Breaking

Showing posts with label Higher Education Department. Show all posts
Showing posts with label Higher Education Department. Show all posts

Tuesday, November 19, 2024

Thursday, November 23, 2023

November 23, 2023

பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு. 'Broadband' in Schools: Education Department



பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவுவது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.

அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 09, 2023

November 09, 2023

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு



The engineering entrance exams applicable for the admissions to top engineering colleges in Tamil Nadu are JEE Main, TANCET, NATA, GATE, VITMEE, IMU CET and others. Applicants shortlisted on the basis of performance in entrance exam will be called for the counselling and admission process later.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு More than 25 Entrance Exams for Higher Education Institutions - Special arrangement for students to apply

நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு இதுகுறித்து, பள்ளி கல்வியின் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவு சார்பில், முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., போன்ற, 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சேருவதற்கு உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்.நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளிலேயே உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 18, 2022

November 18, 2022

கல்லூரி பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறையின் புதிய உத்தரவு

கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும்: உயர்கல்வித்துறை உத்தரவு.

கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளனர். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Sunday, October 09, 2022

October 09, 2022

பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

பகுதிநேர விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பகுதிநேர முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளா்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆசிரியா்களுக்கு செய்யும் அநீதி. திமுக தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி இவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பிற வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது போல இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றக்கூடாது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பகுதி நேர தகுதி பெற்ற, அனுபவம் பெற்ற விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதிதாக ஆசிரியா் நியமனஆணையத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்போவதாக அரசு சொல்வது இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என அதில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை

Friday, September 02, 2022

September 02, 2022

உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வலியுறுத்தல்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய அளவில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. எனவே, கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்த தடையும் கிடையாது. எனவே, 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும்.

Friday, July 15, 2022

July 15, 2022

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி - துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு - [Press Release No : 1183 ] From the Principal Secretary to Government, Higher Education Department

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி - துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு - [Press Release No : 1183 ] From the Principal Secretary to Government, Higher Education Department

Saturday, May 21, 2022

May 21, 2022

நுழைவு தேர்வு வேண்டாம் : உயர் கல்வித்துறை அமைச்சர்

"It is the policy of this government that there is no need for admission," said Ponmudi, the higher education minister.

Minister Ponmudi speaking at the event held at Kumbakonam Government Women's College, Thanjavur District:

In higher education, the golden age of Tamil Nadu Chief Minister Stalin. At the Indian level, in higher education, 53 percent of the students are in Tamil Nadu. In addition, the federal government is announcing that more women are required to take entrance exams for BA, B.Sc., and even higher education.

It is the policy of this Government that no entrance examination is required. Students and students should also have a voice and be firm and firm in this policy. We have to deal with all this and develop the education sector. We have been insisting in Parliament on bringing education on the state list. Thus he spoke. ''நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பது தான் இந்த அரசின் கொள்கை,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்வில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

உயர்கல்வியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காலம் பொற்காலம். இந்தியா அளவில், உயர்கல்வியில், 53 சதவீதம் பேர் படித்திருப்பது தமிழகத்தில் தான். அதிலும், பெண்கள் தான் அதிகம்.பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கு கூட நுழைத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்து வருகிறது.பிளஸ் 2 வகுப்பில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும்.

நுழைவுத்தேர்வு தேவையில்லை என்பது தான் இந்த அரசின் கொள்கை.மாணவ, மாணவிகளும் குரல் கொடுத்து, இந்தக் கொள்கையில் திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கடன் சுமை, நிதி நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இதை எல்லாம் சமாளித்துத் தான், கல்வித் துறையை வளர்க்க வேண்டியுள்ளது.கல்வியை, மாநிலப் பட்டியலில் கொண்டு வருவது தொடர்பாக பார்லிமென்டில் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Total Pageviews

Search This Blog