Wednesday, January 14, 2026
Thursday, December 12, 2024
Saturday, October 05, 2024
Monday, September 30, 2024
Monday, September 23, 2024
Thursday, September 19, 2024
Friday, August 09, 2024
Tuesday, July 16, 2024
Monday, July 15, 2024
Monday, May 27, 2024
Wednesday, March 27, 2024
Friday, March 15, 2024
Tuesday, January 30, 2024
நாளை முதல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
நாளை முதல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் Tamil Nadu Govt appeals to make full use of public camps - new scheme 'Finding You in Your Home' from tomorrow
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய* *'உங்களைத் தேடி உங்கள் ஊரில்'* *எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
செய்தி வெளியீடு எண்: 193 30.01.2024
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டம் மக்களைத் தேடி மருத்துவம் நான் முதல்வன் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 புதுமைப் பெண் முதலமைச்சரின் காலை உணவு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு.
அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் நாளை (31.01.2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம். சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மேலும் முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர் கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள். மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும். விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்
Saturday, December 30, 2023
செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயா்வு - மத்திய அரசு
*செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயா்வு:
*-மத்திய அரசு.
செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.*
*. இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.* அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
*இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடனுக்கான வட்டி விகிதத்தை 2.5 முதல் 6.5 சதவீதம் வரை ரிசா்வ் வங்கி அதிகரித்த நிலையில், வைப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயா்த்தியுள்ளன.* செல்வமகள் சேமிப்பு திட்டம் - வட்டி 0.2% உயா்வு: மத்திய அரசு உத்தரவு...
செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடனுக்கான வட்டி விகிதத்தை 2.5 முதல் 6.5 சதவீதம் வரை ரிசா்வ் வங்கி அதிகரித்த நிலையில், வைப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயா்த்தியுள்ளன.
Thursday, November 23, 2023
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்
'Looking for you, in your town' - Tamil Nadu government's new scheme for people to complain ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ - மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை முதல்வரே களத்துக்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம். "மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்" என்று சொன்ன அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தீட்டப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும். அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர். தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின் கம்பீரம் மக்களைக் கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர். இந்தத் திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம்; மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்களை குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Thursday, October 12, 2023
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு; கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல்
பொதுக் கருவூலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய சுயலாபக் கூட்டணி மூலம் ஒப்பந்தப்புள்ளி செயல்முறை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். மின்கொள்முதல் முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரின் வங்கியில் அரசு பணம் செலுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Saturday, September 23, 2023
பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பொதுமக்கள் ஊராட்சி மணி என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள 155 340 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவிக்கலாம். இந்தத் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். ஊராட்சி மணி திட்டத்திற்கான அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவித்திட கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் இயக்குனர் தலைமையில் காணொளி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்களின் விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.
Friday, September 22, 2023
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் FAQs தமிழக அரசு வெளியீடு
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் FAQs தமிழக அரசு வெளியீடு
1) எனக்கு ஏன் பணம் வரவில்லை?
உங்களது மனுவின் நிலை குறித்து 18/9/2023 முதல் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், உங்களது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை தங்களது ஆதார் எண் மூலமாக லாகின் செய்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 2) அரசு குறுஞ்செய்தி வந்தது, ஆனால் வங்கியில் பணம் வரவில்லை?
உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். மேலும் இதுதொடர்பாக, தங்களது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் பெறப்பட்டுள்ள விவரத்தினை தங்களது வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வங்கி கணக்குப் புத்தகத்தினை கொடுத்து உரிய பதிவுகளை மேற்கொள்ள கோருவதன் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
3) எனக்கு ஏன் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி வரவில்லை?
அரசிடம் இருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசியின் இயக்கத்தினை சரிபார்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம்.
4) எப்போது மேல்முறையீடு செய்யலாம், எங்கு மேல்முறையீடு செய்யலாம்?
பதிவு செய்யப்பட்ட தங்களது கைபேசி எண்ணுக்கு தங்களது மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்.
5) எனது விண்ணப்பம் எந்த காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது?
19/9/2023 அன்று முதல் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தங்களது விண்ணப்பம் ஏற்கப்படாதற்கான காரணமானது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் இந்நேர்வில் தாங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் தங்களது தகுதிக்கான உரிய ஆதாரத்துடன் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீட்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். 6) எனது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. எனக்கு பணம் கிடைக்குமா? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?
தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளாக இருந்தால் உரிமைத் தொகை பெற வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்.
7) ஒரு ரூபாய் வந்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை தொகை கிடைக்குமா அல்லது பத்து பைசா வந்தவர்களுக்கும் கிடைக்குமா?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
8)ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மனு செய்ய விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது மனுவினை இ- சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
9) கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, எச்.டி.எப்சி, போன்ற தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்து எங்களது விண்ணப்பத்தில் அந்த வங்கிக் கணக்கினை தெரிவித்து இருந்தால் எங்களுக்கும் மேற்கண்ட வங்கிகளில் பணம் செலுத்தப்படுமா?
கூட்டுறவு வங்கி தமிழ்நாடு கிராம வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கி கணக்குகளுடன் மனுதாரர் தனது ஆதார் எண்ணினை இணைத்திருந்தால் தகுதியான பயனாளியாக இருப்பின் உரிமை தொகையானது அந்த வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். 10) Inactive Account கொடுத்து விண்ணப்பம் செய்துவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் ?
தங்களது வங்கியினை நேரில் அணுகி, வங்கி கணக்கினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் அல்லது புதிய வங்கி கணக்கினை தொடங்கவேண்டும்.
11) எனது வங்கிக் கணக்கில், ஒரு ரூபாய் பணம் செலுத்தப்படும் போது ACHCR என்று குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்திருக்கிறது, ஆனால் எனது உறவினருக்கு குறுஞ்செய்தியில் DBT Government payment என்று வந்திருக்கிறது. எனக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்குமா?
தாங்கள் தகுதியான பயனாளியாக இருப்பின் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையானது தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
12) ஒரு ருபாய் SMS வந்தது, ஆனால் பிறகு வங்கி கணக்கு Blocked என வருகிறது, பணம் வருமா ?
இந்நேர்வு தொடர்பாக தாங்கள் வங்கிக் கணக்கினை வைத்திருக்கும் வங்கியினை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்
13) எனது ரேசன் அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. ஆனால் SMS வரவில்லை?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தங்களது விண்ணப்பத்தினை உரிய வழியில் பதிவு செய்திருந்தால் தாங்கள் பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதி பெற்று இருப்பின் தாங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவராவர். தங்களது மனுவின் நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் குறுஞ்செய்தி வரும். இவ்வாறு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசி இணைப்பினை சரிபார்க்கவும்.
14) எனது வங்கி கணக்கில் 1 ரூபாய் ஏறி விட்டது ஆனால் SMS வரவில்லை?
தங்களது வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது தொலைபேசி இணைப்பினை சரிபார்க்கவும். 15) எனக்கு பணம் வரவில்லை, நான் மீண்டும் விண்ணப்பம் செய்யலாமா?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தாங்கள் மீண்டும் புதியதாக விண்ணப்பம் செய்வதற்கு பதில் தங்களது மனு குறித்த நிலையினை பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரப்பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
16) நான் கைபேசி எண்ணை மாற்றி விட்டேன், update செய்ய என்ன வழி?
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயனாளியே தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
17) கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தேர்வானவர்களும், விண்ணப்பம் ஏற்கப்படாதவருக்கும் குறுஞ்செய்தி வருமா?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றுள்ள அனைத்து மனுதாரர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு 18/9/2023 முதல் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் 18) அரசால் அளிக்கப்பட்ட வீட்டில் வசிக்கிறேன், எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகையாக ரூபாய் ஆயிரம் பெற விதிக்கப்பட்ட நெறிமுறைகளின் கீழான பிற தகுதிகளைப் பெற்றிருப்பின் அரசால் அளிக்கப்பட்ட வீடு தடையாக இருக்காது.
19) மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் எத்தனை நாட்களில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்?
தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
20) எவ்வாறு மேல்முறையீடு செய்வது?
தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
21) கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் நோக்கம் என்ன இத்திட்டம் எதற்காக துவங்கப்பட்டது?
கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டது
குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் தான் இதனுடைய முதன்மையான நோக்கமாகும்.
ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடுத்த நோக்கமாகும். 22) இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி என வரையறுக்கப்படுபவர்கள் யார்?
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
i) ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
ii) குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
iii) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
iv) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
v) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
23) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற யார் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு நபரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். 24) இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான பொருளாதார அளவுகோல்கள் என்ன?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
i) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
ii) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
iii) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
25) இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்கள் போன்ற ஆதாரங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமா?
பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
CLICK HERE TO READ FULL DETAILS
Tuesday, September 19, 2023
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் துவக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம்
kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கம்
ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP வைத்து விவரங்களை பெறலாம்
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.
குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. *மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழக அரசு புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியது.*
மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செப்.15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களுக்கு அதற்கான காரணத்தைத் தெரிவித்து கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வராதபட்சத்தில் மாற்று ஏற்பாட்டின் மூலமாக நிராகரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
இதற்கென தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
பொதுமக்கள் தங்களது ஆதாா் எண்ணையும், கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும். இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.1,000 கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov,in என்ற இணையதளத்தில் சர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைத் தொகை திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் இந்த தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்பங்களை வருவாய்க் கோட்டாட்சியா்கள் 30 நாள்களுக்குள் முடித்து வைப்பா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
CLICK HERE TO DOWNLOAD PDF
Sunday, September 17, 2023
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - தமிழக நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:1905 - நாள்: 17.09.2023
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது. மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அறிக்கை.
செய்தி வெளியீடு எண்:1905
நாள்: 17.09.2023
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு உ மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும்.
இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.






