Breaking

Showing posts with label AICTE. Show all posts
Showing posts with label AICTE. Show all posts

Wednesday, February 14, 2024

February 14, 2024

BBA,BCA படிப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பம்; 100 உதவி மையங்கள் அமைப்பு: ஏஐசிடிஇ தகவல்



BBA,BCA படிப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பம்; 100 உதவி மையங்கள் அமைப்பு: ஏஐசிடிஇ தகவல் Application for admission to BBA,BCA courses; Organization of 100 Help Centers: AICTE Info

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான விண் ணப்பங்களை சமர்ப்பிக்க நாடு முழுவதும் 100 உதவி மையங்களை ஏஐசிடிஇ ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிய நடைமுறை:

2024-27-ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும். இதுதவிர ஏற்கெனவே பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளுடன் இயங்கும் கல்வி நிறுவனங்கள், அனுமதிகோரி ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களின் பட்டியல், தொடர்பு விவரங்கள், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல் ஆகியவற்றை www.aicte.india.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கான செயல் முறையை சரியான நேரத்தில் முடிக்க வேண் டும்.

அதேநேரம் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை பெற தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇயின் திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, February 03, 2024

February 03, 2024

BBA,BCA பட்டப்படிப்புகளை AICTE வரம்புக்குள் வருவதை எதிர்த்து வழக்கு



பிபிஏ, பிசிஏ பட்டப்படிப்புகளை ஏஐசிடிஇ வரம்புக்குள் வருவதை எதிர்த்து வழக்கு

உயர் கல்வித்துறையில் கலை, அறிவியல் கல்லூரிகள் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டிலும், பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்நிலையில் தொழில்நுட்பம் சாராத பிபிஏ மற்றும் பிசிஏ ஆகிய படிப்புகள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளிலும் தொடங்கப்படும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. மேலும் இப்படிப்புகளை தற்போது நடத்தி வரும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கலை மற்றும் அறிவியல், மேலாண்மை கல்லூரிகள் நலச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏஐசிடிஇ-க்கு அனுப்பி வைக்கப்பட்டும் எந்த பதிலும் இல்லை எனக்கூறி தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லூரிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பிபிஏ, பிசிஏ படிப்புகள் தொடர்பான ஏஐசிடிஇ அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எல்.சோமயாஜி, ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, “கலை அறிவியல் கல்லூரிகள் வழங்கிவரும் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளை ஏஐசிடிஇ வரம்புக்குள் கொண்டுவர அதிகாரம் கிடையாது. உரிய சட்ட திருத்தம் செய்யாமல் இந்த படிப்புகளுக்கான வரம்புகளை மாற்ற முடியாது. அவ்வாறு மீறி கொண்டு வந்தால் அதன்மூலம் மாநில அரசு மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வருவாய் பாதிக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்” என வாதிட்டனர்.

அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க ஏஐசிடிஇ சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்.5-க்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும், என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Monday, January 15, 2024

January 15, 2024

உயர்கல்வி நிறுவனங்களில் BBA,BCA படிப்புகளுக்கு AICTE அங்கீகாரம் கட்டாயம்: UGC உத்தரவு



AICTE accreditation is mandatory for BBA,BCA courses in higher education institutes: UGC directive - உயர்கல்வி நிறுவனங்களில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கட்டாயம்: யுஜிசி உத்தரவு

சென்னை: பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்க கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்துவிதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தொழில்நுட்பக் கல்வி மற்றும் அதுதொடர்பான படிப்புகளை ஏஐசிடிஇ வரையறை செய்வதுடன் கண்காணித்து வருகிறது. தொழில்நுட்ப கல்வி என்பது பொறியியல், தொழில்நுட்பம், நகர திட்டமிடல், கட்டிடக்கலை, மேலாண்மை, மருந்தகம், பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிப்புகளாகும்.

அதன்படி எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளை ஒழுங்குப்படுத்தி, அதற்கு அங்கீகாரம் வழங்கும் பணிகளை ஏஐசிடிஇ தற்போது மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டு (2024-25) முதல் பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பிசிஏ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் முறைப்படுத்துவதற்கு ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
ஒரே மாதிரியான கல்வித் தரத்தை முதுநிலை, இளநிலை படிப்புகளில் பராமரிக்கும் நோக்கத்தில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்ததகவலை மாநிலபல்கலைக்கழகங்கள் தங்களின்கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு யுசிஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிபிஏ, பிசிஏ படிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கல்வி நிறுவனங்கள் https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, January 12, 2024

January 12, 2024

12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்! - AICTE



12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்!

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், முதலில் ஹிந்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா ஆகிய 9 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகம் எழுதும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து, அஸ்ஸாமி, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் புத்தங்கள் வெளியிடப்படுகின்றன.

12 மொழிகள்முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு சார்ந்து டிப்ளமோ அளவில் 11 மற்றும் பட்டப்படிப்பு அளவில் 9 என மொத்தம் 20 பாடப்பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆங்கில மொழிகளில் அசல் புத்தகத்தை எழுதுவதற்காகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் மாநில மொழிகளில் எழுத மொழிபெயர்ப்பாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு மொழிக்கும், தரமான பாடப்புத்தகங்களை வழங்குவதற்காக பல்கலைக்கழகங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் குடிமைப் பொறியியல் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் 42 பட்டப்படிப்பு பாடங்கள் மற்றும் 46 டிப்ளமோ பாடங்கள் என மொத்தம் 88 பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாடப்பிரிவுகள் ஆங்கிலத்தில் எழுதுதோடு, 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.ஏ.ஐ.சி.டி.இ., புத்தகங்களின் அம்சங்கள்:

புத்தகத்தின் உள்ளடக்கம் பாடநெறி மற்றும் அலகின் அடிப்படையில் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு யூனிட்டின் தொடக்கத்திலும், அந்த அலகை முடித்த பிறகு, மாணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்றல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. புத்தகம் சமீபத்திய தகவல்கள், சுவாரஸ்யமான உண்மைகள், மின்-வளங்களுக்கான கியு.ஆர்., குறியீடு ஆகியவற்றை வழங்குகிறது.

சமச்சீர் மற்றும் காலவரிசைப்படி, புத்தகத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர்களை மையமாகக் கொண்ட பாடப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

தலைப்புகளின் தெளிவை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், அட்டவணைகள் மற்றும் மென்பொருள் ஸ்கிரீன் ஷாட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு இந்திய மொழிகளில், விளைவு அடிப்படையிலான தொழில்நுட்பக் கல்வி புத்தகங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விபரங்களுக்கு:

https://ekumbh.aicte-india.org/allbook.php

Monday, January 01, 2024

January 01, 2024

குறுகியகால MBA படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்குAICTE எச்சரிக்கை!

In 2013, the Supreme Court of India ruled that colleges in India no longer need approval from the All India Council for Technical Education (AICTE) to offer Master of Business Administration (MBA) programs. The court ruled that MBA is not a technical course, and that the AICTE does not have control over affiliated university colleges. The court also ruled that the University Grants Commission (UGC) is the only body whose approval is necessary for colleges to offer MBA courses

What if MBA college is not AICTE approved?

An AICTE approval is necessary for colleges that offer technical courses. Since an MBA is not a technical course, an AICTE approval is not a necessity; non AICTE courses can operate freely in India. If you are aiming to get admission into a private MBA college, then an AICTE approval is not necessary

Does MBA come under AICTE?

Master's in Business Administration (MBA) is a degree course provided by the University or colleges recognized by the Universities which are approved by University Grants Commission (UGC), and sometimes also by All India Council for Technical Education (AICTE).

Is online MBA approved by AICTE?

Indira Gandhi National Open University (IGNOU) provides a Master of Business Administration (MBA) program with a duration of 2 to 4 years. This online MBA program holds accreditation, recognition, and approval from AICTE, UGC, and DEC. The entire program is available at a total fee of Rs 62,000/-. Which is better for MBA AICTE or UGC?

UGC is internationally recognised while AICTE is not. If a college is UGC approved then it is not necessarily to be AICTE approved. So,UGC approved college is better.

குறுகியகால MBA படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்குAICTE எச்சரிக்கை! Short-term MBA not allowed: AICTE warning to students!



குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்ட அறிவிப்பு:

சில தன்னம்பிக்கை பேச்சாளர்கள், 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு, உடனடி வகுப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் (crash course) நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏஐசிடிஇ அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக்கூடாது. எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலைப் படிப்பாகும். இது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அதனால், எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது. மாணவர்கள் அத்தகைய தவறான, மோசடியாக தகவல்களை நம்பி, அந்த படிப்புகளில் சேரவேண்டாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 27, 2023

November 27, 2023

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள AICTE அனுமதி

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள AICTE அனுமதி AICTE allows admission of any number of students in engineering colleges

பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள ஏஐசிடிஇ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள நிபந்தனையை தளர்த்த ஏஐசிடிஇ முடிவு எடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும் ஒரு பாடப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளின் போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும் ஆய்வு முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கும் என்றும் ஏஐசிடிஇ அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஏஐசிடிஇயின் புதிய சலுகை சிறு மற்றும் நடுத்தர பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கலாக அமையும். அளவுக்கு அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்போது தரமான கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் வரும் நிலையில், ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகவும், சிறு கல்லூரிகளுக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.

Tuesday, November 14, 2023

November 14, 2023

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு - AICTE வெளியீடு

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு: அடுத்த 3 ஆண்டுகளுக்கான வரைவு அறிக்கையை ஏஐசிடிஇ வெளியிட்டது

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறைகள் அடங்கிய 3 ஆண்டு வழிகாட்டி கையேட்டின் வரைவு அறிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள் ளது.

இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குத்தான் தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இந்நிலையில், முதல்முறையாக கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளிக்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டு கையேட்டின் வரைவு அறிக்கையை (2024-27) வடிவமைத்து, ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 286 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான செயல் முறைகள், விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

திருத்தப்பட்ட செயல்முறைகள்: புதிய கல்லூரிகள், படிப்புகள்தொடக்கம் மற்றும் அங்கீகார நீட்டிப்புக்கான திருத்தப்பட்ட செயல் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை, முதுநிலைப் படிப்புகளைத் தொடங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் அனுமதி கோரலாம். மேலும், ஒரு கல்வி நிறுவ னத்தை மூடும் கல்லூரிகள், அதே கல்வியாண்டில் வேறொரு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு சிறந்த கற்றலை வழங்க ஏதுவாக கல்வியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஒத்துழைப்புடன், தகுதியான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட சார்ந்த கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

மேலும், முறையான அங்கீ காரம் பெறாத கல்லூரிகள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும். அதே போல, ஒரு கல்லூரியானது ஓராண்டுக்கும் மேலாக முதல்வர் இல்லாமல் இயங்கினால், அந்த இடத்துக்கு தகுதியான நபர் நியமிக்கப்படும் வரை மாணவர் சேர்க்கைக்கான அனுமதி தற் காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்பன உட்பட பல்வேறு கருத்துருக்கள் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வரைவறிக்கை தொடர்பான தங்களின் கருத்துகளை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் www.aicte-india.org/ எனும் இணையதளம் வழியாக நவம்பர் 17-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Tuesday, October 24, 2023

October 24, 2023

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க AICTE அழைப்பு - டிச.15 கடைசி நாள்



முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க AICTE அழைப்பு Scholarships for Post Graduate Studies: AICTE Call to Apply

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 12, 2023

October 12, 2023

UGC,AICTE அமைப்புகளுக்கு பதிலான உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல்



UGC,AICTE அமைப்புகளுக்கு பதிலான உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல் Higher Education Commission bill to replace UGC, AICTE bodies to be tabled soon

உயர் கல்வித்துறையை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய உயர்கல்வி கமிஷன் (எச்.இ.சி.ஐ) அமைக்க மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) போன்ற அமைப்புகளுக்கு பதிலாக ஒரே அமைப்பாக இது அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த கமிஷன் அமைப்பதற்கான வரைவு மசோதா ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கி பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு மத்திய கல்வி மந்திரியாக பதவியேற்ற தர்மேந்திர பிரதான், இந்த மசோதாவை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தொழில்முறை தரங்களை அமைத்தல் ஆகிய 3 முக்கிய பணிகளை இந்திய உயர்கல்வி கமிஷன் மேற்கொள்ளும்.

இதில் நான்காவது முக்கிய பணியாக கருதப்படும் நிதியளித்தல், இந்த கமிஷனின் கீழ் இருக்காது. அதற்கான சுயாட்சி அதிகாரம் நிர்வாக அமைச்சகத்திடம் இருக்கும். இந்த கமிஷனிடம் மூன்று முக்கிய பணிகள் உள்ளன. முதலாவதாக, பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொள்ளும் ஒழுங்குமுறைப்பணி. இது ஏற்கனவே அதன் மட்டத்தில் பல உள்சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.

இரண்டாவதாக 2 நிலைகளில் அங்கீகாரம். அதாவது கல்லூரிகளின் அங்கீகாரம், மற்றும் திட்டங்கள் மற்றும் படிப்புகளின் அங்கீகாரம். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலை மறுசீரமைப்பதற்காக ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். அது பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.

மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகளை தவிர அனைத்து கல்லூரிகளும் இந்திய உயர்கல்வி கமிஷனின் கீழ் கொண்டு வரப்படும். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Sunday, September 10, 2023

Sunday, March 26, 2023

March 26, 2023

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இருந்த தடையை ஏஐசிடிஇ நீக்கியுள்ளது. மேலும், சேர்க்கை இடங்கள் அதிகரிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

நம் நாட்டில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை வகுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஏஐசிடிஇ ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை வரும் 2023-24-ம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதையடுத்து போதிய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் கல்லூரிகள் தொடங்க உரிய விதிகளின்படி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்.

எனினும், வளரும் தொழில்நுட்பப் படிப்புகள் தொடங்குதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை அந்த கல்வி மையங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுதவிர சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 360 வரை கல்லூரிகள் உயர்த்திக் கொள்ளலாம். புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

அதன்படி 50 சதவீத மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளுக்கும் இனி செயற்கை நுண்ணறிவு உட்பட வளரும் தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனுமதிக்கப்படும். எனினும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை, அந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் 3 முதன்மைப் படிப்புகளை ஏற்கெனவே கொண்டிருக்க வேண்டும். ஆலோசகர்கள் நியமனம்: பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிஎம் கேர் சூப்பர் நியூமரரி சேர்க்கை திட்டம் தொடரப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க கல்லூரிகளில் பிரத்யேக ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பல்கலை.கள் மற்றும் ஆய்வு மையங்களுடன் நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறவும், நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog