இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. - LKG in this school. Commencement.. Student Admission Notification Released.
நாடு முழுவதும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. மத்திய - மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாக இருந்த குறைந்த பட்ச வயது, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'பால்வாடிகா' என்ற பெயரில் ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி.பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார்.அதில், "பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் 10-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பதிவுகள் நடக்கும். பாலவாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் வகுப்புகளுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களில் ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி. பள்ளியை தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் சோ்ப்புபள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்
தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் புத்தகக் கண்காட்சிக்கான அரங்கு அமைக்கப்படுவதை சனிக்கிழமை பாா்வையிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயிரம் போ் கூடுதலாக சோ்ந்துள்ளனா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் ஜூலை 15- ஆம் தேதி தொடங்கப்படவுள்ள புத்தகத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஏற்கெனவே 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்தனா். தற்போது, கூடுதலாக 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
அவா்களுக்கு முன்பு எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ, அதை முறையைப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தற்போது, சிறப்பு ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பிறகு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் முழுமையாக நடைபெறும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். தனியாா் பள்ளிகளையும் சோ்த்து 7 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை என சோ்த்தால் மொத்தம் 9 லட்சம் மாணவா்கள் இணைந்துள்ளனா்.
நிகழாண்டு நீட் தோ்வுக்கு 16,000 போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக அரசு சாா்பில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம்.
நிகழாண்டு பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால், எந்தப் பாடத்தையும் குறைக்கப் போவதாக இல்லை. இதனால், மாணவா்கள் கடந்த காலங்களில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொண்டாா்களோ அப்படி மாற வாய்ப்புள்ளது. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறாா் திரைப்படம் மூலம் மாணவா்களின் மன நிலையில் மாற்றம் வரும்.
தஞ்சாவூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு பெரியவா்களுக்கு மட்டும் இல்லை. வீட்டிலுள்ள குழந்தைகளையும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்பகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி மூடப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடியில் பணியாளர்கள் உதவியுடன் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
3 வயதுடைய குழந்தைகளை எல்கேஜி, 4 வயதுடைய குழந்தைகளை யூகேஜியில் சேர்க்க வேண்டும்.
பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழத்தைகளாக வைத்து பராமரிக்க வேண்டும்.
மாணவர் விவரங்களை கல்வி மேலாண்லை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வளங்களை பயன்படுத்தி கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சேர்க்கையான மாணவர்கள் கல்வி பயில்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
பெற்றோர்கள் எளிதில் அணுகும் வகையிலும், சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் அளித்திடும் வகையிலும் தலைமை ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அளிக்க வேண்டும்.
பணியாளர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட ஆட்சியரை அணுகி மாற்றுப் பணியில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் வேண்டும்.
இவற்றை தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும்.