Breaking

Showing posts with label TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2023. Show all posts
Showing posts with label TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2023. Show all posts

Tuesday, March 10, 2026

Thursday, February 23, 2023

February 23, 2023

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II - தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!



Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)- Paper-II-2022 Release of Tentative Key and Objection Tracker

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06. பத்திரிகைச் செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-Iற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) 03.02.2023 முதல் 15.02.2023 வரை காலை/மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trhtn.nic.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் (Session) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின்மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 22022023 பிற்பகல் முதல் 25.022023 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

கையேடுகள் (Guides, Notecs) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, February 08, 2023

February 08, 2023

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Attention TN TET Aspirants – Important Notice Released by TNOU University!

தமிழகத்தில் திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வும், ஆசிரியர் தகுதி தேர்வும் (TET) ஒரே நாளில் நடைபெற உள்ளது. அதனால் TET தேர்வு எழுதவுள்ளவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் டெட் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி முதல் கட்ட TET paper – 1 தேர்வு 2022 அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET paper – 2 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இந்த பல்கலைக்கழக தேர்வு நாளில் டெட் தேர்வும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் ஒரே நாளில் இரு தேர்வையும் எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 19.03.2023 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TET எழுதவுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்றுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Wednesday, January 04, 2023

January 04, 2023

TET இரண்டாம் தாள் தோ்வு: 31-இல் தொடக்கம்

டெட் இரண்டாம் தாள் தோ்வு: 31-இல் தொடக்கம்

பட்டதாரி ஆசிரியா் பணித்தகுதிக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாள் தோ்வு (‘டெட் 2’) கணினி வழியில் ஜன.31 முதல் பிப்.12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்த டெட் தோ்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது.

4 லட்சம் போ் விண்ணப்பம்: அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு அறிவிப்பாணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும் மற்றும் 2-ஆம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும் விண்ணப்பித்தனா். இந்தமுறை டெட் தோ்வை இருகட்டங்களாக நடத்த முடிவானது. அதன்படி டெட் முதல் தாள் தோ்வு கடந்த அக்டோபா் 16 முதல் 19-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தோ்வை 1 லட்சத்து 53,023 போ் எழுதினா். அதன் முடிவுகள் டிசம்பா் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 போ்(14%) தோ்ச்சி மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

இதையடுத்து 2- ஆம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் 2-ஆம் தாள் தோ்வை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையான காலகட்டத்தில் கணினி வழியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கணினி வழித் தோ்வெழுத உள்ள பட்டதாரிகள் தோ்வுக்கு 15 நாள்கள்முன் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பயிற்சி மேற்கொள்ளலாம். விரிவான தோ்வுக்கால அட்டவணை, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் ஜனவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog