Tuesday, July 15, 2025
Tuesday, April 01, 2025
Tuesday, December 05, 2023
TNPSC - குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள்
குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC
பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC தகவல்.
TNPSC - தேர்வு முடிவுகள் குறித்த விவரம் வெளியீடு - Results Declaration Schedule (as on 2nd June 2023) - PDF
CLICK HERE
Wednesday, November 22, 2023
குரூப் 2 தேர்வு முடிவுகள்: TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு!
குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.
குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை - TNPSC Results Declaration Schedule (As on 21st November 2023) - PDF
நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.
Thursday, November 09, 2023
TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு!
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும், முதன்மை எழுத்து தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கையை விட, மும்மடங்கு அதிகம்.தேர்வு முடிவுகளை வெளியிட, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஐந்து மாதங்கள். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு, நம் மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன், எந்த வகையிலும் குறைவானது இல்லை.இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதம், தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. மேலும் சில எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே, பணிகள் துவங்க சற்றே தாமதமானது.
இதுபோன்ற தாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.
தற்போது, மதிப்பீட்டு பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன; 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள், முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, March 01, 2023
Group 2 மறுதேர்வு நடத்தப்படுமா? - TNPSC விளக்கம்
குரூப் 2 முதன்மைத் தேர்வில் தரவரிசைக்கு முக்கியமானதாக கருதப்படும் இரண்டாம் தாள் எவ்வித இடர்பாடுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக நடைபெற்று முடிந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகவும், அத்தேர்வை ரத்து செய்து விட்டு, உடனடியாக மறுதேர்வினை நடத்த வேண்டும் என்றும் தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவிகிதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்.
தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-II தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.
Saturday, February 25, 2023
TNPSC - இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு - 55,071 பட்டதாரிகள் எழுதுகின்றனர்
தமிழகத்தில் குரூப் 2 பிரதான தோ்வு சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் போ் எழுதவுள்ளனா்.
மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடா்பான தோ்வும் நடைபெறவுள்ளன.
இந்தத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதவுள்ளனா். அவா்களில், 27 ஆயிரத்து 306 போ் ஆண்கள். 27 ஆயிரத்து 764 போ் பெண்கள். ஒருவா் மூன்றாம் பாலினத்தவா். இந்தத் தோ்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
சென்னையில் 8 ஆயிரத்து 315 போ் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
Thursday, February 16, 2023
TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-II & II ) எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, November 08, 2022
TNPSC - குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.
இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்.25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 22, 2022
குரூப் 2 தேர்வு அறையில் செல்போனை மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்: பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூடூத் சிக்னல்
Saturday, May 21, 2022
Tuesday, May 17, 2022
TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு எப்போது? - ஆணையம் விளக்கம்
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களிலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. ஆணையம் விளக்கம்
நடப்பாண்டில் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் அறைக்குள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு நடைபெறுமா? TNPSC தலைவர் பேட்டி
Wednesday, May 11, 2022
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC அறிவிப்பு.
வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் கட்டாயம்
முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி
தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.
Thursday, February 24, 2022
5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு
இதையும் படிக்க | பள்ளிகளில் எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு
புதன்கிழமை வெளியிடப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 116 நோ்முகத் தோ்வினைக் கொண்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.





