Breaking

Showing posts with label Co-operative Societies Post Examination. Show all posts
Showing posts with label Co-operative Societies Post Examination. Show all posts

Monday, January 23, 2023

January 23, 2023

கூட்டுறவு சங்க பதவி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

கூட்டுறவு சங்க பதவி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு Issuance of Hall Ticket for Co-operative Societies Post Examination

சென்னை:கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 3 ஏ' பதவிகளில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 14 காலியிடங்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் பதவியில், ஒரு காலியிடத்துக்கு, வரும் 28ம் தேதி முற்பகலில், எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒரு முறை பதிவேற்ற பக்கத்தில், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog