Breaking

Showing posts with label CTET. Show all posts
Showing posts with label CTET. Show all posts

Wednesday, September 10, 2025

Wednesday, September 18, 2024

Monday, November 06, 2023

November 06, 2023

CTET தேர்வு தேதி: CBSE அறிவிப்பு

ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

Friday, October 27, 2023

October 27, 2023

CTET - தமிழில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CM CELL பதில்



CM CELL's response to Tamil Nadu government's request to conduct CTET - in Tamil - CTET - தமிழில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CM CELL பதில்

மேற்கொண்ட நடவடிக்கைவிபரம்: மத்திய அரசின் கொள்கை முடிவினை சார்ந்தது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . கோப்பின் மீது மேல் நடவடிக்கை இல்லை. கோரிக்கை ஏற்கப்பட்டதா?: நிராகரிக்கப்படுகிறது

Wednesday, October 26, 2022

October 26, 2022

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பமா?



மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பமா?

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுதும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும்.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்., 31 முதல் நவ. 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

தேர்வு கட்டணத்தை நவ. 25க்குள் செலுத்த வேண்டும்.

பட்டியல் பழங்குடியினத்தவர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு 500 ரூபாயும்; இரண்டு தாளும் சேர்த்து எழுத விரும்பினால் 600 ரூபாய்; மற்ற பிரிவினர் ஒரு தாளுக்கு 1 000 மற்றும் இரண்டு தாள்களுக்கு சேர்த்து 1 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வுக்கான சரியான தேதி விபரம் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும். தேர்வு மையம் அமைய உள்ள நகரை முன்னுரிமை அடிப்படையில் தேர்வர்கள் குறிப்பிடலாம். விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு மையம் இருக்கும் நகரங்கள் ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு நகர தேர்வு மையங்களுக்கான தேர்வர்களின் எண்ணிக்கை முடிந்து விட்டால் மீதமுள்ள தேர்வர்கள் வேறு நகரத்தை தேர்வு செய்யவோ தேர்வு விண்ணப்பத்தை ரத்து செய்யவோ ஆன்லைனில் வாய்ப்பு அளிக்கப்படும். கூடுதல் விபரங்களை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, October 19, 2021

October 19, 2021

CTET - டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும் - விண்ணப்பத்தில் நவம்பர் 3-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - PUBLIC NOTICE

15-வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும்!

தேர்வுக்கு வரும் 25 வரை விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வரும் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

PUBLIC NOTICE

Date: 18-10-2021

The Central Board of Secondary Education will conduct the 15h edition of Central Teacher Eligibility Test (CTET) between 16.12.2021 to 13.01.2022. The test will be conducted in CBT Mode only (Computer Based Test). The online application-process for CTET examination has been started from 20-09-2021. It is hereby informed that one more examination city has been created at Leh for the convenience of aspirants. The candidates who have already applied for CTET December, 2021 and wish to change their city or make any correction in their particulars in the online application form can do so from 28.10.2021 to 03.11.2021. No corrections shall be allowed under any circumstances after this date.

Further on the basis of Gazette Notifications No. 459 and 462 dated 13.10.2021 issued by National Council for Teacher Education, New Delhi, i.e. "Post-Graduation with a minimum 55% marks or equivalent grade and three-year integrated B.Ed.-M.Ed.", such candidates can also apply for CTET-December, 2021 as per eligibility criteria given in the said notifications. The required changes have already been made in drop box of On-line application form.

Therefore, in order to facilitate the candidates the last date for submitting online application has been extended till 25-10-2021 (Monday) and candidates can submit their fee upto 26.10.2021 (Tuesday) before 15.30 hrs.

The interested candidates may apply through online mode accordingly.

Thursday, September 23, 2021

September 23, 2021

CTET - தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - CBSE அறிவிப்பு

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்!


சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது 19 மாவட்டங்களாக அதிகரிப்பு.


சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.


- சி.பி.எஸ்.இ அறிவிப்பு

Sunday, September 19, 2021

September 19, 2021

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு: செப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு வரும் செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் வரும் டிச.16-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான நாள்களில் கணினி வழித் தோ்வாக 20 மொழிகளில் நடைபெறவுள்ளது. சிடெட் தோ்வுக்கான பாடத்திட்டம், தோ்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு, தோ்வுக் கட்டணம், தோ்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரியில் திங்கள்கிழமை (செப்.20) முதல் காணலாம். இதனை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ‘சிடெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தோ்வுக்கு தகுதியான நபா்கள் ‘சிடெட்’ வலைதள முகவரியில் மட்டுமே செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 19-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமா்ப்பிக்க வேண்டும். அக்.20-ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பொதுப் பிரிவினருக்கு ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.1,000, இரண்டு தாள்களையும் சோ்த்து எழுத ரூ.1.200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எஸ்சி, எஸ்.டி. பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.500, இரண்டு தாள்களையும் எழுத ரூ.600-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Saturday, September 18, 2021

September 18, 2021

CTET - Central Teacher Eligibility Test Exam Announced - Press Release - Date: 18.09.2021

The Central Board of Secondary Education will conduct the 15th edition of Central Teacher Eligibility Test (CTET) in CBT (Computer Based Test) mode between 16-12-2021 to 13-01-2022 (exact date will be intimated on the admit card of the candidate).


The test will be conducted in 20 (Twenty) languages throughout the country. The detailed Information Bulletin containing details of examination, syllabus, languages, eligibility criteria, examination fee, examination cities and important dates will be available on CTET official website https://ctet.nic.in w.e.f. 20.09.2021 and the aspiring candidates are requested to download the Information Bulletin from the above mentioned website only and read the same carefully before applying.


The aspiring candidates have to apply online only through CTET website i.e. https://ctet.nic.in. The online application-process will be start from 20-09-2021 (Monday) onwards and the last date for submitting online application is 19-10-2021 (Tuesday) upto 23:59 hrs. The fee can be paid upto 20-10-2021 (Wednesday) before 15:30 hrs.


Tuesday, August 03, 2021

August 03, 2021

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் மாற்றம் – CBSE அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் மாற்றம் – CBSE அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:
இந்தியாவில் மத்திய, மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கு மட்டுமே அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. இந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நடைமுறை இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் மத்திய மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு மத்திய ஆசிரியர் கல்வி தகுதித் தேர்வின் வினாத்தாள் வடிவமைக்கப்படும் எனவும் தேர்வு எழுதும் ஆசிரியர்களின் சிந்தனை திறனை மதிப்பிடும் வகையில் கேள்விகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 1 ஆண்டு காலமாகவே கல்வி இணையதளம் வாயிலாக கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்கள் டிஜிட்டல் வழி கற்பித்தல் முறையை,சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Sunday, August 01, 2021

August 01, 2021

CTET 2021 தேர்வு முறைகளில் மாற்றம் – CBSE முக்கிய அறிவிப்பு வெளியீடு!

CBSE பள்ளிகளில் பணிபுரிய நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

CTET தேர்வு:
ஒவ்வொரு வருடமும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும். வருடந்தோறும் நடத்தப்படும் இந்த தகுதி தேர்வுகள் இந்த வருடமும் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான CTET தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கேள்வித்தாள் குறைவான உண்மை அறிவு மற்றும் கருத்தியல் புரிதல், பயன்பாடு, சிக்கல் தீர்க்கும், பகுத்தறிவு மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு CTET தேர்வு அல்லது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த உள்ள தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், விண்ணப்பதாரர்கள் இலவசமாக தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்ய உள்ள ஆசிரியர்கள் கல்வி உள்ளடக்க அறிவு, பள்ளி பாடத்திட்டத்தில் பாடத்தின் அறிவு சம்பந்தம் ஆகியவற்றை மதிப்பிடுவதில் கவனம் செலுத்தப்படும். அளவிடக்கூடிய திறன்கள், மாதிரி வரைபடங்கள் மற்றும் மாதிரி கேள்விகளுடன் கூடிய விரிவான மதிப்பீட்டு கட்டமைப்பு சிபிஎஸ்இ மூலம் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CTET தேர்வுக்கு தயார் செய்ய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CTET தேர்வு தேதிகள், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான அட்டவணை தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 14, 2021

July 14, 2021

"TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும்" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்

"TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும்"

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வேண்டுகோள்

Friday, June 25, 2021

June 25, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை!

பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில், பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. அதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அவை தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விபரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப் பட்டியலில், இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 23, 2021

June 23, 2021

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லும்

மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வுகளின் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது, சமீபத்தில் மாற்றப்பட்டது.
அதற்கு பதிலாக, ஆயுள் முழுமைக்கும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான 'சிடெட்' முடித்தவர்களின் சான்றிதழ்கள், அவர்களின் ஆயுள் காலம் முழுதும், பணியில் சேர செல்லத் தக்கது. 'ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது' எனக் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog