Breaking

Showing posts with label Separate center for higher education counseling. Show all posts
Showing posts with label Separate center for higher education counseling. Show all posts

Friday, April 01, 2022

April 01, 2022

உயர் கல்வி ஆலோசனைக்கு அரசு பள்ளிகளில் தனி மையம்

மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்கும் வகையில், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த பின், உயர் கல்வி படிப்பது குறித்தும், எந்தெந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் வழிகாட்ட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உயர் கல்வி ஆலோசனை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. இம்மையத்தில், ஒன்று முதல் நான்கு முதுநிலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர். இதற்கிடையில், உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை தொடர்பாக, அரசு பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வாரியாக, நேற்று துவங்கியுள்ள பயிற்சியில், முதுநிலை ஆசிரியர், முதுநிலை விரிவுரையாளர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் என, மூன்று பேர் பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சியை முடிப்பவர்கள், அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு, வரும், 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி பெறும் முதுநிலை ஆசிரியர்கள், பொது தேர்வுக்கு முன்னும், பின்னும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனைகளை வழங்க உள்ளதாக, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog