Breaking

Showing posts with label Online consultation. Show all posts
Showing posts with label Online consultation. Show all posts

Sunday, September 11, 2022

September 11, 2022

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு.

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு. அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு:

Tngtf மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் சந்திப்பு தகவல் (10.9.22 )

10.09.2022 நமது TNGTF அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்தனர்.

சந்திப்பு விபரம்

🎯 அனைத்து மாவட்டங்களிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு,1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் உபரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும்.



🎯உபரி ஆசிரியர்கள் இல்லாத மாவட்டங்களில் மறு பணி நியமனம் வழங்கப்படும் இது குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்

🎯மகப்பேறு விடுப்பில் செல்பவர்களுக்கு பதிலாக SMC மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.

🎯31.08.2022 அன்று மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உபரியாக உள்ள ஆசிரியர்கள், தேவைப்படும் பள்ளிகளுக்கு மாறுதல் (Deputation or Transfer within district) செய்யப்படுவார்கள்.

🎯 அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக ஆறு பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்வது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

🎯 ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்தில் உபரி பணியிடம் இல்லாத பட்சத்தில் பணி நீட்டிப்பு (reemployment) வழங்கப்படும்.

Wednesday, April 20, 2022

April 20, 2022

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 24 மருத்துவ இடங்கள்: நாளையும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

மருத்துவ இடங்கள்

தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 24 மருத்துவ இடங்களை ஒன்றிய சுகாதாரத்துறை நிரப்பிக் கொள்ளும் என தகவல் தெரிவித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதல் 2 கட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்னும் நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் வழக்கமாக மாநில ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அகில இந்திய கலந்தாய்வுக்கு பின் 24 மருத்துவக்கல்வி இடங்கள் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ளது. அவற்றை மாநில கல்லூரிகளுக்கு வழங்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே ஒன்றிய சுகாதாரத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்நிலையில், காலியாக உள்ள 24 இடங்களையும் ஒன்றிய சுகாதாரத்துறையே நிரப்பிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் காலியாக உள்ள 325 MBBS மற்றும் BDS ஆகிய இடங்களை நிரப்புவதற்கு, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டநிலையில், இன்று மற்றும் நாளை மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எந்தெந்த மாணவர்கள், எந்தெந்த கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர் என்ற பட்டியல் வருகின்ற 23-ம் தேதியும், பின்னர் 24 முதல் 28-ம் தேதி வரை மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று சான்றிதழ் சமர்ப்பித்து சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்ப ஒன்றிய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் தொடர்ந்து இறுதிக்கட்ட கலந்தாய்வை நடத்தும் என தகவல் தெரிவித்தது.

Total Pageviews

Search This Blog