதுநிலை துணை கணக்காயர் தகவல்
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) என்.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபு ரியும் ஊழியர்களின் பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி 2020-21-ம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae. tn.nic.in) பதிவேற்றப்பட்டு உள்ளது. பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2020-21-ம் வருடாந்திர கணக்கு அறிக்கையை பத விறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அலுவலக வலைத்தளத் தில் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, June 14, 2021

June 14, 2021

IFHRMS: e-SR பணிகள் (ஜூன்25 ம்-தேதிக்குள் முடிக்க) விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் தொடர்பாக மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்!

பொதுப்பணிகள் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை, தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலகு IFHRMS திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.09.2020 முதல் நடைமுறைப்படுத்தியது - முதன்மைச் செயலர் / ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது e-SR தொடர்பான பணிகளை உடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - தொடர்பாக,

ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்ட நாள்: 10.06.2021, பார்வையில் காணும் ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e-SR தொடர்பான பணிகளை எதிர்வரும் ஜீன் மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது e-SR Correction மென்பொருளில் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்ள e-SR-ல் இன்றைய தேதிவரை உள்ள அனைத்து பணி தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ள வசதியாக Edit Option வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஜீன் மாதம் 25 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே, தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் உடன் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பணிப்பதிவேட்டில் முதல்பக்கத்தில் உள்ள Bio Data பகுதியை மட்டும் e-SR-ல் Correction செய்ய இயலாது. அந்த பகுதியில் ஏதும் பதிவுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ பணிப்பதிவேட்டின் முதல் பக்கத்தை Scan செய்து அதற்கு Ticket ஏற்படுத்தி சரிசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது... இவ்வாறாக அனைத்து பணிகளையும் ஜீன் மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிந்து இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அண்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
June 14, 2021

TPF/GPF Account Slip 2020 - 2021 Published.

2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது. கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.

Saturday, June 12, 2021

June 12, 2021

தமிழக அரசின் நிதித்துறையில் இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு உத்தரவு - Establishment - Finance Department - Renaming and allocation of additional subject to Finance (PGC-II) and Finance (Pension) Sections orders - issued

நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும், ஓய்வூதியர்களின் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளை கவனிக்க அதிகாரிகள் நியமனம்!
Establishment-Finance Department - Renaming and allocation of additional subject to Finance (PGC-II) and Finance (Pension) Sections orders-issued.
Ref: U.O. Note .No.13299/OP-M/2021-4, dated. 29.04.2021

During the All Officers Meeting of Finance Department held on 23.04.2021, among otherthings, it was decided to form exclusive section in Finance Department to deal with the Health Insurance Subjects.

2. Accordingly, a new section, Finance (Health Insurance) is formed by converting/renaming the section Finance (PGC -II) with two Assistant Section Officers and the subjects of New Health Insurance Schemes for Government Employees and Pensioners hitherto dealt by Finance (Salaries) and Finance (Pension) are reallocated as detailed below:
3. The Subjects relating to Court cases on Old Pension Scheme hitherto dealt by Finance (PGC-II) Department will hereafter be dealt by Assistant Section Officer -Il in Finance (Pension) Department in addition to his regular subjects.

Friday, June 04, 2021

June 04, 2021

IFHRMS - வலைதளத்தில் சிறப்பு படி ரூ 30, மற்றும் ரூ 500 வழங்கு வதற்கான வசதி உள்ளது - மாவட்ட கருவூல அலுவலர் தகவல் - RTI NEWS

அன்பார்ந்த மூத்த ஆசிரிய சகோதர சகோதரிகள் மற்றும் மூத்த இடைநிலை ஆசிரிய சகோதர சகோதரிகள் ஆகியோருக்கான முக்கிய செய்தி:-
நமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு IFHRMS முறை அமல்
படுத்தப்பட்ட பின்பு நிறுத்தம் செய்யப்பட்ட சிறப்புப் படிகள் ரூ30 மற்றும் ரூ500 எந்த அரசாணப்படி நிறுத்தம் செய்யப்பட்டது என்று தகவல் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பம் செய்திருந்ததில் தற்போது அப்படிகளை பெறும் வசதி IFHRMS வலைத்தளத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் இதன் மூலம் நாம் அதனை (நிலுவைத் தொகை உட்பட ) பெற முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் நான் கோரிய தகவல் கேட்பு விண்ணப்பம் மற்றும் அதற்கு மாவட்டக் கருவூலம் அனுப்பிய கடிதம் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளேன்.
P.பச்சையப்பன்.
தலைமை ஆசிரியர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.ஆண்டியாபாளையம்.
திருவண்ணாமலை ஒன்றியம்.

Wednesday, May 26, 2021

May 26, 2021

2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு!

முதன்மை செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் கட்செவி செய்தியில் , அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களால் IFHRMS செயலியில் சமர்பிக்கப்படும் மே -2021 மாத ஊதியப் பட்டியல்களை ( HARD COPY ) நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க இயலாத நிலையில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஊரடங்கு காலம் முடிவுற்ற பின் பட்டியல்களை நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் , பணம் பெற்ற வழங்கும் அலுவலர்கள் பட்டியல்களை மென்பொருள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பிய பிறகு , மென்பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு கருவூல பணியாளர்கள் அவ்வூதியபட்டியல்களை ஏற்பளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து , திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் மேற்கண்டவாறு பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யபப்டும் பட்சத்தில் , உதவி கருவூல அலுவலர்கள் தங்களுக்குட்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இணைப்பில் கண்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலரின் கையொப்பத்துடன் ( Signed and Scanned Copy ) சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு தெரிவித்து , பெறப்படும் விவரங்களை பட்டியல்களுடன் ஒப்பிட்டு பட்டியல்களை ஏற்பளிக்க தொடர்புடைய பிரிவு கணக்கர்கள் / கண்காணிப்பாளர்கள் / கூடுதல் கருவூல அலுவலர் / உதவி கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Sunday, May 16, 2021

May 16, 2021

கரோனா தடுப்புக்கு அதிக நிதி தேவைப்படுவதால் அரசு ஊழியருக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு - தலைமைச் செயலர் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை 2022 மார்ச் 31-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.அனைத்துஅமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் இது பொருந்தும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார். தமிழ்நாடு விடுப்பு விதிகள்படிஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்ஈட்டிய விடுப்பாக வழங்கப்படுகிறது. இந்த விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எந்தபிடித்தமும் இன்றி வழங்கப்படும். இதை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள், அதாவதுஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. வழக்கமாக, ஆண்டுதோறும் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்கள் துறையின் சம்பளக் கணக்கு அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர் மூலம்விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா தடுப்புபணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், 2021 மார்ச் வரை ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்திவைக்க தமிழக அரசு முடிவெடுத்து, கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவித்தது. 2022 மார்ச் 31-ம் தேதி வரை: இந்நிலையில், தற்போது கரோனா 2-வது அலை வேகமாகபரவி வரும் சூழலில், தடுப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் 2022 மார்ச் 31-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. அனைத்துஅமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் இது பொருந்தும் என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.

Saturday, March 20, 2021

March 20, 2021

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா ? அரசு சார்பு செயலர் தகவல்

தங்கள் மனு தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன :
பிளஸ் 2 மாணவர்கள் பெயர் விபரம் சரிபார்க்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் 01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட " வல்லுநர் குழு " தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். எனவே தற்போது தங்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.

Friday, March 05, 2021

March 05, 2021

இந்தாண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் - வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இந்தாண்டும் 8.5% நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வட்டி விகிதத்தில் மாற்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே விகிதம் நீடிக்கும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog