Breaking

Showing posts with label Directorate of School Education. Show all posts
Showing posts with label Directorate of School Education. Show all posts

Thursday, November 28, 2024

Tuesday, June 27, 2023

June 27, 2023

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அலுவலங்களில் வங்கி கணக்கு பராமரிக்கும் பொறுப்புகள் குறித்த அறிவுரைகள்

Thursday, March 09, 2023

March 09, 2023

School Education - Punnagai-Dental Care Scheme for School children - Press Release No : 497 - PDF



Honble Minister for Health and Family Welfare and the Honble Minister for School Education inaugurated Punnagai-Dental Care Scheme for School children [ More... 1 , 2 ] [Press Release No : 497 ]

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, April 11, 2022

Friday, April 08, 2022

April 08, 2022

பள்ளிக் கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

2022-23 ஆம் ஆண்டின் பள்ளிக் கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கை வரும் 11.04.2022 அன்று நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

Sunday, April 03, 2022

April 03, 2022

பள்ளிக் கல்வித் துறைக்கு பள்ளி சுகாதாரம் பற்றி இன்று அனுப்பியுள்ள குறிப்புகள்

பள்ளிக் கல்வித் துறைக்கு பள்ளி சுகாதாரம் பற்றி இன்று அனுப்பியுள்ள குறிப்புகள்:

1. பள்ளிக்கு ஒரு துப்புரவுப் பணியாளர் மட்டும் நியமித்தால் ஒரு பணியாளரால் பள்ளி வளாகம், கழிப்பறைகள், வகுப்பறைகள் எல்லாவற்றையும் ஒரே நாளில் துப்புரவு செய்ய முடியாது.

2. ஒவ்வொரு பள்ளிக்கும் கழிப்பறைத் துப்பரவாளர், வளாகத் துப்புரவாளர், வகுப்பறைத் துப்புரவாளர் என்ற வகையில் மூன்று பணியாளர்கள் தேவை.



3. கழிப்பறைத் துப்பரவாளர் முழு நேரப் பணியாளராகவும் வளாகத் துப்புரவாளர் மற்றும் வகுப்பறைத் துப்புரவாளர் ஆகியோரை பகுதி நேரமாகவும் நியமிக்கவேண்டும். 4. கழிப்பறைத் துப்புரவுப் பணியாளருக்கு சுகாதாரப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கவேண்டும்.

5. துப்புரவுப் பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நாள் ஊதியத்தைவிடக் கூடுதலான நாள் ஊதியம் வழங்கவேண்டும்.

6. மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டப் பணியாளர்களை வளாகத் துப்புரவு, வகுப்பறைத் துப்புரவுப் பணிக்கு சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

7. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி வளாகத்தின் பரப்பளவு, வகுப்பறைகளின் எண்ணிக்கை கழிப்பறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை நிர்ணயிக்கவேண்டும். 8. மாணவிகள் கழிப்பறைக்கு பெண் துப்புரவுப் பணியாளரை நியமிக்கவேண்டும்.

9. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் நேரடியாக உள்ளூர் உள்ளாட்சி நிர்வாக அலுவலர் மூலம் வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர்களை ஊதியம் பெற்று வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கவேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கான வருகைப் பதிவேடு மட்டும் தலைமை ஆசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும்.

10. துப்புரவுப் பொருள்கள் வாங்குவதற்கான நிதியை மாதந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கி தலைமை ஆசிரியர் மூலம் பொருள்கள் வாங்குவது தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கான துப்புரவுப் பொருள்கள் உள்ளாட்சி நிர்வாக அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படவேண்டும்.

11. கழிப்பறைத் துப்புரவுப் பணியாளரை முழு நேர காலமுறை ஊதியப் பணியாளராக நியமிக்க வேண்டும்.

Saturday, March 12, 2022

March 12, 2022

ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

Total Pageviews

Search This Blog