Breaking

Showing posts with label High Court Opinion. Show all posts
Showing posts with label High Court Opinion. Show all posts

Wednesday, February 26, 2025

Thursday, December 14, 2023

December 14, 2023

ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு



ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ரமேஷ் என்பவர், தனது பணியை வரன்முறை செய்து பணிமூப்பு உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு:

எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமானது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. உயர் கல்வியை வழங்குவதற்காகத் தான் நாடு முழுவதும் பல்கலைக்கழக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

இவை, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற்காகவே நல்ல ஆசிரியர்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்குவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியோர் மாநில அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், அங்கேயே கல்வியை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒவ்வொருவரும் தரமான கல்வியைப் பெற உரிமை உண்டு. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. இது தனிமனிதன் மட்டுமின்றி ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கல்விக்கு ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிப்பதே சரியானது.

எனவே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் நிரந்தர அடிப்படையில் தகுதியான நபர்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானிய குழு உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் மனுதாரர் மனுவை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Wednesday, November 08, 2023

November 08, 2023

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.


விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.

ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Thursday, March 09, 2023

March 09, 2023

திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார் சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல்காரராக வேலை செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அவர் இறந்தார். அதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு சரஸ்வதி அதே ஆண்டு ஜூன் 5-ந் தேதி மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால் மீண்டும் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி மனு அளித்தார்.

அந்த மனுவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி நிராகரித்தார். வாரிசு வேலை கேட்டு 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தார்.

அதை எதிர்த்து ஐகோர்ட்டில் சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், மனுதாரர் திருமணம் ஆனவர் என்பதால், அவர் வாரிசு வேலை பெற தகுதியானவர் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து சரஸ்வதி மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் அகிலேஷ் ஆஜராகி, திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற தகுதியில்லை என்று கர்நாடக மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் சத்துணவு உதவியாளர் மற்றும் சமையல்காரர் பதவிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜராகி, திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், விதிகளின்படி வேலை கேட்டு 3 ஆண்டுகளுக்குள் அவர் விண்ணப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'திருமணமான பெண்கள் வாரிசு வேலை கோர முடியாது என்று கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

அந்த தீர்ப்பின்படி, மனுதாரர் திருமணமானவர் என்பதால் அவர் வாரிசு வேலை கேட்க முடியாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ஏற்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 4 மாதத்துக்குள் வேலை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Monday, October 03, 2022

October 03, 2022

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..

Mistake in NEET exam marks.. Court action order.. நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதன்பின், செப்டம்பர் 7-ம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எனது தேர்வு விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு மாணவி வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிக்கும் தேதியை 10 நாட்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதே தேதியில், தேசிய தேர்வு முகமைக்கு நேரில் சென்று விடைத்தாளை பார்வையிடவும் மாணவிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tuesday, July 19, 2022

July 19, 2022

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழிகாட்டுதலுக்கு எதிரான வழக்கில், 'அரசுக்கு நிதி நிலை தான் பிரச்னை எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம்.'நிதிநிலை சரியான பின் காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே' என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கரூர் சின்னமநாயக்கன்பட்டி பர்வதம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பி.எஸ்சி.,- பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது.இதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.ஜூலை 1ல் தனி நீதிபதி தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் வெளியிட்டார்.

இதையும் படிக்க | நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்.. 11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு..!வெளிவரும் திடுக்கிடும் தகவல்..!!

அதில் கல்வித் தகுதி, முன்னுரிமை விபரங்கள் இடம் பெற்றுள்ளன; இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. விண்ணப்பிப்போர் பள்ளி அமைந்துள்ள ஊராட்சி அல்லது ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்குள் அல்லது அருகிலுள்ள மாவட்டத்தில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே, வழிகாட்டுதல்களுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு பர்வதம் கோரியிருந்தார். அவரின் வழக்கை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.தமிழக அரசுத் தரப்பில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''அரசுக்கு நிதி நிலை பிரச்னை உள்ளது எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். நிதிநிலை சரியான பின், காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே,'' என கருத்து தெரிவித்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடக்கிறது.

Total Pageviews

Search This Blog