Breaking

Showing posts with label Ramadoss. Show all posts
Showing posts with label Ramadoss. Show all posts

Sunday, April 16, 2023

April 16, 2023

தொழில்நுட்ப படிப்பு தொடங்குவது அரசின் கொள்கைக்கு எதிரான செயல்: ராமதாஸ்

பெரியார் பல்கலையில் தொழில்நுட்ப படிப்பு தொடங்குவது அரசின் கொள்கைக்கு எதிரான செயல்: ராமதாஸ் - Starting technical courses against government policy: Ramadoss

சென்னை: பெரியார் பல்கலையில் தொழில்நுட்ப படிப்பு தொடங்குவது அரசின் கொள்கைக்கு எதிரான செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படவிருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படாமல், தனியார் மூலம் நடத்தப்படும் இத்தகைய படிப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து விடுமோ? என்ற அச்சத்தை அளிக்கிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்த 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்பை வழங்கவிருக்கின்றன. இப்படிப்பை படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்றும், 2030ம் ஆண்டுக்குள் 2.36 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இம்மெர்சிவ் தொழில்நுட்பம் என்பது நான்காம் தொழில்நுட்ப புரட்சியின் ஓர் உறுப்பு என்பதும், இப்படிப்பை படித்தவர்களுக்கு அதிக தேவை இருக்கலாம் என்பதும் உண்மை தான்.

ஆனால், இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளிக்காமல் இந்தப் படிப்பை வழங்க பெரியார் பல்கலை. முன்வந்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் இரண்டகமும், குற்றமும் ஆகும். முதற்கட்டமாக, தமிழக அரசு உயர்கல்விக்கான கொள்கையை தெளிவாக வகுத்திருக்கிறது. தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப் படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பல்கலைக்கழகம் மட்டுமே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்க முடியும். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் தகுதி இல்லை என்பதால், அதனால் வழங்கப்படும் பி.டெக் பட்டம் செல்லாது.

இரண்டாவதாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தப் படிப்புக்கு அத்தகைய ஒப்புதல் எதையும் தொழில்நுட்பக் கல்விக் குழுவிடமிருந்து பெரியார் பல்கலை. பெறவில்லை. அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, கல்வி நிலைக்குழு ஆகியவற்றின் அனுமதி கூற பெறப்படவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக அமைப்புகள், தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்படாத எந்த படிப்பும் சட்டத்திற்கு எதிரான படிப்பாகவே பார்க்கப்படும். மூன்றாவதாக, இந்தப் படிப்பை வழங்குவது பெரியார் பல்கலைக்கழகம் அல்ல... ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனம் தான். மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும்.

நான்காவதாக கட்டணக் கொள்ளை. இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் கூட பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கல்விக்கட்டணமாக ரூ.12,000 உட்பட ஒட்டுமொத்தமாகவே ரூ.30,000 மட்டும் தான் ஆண்டுக் கட்டணமாக தண்டல் செய்யப்படுகிறது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) படிப்புக்காக ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக பெறப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய கல்விக் கொள்ளை ஆகும். தனியார் நிறுவனத்தின் கல்விக் கொள்ளைக்காக பெரியார் பல்கலைக்கழகம் பயன்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. ஐந்தாவதாக, ஒரே வளாகத்தில் அனைத்து படிப்புகளும் என்பது மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையின் கரு ஆகும். இந்தக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய சூழலில், தமிழக அரசின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பெரியார் பல்கலைக்கழகம் எடுத்திருப்பது தமிழக அரசுக்கு விடப்படும் அறைகூவல் ஆகும்.

இதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவை அனைத்தையும் கடந்து, உரிய ஒப்புதல் பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், அதைப் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தலையிட்டு பல்கலைக்கழகத்திற்கு உரிய அறிவுரைகளையும், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Monday, April 03, 2023

April 03, 2023

ஆசிரியர்கள் நியமனம் அன்புமணி கோரிக்கை

ஆசிரியர்கள் நியமனம் அன்புமணி கோரிக்கை - Anbumani's request for appointment of teachers பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் மேம்பட வேண்டும். கல்வித்தரம் உயர வேண்டும் என்றால் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வுகள் எவ்வளவு கடினமானவை என்பதற்கு அண்மையில் வெளியான இரண்டாம் தாள் முடிவுகள் தான் சான்றாகும்.

Thursday, December 29, 2022

December 29, 2022

ஊதிய முரண்பாடு: ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்



ஊதிய முரண்பாடு:

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை அரசு களைய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா். அவா்களில் 6 போ் மயங்கியதைத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2009 மே 31 வரை பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது அதே ஆண்டு ஜூன் 1 முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிா்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியைச் செய்யும் ஆசிரியா்களுக்குப் பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிா்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டைப் போக்க வேண்டியது அரசின் கடமை. ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Wednesday, December 28, 2022

December 28, 2022

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. 31.05.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009 முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாநிலை இருந்தபோது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இப்போதாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

Saturday, September 17, 2022

September 17, 2022

Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9 - தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல் - In Tamil Nadu also insisting on giving holidays to schools up to class 9 தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Saturday, September 03, 2022

September 03, 2022

தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சமா? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந்தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம்.

ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்று தான்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது.

இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது தான். இதைத் தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு தான் தொழிற்கல்வி பாடப்பிரி வினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.

மேல்நிலைக்கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அவற்றை மூடி கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது.

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையை போக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Friday, September 02, 2022

September 02, 2022

உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வலியுறுத்தல்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய அளவில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. எனவே, கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்த தடையும் கிடையாது. எனவே, 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும்.

Tuesday, August 23, 2022

August 23, 2022

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கௌரவ விரிவுரையாளா்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கௌரவ விரிவுரையாளா்களும் பணிபுரிகின்றனா். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவா்களின் நிலை கௌரவமாக இல்லை.

மாணவா்களுக்கு உயா்கல்வி கற்பிக்கும் அவா்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.700-க்கும் குறைவு தான். இந்த அளவுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. கௌரவ விரிவுரையாளா்கள் கௌரவமாக பணி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீா்வு அவா்களை பணி நிரந்தரம் செய்வதுதான்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன.

எனவே, இனியும் தாமதிக்காமல், கௌரவ விரிவுரையாளா்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Wednesday, July 13, 2022

July 13, 2022

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? -தமிழக அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.

நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுநரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை. நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுநர் மாளிகை தெரிவித்ததாக மே 4-ஆம் தேதி முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுநர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தமிழக மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Monday, June 20, 2022

June 20, 2022

அண்ணாமலை பல்கலை. தோ்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை

அண்ணாமலை பல்கலை. தோ்வுகளை ஒத்தி வைக்க ராமதாஸ் கோரிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளா் தோ்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன.

பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனா். காவல் உதவி ஆய்வாளா் என்பது அவா்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தோ்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவா்கள் ஆளாகியுள்ளனா்.

முதுநிலை உடற்கல்வியியல் பயிலும் மாணவா்கள் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதித் திறன் கொண்டவா்கள். அவா்களுக்கும் 25-ஆம் தேதி பருவத் தோ்வுகள் நடத்தப்படுவதால் அவா்களாலும் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வில் பங்கேற்க முடியாது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தோ்வு அட்டவணை காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு செல்ல விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தோ்வு அட்டவணையை மாற்ற பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்து விட்டது!

பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாணவா்கள் நலனே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.

Thursday, April 07, 2022

April 07, 2022

நீட் தேர்வா? 12ம் வகுப்பு மதிப்பெண்ணா?; உச்சத்தை அடைந்திருக்கும் குழப்பம்

Admission in Tamil Nadu on NEED basis or 12th class marks? Pamaka youth leader Anbumani has said that the confusion has reached its peak.

In a post on his Twitter page today, he said: "The NEET Exemption Act was passed for the second time in the Tamil Nadu Legislative Assembly on February 8, two months from today, but has not yet been approved by the Governor of Tamil Nadu and sent to the President for approval!

Notice of NEET Exam 2022 has been published and online application registration has started. So, in Tamil Nadu, is it based on NEED or is it based on 12th class marks? The confusion of has reached a climax!

This is a much worse situation than just student admission based on NEET exam. 12th class exam ... Need exam ... The stress of focusing on what is burning the students. It may do more than just let you focus on any choice!

It is the rural poor students who will be most affected by this mess. Need to expedite exemption approval tasks. Is it possible to get NEET exemption before student admission? The Tamil Nadu government should clarify that in the interest of the students! ”Said Anbumani.
தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

2022ம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது. அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது! நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும். 12-ம் வகுப்புத் தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும்!

இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்!" என்று அன்புமணி கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog