Student stoned to death on school premises
May 15, 2022
பள்ளி வளாகத்திலேயே மாணவி கல்லால் அடித்து, எரித்து கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்
மாணவி கல்லால் அடித்து, எரித்து கொலை.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூர தாக்குதல் கொத்து கொத்தாக அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஆனால் தற்போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் ‘வாட்ஸ்அப்’ குழு ஒன்றை வைத்துள்ளனர். இதில் அவ்வப்போது ஒவ்வொரு விவகாரம் குறித்து மாணவ, மாணவிகள் பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், டெபோரா சாமுவேல் என்கிற மாணவி ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தை சேர்ந்த மாணவர்கள், மாணவி டெபோரா சாமுவேலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஆத்திரம் தீராத அந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவியை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். சக மாணவர்கள் வெறிச்செயல்
பள்ளிக்காவலர்கள் மற்றும் தகவலின் பேரில் வந்த போலீசார் மாணவர்களிடம் இருந்து மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மாணவர்கள் கற்களை வீசி அவர்களை விரட்டிய நிலையில், மாணவியை கல்லால் அடித்து கொலை செய்தனர். அதன் பின்னர் ஆத்திரம் அடங்காத மாணவர்கள் மாணவியின் உடலை தீ வைத்து எரித்தனர்.
அதன் பின்னர் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டியடித்தனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை மிட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பள்ளி மாணவியை சக மாணவர்கள் கல்லால் அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவம் நைஜீரியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.