Breaking

Showing posts with label Aadhar card. Show all posts
Showing posts with label Aadhar card. Show all posts

Wednesday, September 27, 2023

September 27, 2023

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டைஎண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடன் சமர்ப்பித்து விட வேண்டும். எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன் னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி கள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங் களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற் றும் வங்கிகளில் அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் ‘அ ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் படும்.மேற்படி 'அ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும் நேர்வில் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அத் தேர்தலில் போட்டியிடஇயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள்மற்றும்வங்கிக ளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இணைப்பதிவாளர் (பொ) சிவ.முத்துக்குமாரசாமி தெரிவித் துள்ளார்கள்.

Thursday, September 14, 2023

September 14, 2023

அக். 1 முதல் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்

The documents accepted as address proof are Passport, Driving License, Aadhar card, water bill, electricity bill etc. Birth certificate can be used only for age proof not address proof. Valid Driver's License, Property Tax Receipt. Posted Mail with name of applicant.

அக். 1 முதல் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், பிறப்புச் சான்றிதழை கல்வி நிலையங்களில் அனுமதி பெறுவது, வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு, அரசு வேலை பெறுவது போன்ற பணிகளுக்கு தனி ஆவணமாக அடையாளன் சான்றிதழாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மசோதாவை தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog