recharge plans
January 23, 2025
Showing posts with label JIO. Show all posts

Thursday, January 23, 2025
Saturday, December 09, 2023
Latest News
December 09, 2023
நெட்பிளிக்ஸ்.. அமேசான் ப்ரைம் 100GB டேட்டா இலவசம் - ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்..
நெட்பிளிக்ஸ்.. அமேசான் ப்ரைம் இலவசம்.. 100GB டேட்டாவும் இருக்கு - ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்..
ரிலையன்ஸ் ஜியோவின் அற்புதமான திட்டத்தின் மூலம் Netflix, Amazon Prime சந்தா இலவசம், 100GB டேட்டா மற்றும் வரம்பற்றஅன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.699 திட்டத்தின் பேக்கில் 100 ஜிபி மொத்த டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா தீர்ந்த பிறகு, வாடிக்கையாளர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 என்ற விகிதத்தில் டேட்டாவைச் செலவிடலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பேக்கில், 3 பேமிலி சிம்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப சிம் டேட்டாவிற்கு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சிம் கார்டிலும் 5 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். அதாவது எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற எஸ்டிடி மற்றும் குரல் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த பேக்கில் ஜியோ பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் பெறலாம்.
இந்த திட்டத்தில் Netflix Basic மற்றும் Amazon Prime சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பேக்கில், JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா 1 வருடத்திற்கு இலவசம்.
Wednesday, February 01, 2023
Who provides 5G service?
February 01, 2023
தமிழகத்தில் 19 நகரங்களில் 5ஜி சேவையினை விரிவுபடுத்தியது ஜியோ
தமிழகத்தில் 19 நகரங்களில் 5ஜி சேவையினை விரிவுபடுத்தியது ஜியோ!
நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது.
இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது.
இதில், தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கிறது. தற்போது 225 நகரங்களில் ஜியோ பயானாளர்கள் ட்ரூ 5G சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
வெறும் 120 நாட்களில் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இது தங்களது அடுத்த மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது.

Monday, August 29, 2022
Who provides 5G service?
August 29, 2022
தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகம்; ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகம்; ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். புதுடெல்லி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது , நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் அவர் பேசும் போது ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்காக இருக்கும்.கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான ஒரு 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ 2000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
ஒன்றிய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது.உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் 1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது என கூறினார். 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.