Breaking

Showing posts with label Important announcement made by TNPSC. Show all posts
Showing posts with label Important announcement made by TNPSC. Show all posts

Sunday, March 12, 2023

March 12, 2023

TNPSC முக்கிய அறிவிப்பு... வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு தேதி மாற்றம்



TNPSC முக்கிய அறிவிப்பு... வனப்பாதுகாவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு தேதி மாற்றம்!

வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதி காலை நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை நடைபெறும்.

இதேபோன்று ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 26 மாவட்டங்களில் மே 3 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிறப்கல் 12.30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தேர்வுகளுக்குமே முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 09, 2023

March 09, 2023

Group 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - TNPSC செய்திக்குறிப்பு

Group 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - TNPSC செய்திக்குறிப்பு Group 4 Exam Results will be published by the end of this month - TNPSC Press Release

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV (தொகுதி - IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

Tuesday, February 14, 2023

February 14, 2023

அடுத்த மாதம் குரூப்-4 தோ்வு முடிவு: டிஎன்பிஎஸ்சி தகவல்



TNPSC - ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடுதல் குறித்த தெளிவுரை தொடர்பான செய்தி வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD TNPSC Official Announcement PDF

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்



செய்தி வெளியீட்டு எண்: 10/2023

நாள்: 14.02.2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி 1V) ற்கான எழுத்துத் தேர்வினை தோவாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர்.

இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நட்த்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் Press Release No.: 10/2023

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Dated: 14.02.2023

Tamil Nadu Public Service Commission is conducting various recruitment examinations to fill up the vacancies of various departments every year. In this connection, the recruitment examination for the posts included in the Combined Subordinate Services Examination - IV (Group IV) was conducted on 24.07.2022. Totally 22,02,942 applications were received in response to this notification and 18,36,535 candidates appeared for the examination. This is one of the highest number of candidates appeared for any examination conducted by State Public Service Commissions in India.

In order to maintain strict confidentiality and to plug the loopholes the, Commission has introduced integrated two part OMR answer sheets for its examinations and both the parts are subject to double scanning separately and the Error list has to be generated after system based identification along with manual confirmation on the errors committed by the candidates thus it requires additional time for the whole process. As per the Instructions to candidates, there are 16 different errors that may be committed by the candidates, these errors are to be identified and verified by the Commission.
From 2014 to 2019 period the candidates as appeared for Group IV examinations ranged between 10 and 17.5 lakhs whereas in 2022 this number exceeded more than 18 lakh candidates, and this time two parts of answer sheets are to be scanned and error checked. The total number of OMR answer sheets to be checked exceeded 36 lakhs which is approximately thrice the amount of work if compared with previous years examination.

It is hereby informed that, Commission is regularly conducting various examinations including departmental examinations and processing various results simultaneously. Thus Commission is working tirelessly in the interest of candidates, to complete all the important aspects of the process as mentioned above, and deliver error free result. The results of this examination are likely to be published in the month of March.

Hence, Candidates are requested not to be worried about the baseless news aired / published in this regard.

Controller of Examinations

Tuesday, January 10, 2023

January 10, 2023

122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு: TNPSC தகவல்

122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு: TNPSC தகவல்

122 அரசு துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 151 துறை தேர்வுகளை கடந்த 12.12.2022 முதல் 21.12.2022 (18.12.2022 நீங்கலாக) வரை கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உள்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தியது. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 9ம் தேதி (இன்று) முதல் 15ம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Monday, January 09, 2023

January 09, 2023

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்: சம்பாதித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயாராகலாம் - எப்படி?

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்: சம்பாதித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயாராகலாம் - எப்படி?

TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Self Study Groups) மூலம் TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு, விண்ணப்பிக்க, DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING FACULTY REGISTRATION FORM என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பப்படிவத்தை வரும் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து விவரங்களுக்கு 044-22501006/22501002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில், கல்வித் தகுதி, போட்டித் தேர்வுகளில் உள்ள முன்அனுபவம், தற்போதைய பணி நிலவரம், எடுக்க விரும்பும் பாடங்கள் ஆகியன விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். முன்னாள் தேர்வர்களுக்கு நல்ல வாய்ப்பு:

முன்னதாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டுதிட்டத்தில், குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும், குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுத் திட்டம், தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. எனினும், எதிர்வரும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் தயார் செய்து கொண்டு வருபவராக இருந்தால், இந்த பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளத்துடன் நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயார் செய்ய இந்த பணி வழிவகுக்கும்.

Thursday, December 22, 2022

December 22, 2022

TNPSC - ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT (( TAMIL NADU GENERAL SERVICE )) (Final Result) - PDF



ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT (( TAMIL NADU GENERAL SERVICE )) (Final Result)

POST OF ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU GENERAL SERVICE, 2019-2020 (NOTIFICATION NO.10/2021)



The list of Register Number of candidates selected provisionally / conditionally for appointment by direct recruitment to the post of Assistant Public Prosecutor, Grade-II in Prosecution Department included in the Tamil Nadu General Service, 2019-2020 (Notification No.10/2021) for which the Oral Test was held on 01.12.2022 FN & AN and 02.12.2022 FN only and Counselling was held on 15.12.2022 FN is furnished below:

NOTE:

The selection of candidates is purely provisional subject to outcome of W.A. (MD) Nos.1450 to 1453 of 2022 and W.A (MD) No. 1423 of 2022 filed against the orders dated 10.08.2022 in W.P. (MD) Nos. 9267 of 2022 and other 3 Writ Petitions against the orders dated 12.08.2022 in W.P.(MD) No.9296 of 2022; W.A.Nos. 2685, 2626, 2688, 2689, 2691, 2695 of 2022 and W.A. SR. Nos.134373 to 134377, 134380, 134382, 134385 and 134386 of 2022 against the orders dated 21.11.2022 in W.P.Nos. 11714 of 2022 and other 14 Writ Petitions; Writ Appeal to be filed by the Commission against the orders dated 17.11.2022 in W.P. (MD) No.9307 of 2022; Writ Appeals to be filed by the Commission against the interim orders dated 05.12.2022 in W.P. Nos.11739 of 2022 and other 16

Writ Petitions;

W.P. No.32753 of 2022 and W.P. No.32954 of 2022 and also interim orders dated 02.12.2022 and 12.12.2022 respectively; Other Writ Appeals to be filed by the Commission against the orders of the Hon'ble Court in various Writ Petitions; Other Writ Petitions pending on the files of the Hon'ble High Court of Judicature at Madras / Madurai Bench of Madras High Court relating to this recruitment.

CLICK HERE TO DOWNLOAD

Wednesday, December 21, 2022

December 21, 2022

டிச.23-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி காணொலி வெளியீடு: தமிழக அரசு தகவல் - Release of Practice Video for Group-2 Main Exam on Dec 23: Tamil Nadu Govt

டிச.23-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி காணொலி வெளியீடு: தமிழக அரசு தகவல் - Release of Practice Video for Group-2 Main Exam on Dec 23: Tamil Nadu Govt

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 25, 2023 அன்று நடத்தவுள்ள குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான போட்டித் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்: தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலிப்பாதை (YouTube) channel) ஒன்றைத் துவக்கி அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வினை நடத்தியது. கிராமப்புரங்களில் வசிப்போரும். தமிழ்வழிக் கல்வியில் பயின்றோரும் இப்போட்டித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 102 மணி நேர பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து பதிவேற்றம் செய்தது. இந்த முயற்சிக்கு மாணவர்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 25, 2023 அன்று நடத்தவுள்ள குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான போட்டித் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்துள்ளது. போட்டித் தேர்வுகளில் நிறைந்த அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் பாடங்களை நடத்தியுள்ளார்கள். தமிழ்வழிக் கல்வி பயின்றோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து போதிக்கப்படுகின்றன. அறுபது நாட்களில் பயிற்சியை முடிக்க முடிவுசெய்துள்ளதாலும், பட்டிதொட்டிகளில் வாழ்வோரும் இந்தப் பயிற்சியை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த முயற்சிக்கு ‘நோக்கம் 60 - சேர இயலாதவர்களைச் சென்றடைதல்'' (MISSION 60 – Reaching the Unreached) என்று பெயரிடப்பட்டுள்ளது.

காணொலிகளின் ஊடாக 18 தொடர் தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு விருப்பப்படும் மாணவர்களுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் எழுதி அனுப்பும் விடைத்தாள்களும் வல்லுநர்களால் திருத்தப்பட்டு மாணவர்கள் தங்கள் விடைகளைச் சுய மதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் திருப்பி அனுப்பப்படும். முதல் காணொலி AIM TN யூடியூப் சேனலில் 23.12.2022 அன்று பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 18, 2022

December 18, 2022

TNPSC தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்



TNPSC Group Examinations: 2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை (TNPSC Annual Planner) தேர்வர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகால தேர்வு அட்டவணை:

2020, 2021 ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிக்கலான சூழ்நிலையை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்தற்போது எதிர்கொள்ள உள்ளனர்.

2012

குரூப் 1 (2011-2013) தேர்வு - 25 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - 1870,

குரூப் 4 தேர்வு - 10718 பணியிடங்கள்

2013

குரூப் 1 தேர்வு - 79 காலியிடங்கள் ,

குரூப் 2 தேர்வு - 1064 காலியிடங்கள் ,

குரூப் 4 தேர்வு - 5566 காலியிடங்கள்

2014

குரூப் 4 தேர்வுகள் - 4963 காலியிடங்கள் ,

குரூப் 2ஏ தேர்வுகள் - 2,846 காலியிடங்கள்

2015

குரூப் 2 (2014-2015 மற்றும் 2015-16) தேர்வுகள் - 1863 பணியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (2014 -15) தேர்வுகள் - 813 பணியிடங்கள்

குரூப் 1 தேர்வுகள் - 74 பணியிடங்கள்

குரூப் 2 ( 2014-15, 2015-16) தேர்வுகள் -1241 (நேர்காணல் பணியிடங்கள் )

2016

குரூப் 1 தேர்வு - 85 பணியிடங்கள் ,

குரூப் 4 (2015- 16) தேர்வு -5451 பணியிடங்கள்

2017

குரூப் 2ஏ நேர்காணல் இல்லாத தேர்வு (2017 -18) - 1,953 பணியிடங்கள் ,

குரூப் 4 ( 2015-2016, 2016-2017 and 2017-2018 ) தேர்வு - 9351 பணியிடங்கள்,

2018 குரூப் 2 நேர்காணல் தேர்வு - 1199

2019

குரூப் 4 (2018-2019, 2019-2020) தேர்வு - 6491 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு (2016 - 2019) - 139 பணியிடங்கள்

2020 குரூப் 1 தேர்வு - 79 (கொரோனா தொற்று பொது முடக்க நிலை)

2021 கொரோனா தொற்று பொது முடக்க நிலை

2022

குரூப் II-IIஏ தேர்வு - 5413 பணியிடங்கள்,

குரூப் 4 தேர்வு -7301 பணியிடங்கள் ,

குரூப் 1 தேர்வு - 92 பணியிடங்கள்

குறிப்பு : மேற்படி அட்டவணையின் படி , தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு அதிகப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா காலக்கட்டங்களிலும் கூட, ஆட்சேர்ப்பு அறிவிக்கை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மிகவும் இறுக்கமான போக்கை தமிழ்நாடு அரசு கடைபிடிப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக தனியார் துறையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மேற்கொள்ள வேண்டுமே தவிர இறுக்கமான போக்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

Saturday, December 17, 2022

December 17, 2022

TNPSC - தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2023


தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு வனப்பகுதி(தொகுதி-Iஏ பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத் தேர்விற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2023 ஜனவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 642 அறிக்கை எண். 36/2022 

பணி: உதவி வனப் பாதுதாவலர்

காலியிடங்கள்: 9

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயதுவரம் நிறைவடைந்திருக்க வேண்டும். 34, 39 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: வனவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல்ஸ, கணிதம், புள்ளியியல், புவியியல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், வேதியியல் பொறியியலில், கணினி/கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 163 செ.மீட்டரும், பெண்கள்150 செ.மீட்டரும், மார்பளவு சாதாரணமான நிலையில் ஆண்கள் 84, விரிந்த நிலையில் 5 செ.மீட்டரும், பெண்கள் மார்பளவு சாதாரணமான நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 5 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழி தகுதி: விண்ணப்பத்தாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரு.100. முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். 

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். 

தேர்வு: முதல்நிலைத் தேர்வு (ஒற்றை தாள்-கொள்குறி வகை): பொது அறிவு பிரிவில் 175 கேள்விகள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பிரிவில் 200 கேள்விகள் என 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேர தேர்வாக நடைபெறும். 

முதன்மைத் தேர்வு: கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் -I 100 மதிப்பெண், பொது அறிவு தாள்-II 200 மதிப்பெண்கள், தாள்-III பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், தாள்-VI விருப்பப்பாடம்-1, 300 மதிப்பெண்கள், தாள்-V விருப்பப்பாடம்-2, 300 மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் - 120 மதிப்பெண்கள் என மொத்தம் 1020 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். 
 
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்க நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதமை எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.

முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / www.tnpsc.gov.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2023

முதன்மை எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.1.2023

Friday, December 16, 2022

December 16, 2022

குரூப் 5ஏ தோ்வு: சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள்

குரூப் 5ஏ தோ்வு: சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள்

குரூப் 5ஏ தோ்வுக்கு சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை 1,114 போ் எழுதவுள்ளனா்.

அமைச்சுப் பணிகளில் இருந்து தலைமைச் செயலகப் பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 21-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடத்தில் 74 இடங்களும், தலைமைச் செயலக நிதித் துறையில் 29 இடங்களும், உதவியாளா்கள் பணியிடங்களில் 58 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான தோ்வுக்கு 1,114 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், ஆண்கள் 731 போ், பெண்கள் 383 போ்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்கு சென்னையில் மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

Wednesday, December 14, 2022

December 14, 2022

DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE) (Notification) - PDF



DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE) (Notification)

Applications are invited from eligible candidates only through online mode upto 13.01.2023 for direct recruitment to the vacancies in the post of District Educational Officer (Group – I C Services) in School Education Department included in the Tamil Nadu School Educational Service.

WARNING

 All the recruitments conducted by the Tamil Nadu Public Service Commission are purely merit based.

 The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.

 The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centers/Common Service centers for the mistakes made while applying online for recruitment.

 Applicants are advised to check the filled in online application before finally submitting the same.

 Applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself.

It shall be ensured by the applicants that the online application is submitted with all the required certificates.

Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

CLICK HERE TO DOWNLOAD

Sunday, November 27, 2022

November 27, 2022

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வனத் தொழில் பழகுநர் பதவிக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி 6) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு வருகிற 4ம் தேதி முற்பகல் தாள்-1 ஓஎம்ஆர் முறையிலும், தாள்-2, தாள்-3 கணினி வழித் தேர்வாகவும் வருகிற 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகல், 11ம் தேதி முற்பகல் என 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, November 25, 2022

November 25, 2022

தேர்வு முடிவுகள் குறித்து பொய்யான தகவல்கள் - TNPSC எச்சரிக்கை!!

TNPSC எச்சரிக்கை - தேர்வு முடிவு குறித்து பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவு குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளத்தில் பரவுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியலை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வாணையத்தின் அனானித்து தேர்வு முடிவுகளும் தேர்வணைய இணையதளத்தில் மட்மே வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரியவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது.

தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பத்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Friday, November 18, 2022

November 18, 2022

நாளை TNPSC GROUP-1 தேர்வெழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு



நாளை நடைபெறும் TNPSC GROUP-1 தேர்வர்கள் கவனத்திற்கு

காலை உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும்

அடிப்படை குறிப்புகள்..

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)..

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. .

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
  --> ஆதார் அட்டை
  --> பாஸ்போர்ட்
  --> ஓட்டுநர் உரிமம்
  --> பான் அட்டை
  --> வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் *இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும்* (தேர்வு தொடங்கும் முன் - 1, முடிந்த பின் - 1), *ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression)* (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)
(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)

5) Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும். 

6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும். 

7) A, B, C, D, E - ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 - 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை *தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.* 

8) Shade செய்ய கண்டிப்பாக *கருப்பு நிற பந்து முனை பேனாவினை* (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்..

Wednesday, November 16, 2022

November 16, 2022

TNPSC - தேர்வு முடிவு மற்றும் நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியிடு

தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை தேர்வு முடிவு மற்றும் நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியிடு

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, November 08, 2022

November 08, 2022

TNPSC - குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC - குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்.25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 26, 2022

August 26, 2022

TNPSC இன்று 26/08/2022 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர் தெரிவு தொடர்பான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog