Breaking

Showing posts with label 10th Public Exam 2023. Show all posts
Showing posts with label 10th Public Exam 2023. Show all posts

Friday, April 21, 2023

April 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.

ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து, மற்ற பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்பட்டன.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday, April 20, 2023

April 20, 2023

SSLC பொதுத்தேர்வு நிறைவு - விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்
பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும். தேர்வு முடிவு

மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்யவேண்டும்.

எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.

Tuesday, April 18, 2023

April 18, 2023

விடைத்தாள் திருத்தும் பணி.. தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த தேர்வுத்துறை

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

விடைத்தாள் திருத்தும் பணி.. தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த தேர்வுத்துறை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tuesday, April 11, 2023

April 11, 2023

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு | ஆங்கில வினாத்தாளில் தவறான கேள்விகள்? - கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு | ஆங்கில வினாத்தாளில் தவறான கேள்விகள்? - கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதி தொடங்கியது. நேற்று நடந்த ஆங்கிலம் வினாத்தாளில் தவறுகள் இருப்பதாக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆங்கில ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஆங்கில தேர்வு வினாத்தாளில் முதல் பகுதியில் 1 முதல் 6 வரையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இணைச்சொல் விடையளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ வினாத்தாள் வடிவமைப்பின்படி, 1 முதல் 3 வினாக்கள் இணைச்சொல்லாகவும், 4 முதல் 6 வரையிலான வினாக்கள் எதிர்ச்சொல்லாகவும் இருக்க வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஒருசில பள்ளி தேர்வு மையங்களில் தேர்வறை கண்காணிப்பாளர்கள், மாணவர்களை 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு எதிர்ச்சொல்எழுதுமாறு சொல்லியிருக்கிறார் கள். சில பள்ளிகளில், இணைச் சொல் எழுதுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தகுழப்பங்கள் நீங்க வேண்டுமானால் 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். இதுகுறித்து அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் விவகாரம் எங்களின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. வினாத்தாளில் எந்தவிதமான தவறும் கிடையாது.

தற்போது பொதுத்தேர்வுகளுக்கு புளு பிரிண்ட் முறை நடைமுறையில் இல்லை. எனவே இணைச்சொற்கள், எதிர் சொற்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆறு கேள்விகளும் இணைச் சொற்களாக கேட்பதற்கும் அதில் வழிவகை இருக்கிறது. எனினும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப் படும்’’ என்று தெரிவித்தனர்.

Saturday, April 08, 2023

April 08, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆப்சென்ட் எவ்வளவு?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆப்சென்ட் எவ்வளவு?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆனவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி துறை வெளியிடவில்லை. அதனால், பிளஸ் 2 தேர்வு போல், ஆப்சென்ட் அதிகரித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 13ல் துவங்கி, ஏப்.,3ல் முடிந்தது. இந்த தேர்வில், மொழி பாட தேர்வில் கூட, 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து, நமது நாளிதழில் வெளியிட்டதும், அமைச்சர் மகேஷ் நீண்ட விளக்கம் அளித்தார்; சட்டசபையிலும் விளக்கம் அளித்தார்.

இடைநிற்றல் மாணவர்களை, தேர்வு பட்டியலில் சேர்த்து, ஹால் டிக்கெட் வழங்கியதால், ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரித்ததாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. பிளஸ் 1 மொழி பாட தேர்வில், 12 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகினர். இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த, 6ம் தேதி துவங்கியது. தமிழ் பாட தேர்வு முடிந்துள்ளது. இந்த தேர்வை எவ்வளவு பேர் எழுதினர்; எவ்வளவு பேர் ஆப்சென்ட் ஆகினர் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடவில்லை.

ஏற்கனவே, 10ம் வகுப்பு பொது தேர்வின் செய்முறை தேர்வில், 25 முதல் 30 ஆயிரம் பேர் வரை ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியானது. ஆப்சென்ட் மாணவர்களை செய்முறை தேர்வுக்கும், பொது தேர்வுக்கும் வரவழைக்க, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு பலன் கிடைத்ததா என்று தெரியவில்லை.

தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்; ஆப்சென்ட் ஆனது எத்தனை பேர் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கவில்லை. விபரங்கள் மறைக்கப்படுவதால், ஆப்சென்ட் எண்ணிக்கை, பிளஸ் 2வை போல் அதிகமாக உள்ளதா என, பல்வேறு தரப்பினரும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்

Friday, April 07, 2023

April 07, 2023

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா தொற்று குறித்து 8 மார்க் கேள்வி: கண் முன் நடந்ததை விரிவாக எழுதிய மாணவர்கள்

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா தொற்று குறித்து 8 மார்க் கேள்வி: கண் முன் நடந்ததை விரிவாக எழுதிய மாணவர்கள்

தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றி 8 மார்க் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு கண்முன் நடந்ததை மாணவர்கள் விரிவாக எழுதினர். தமிழ்நாடு முழுவதும் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 15 ஒரு மார்க் கேள்விகளும், 2 மார்க் கேள்விகள் 9ம், 3 மார்க் கேள்விகள் 6ம், 5 மார்க் கேள்விகள் 5ம், 8 மார்க் கேள்விகள் 3ம் கேட்கப்பட்டிருந்தது. இவற்றில் ஒரு மார்க், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் கேள்விகள் மிக எளிதாக இருந்தது. 8 மார்க் கேள்விகள் 3 எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வியிலும், இது அல்லது அது என இரு கேள்விகளை கேட்டிருந்தனர். அதனால், மாணவர்கள் அந்த 8 மார்க் கேள்விகளையும் சரியாக தேர்வு செய்து எழுதினர். இவற்றில் கடைசி கேள்வியாக, அதாவது 45வது கேள்வியில் அ மற்றும் ஆ ஆகிய இரண்டும் மிக எளிதான நிகழ்வை மையமாக கொண்டு கேட்கப்பட்டிருந்தது. 45 அ கேள்வியாக உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக. குறிப்பாக முன்னுரை, அரசு பொருட்காட்சி அமைவிடம், பலவித அரங்குகள், நடைபெற்ற நிகழ்ச்சிகள், அடைந்த உணர்வுகளும்-நன்மைகளும், முடிவுரை ஆகியவற்றை எழுதிட குறிப்பிட்டிருந்தனர்.

45 ஆ கேள்வியாக குறிப்புகளை கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக. குறிப்பாக முன்னுரை, கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள், நமது கடமைகள், முடிவுரை ஆகியவற்றை எழுதிட கேட்கப்பட்டிருந்தது. இதில், பெரும்பாலான மாணவ, மாணவிகள் கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றி விரிவாக, கண்முன் பார்த்ததையும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எழுதியதாக தெரிவித்தனர்

Thursday, April 06, 2023

April 06, 2023

TN 10th Public Exam - மே 5ல் முடிவுகள் வெளியாகிறது!

TN 10th Public Exam: 9.76 லட்சம் பேர் எழுதும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்.. தயார் நிலையில் ஏற்பாடுகள்..! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு இறுதிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதனை மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். முன்னதாக 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன்பின்னர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 5) ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9, 22, 725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர்.

அதேசமயம் தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 264  சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வராத நிலையில் அதற்காக கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த மாதிரி ஆப்சென்ட் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களை கண்காணிக்கும் படை, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,100 பறக்கும் படைகள்அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 1,135 உள்ளனர். தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு காலை 10 மணி அளவில் தொடங்கும். காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு பிறகு விடை எழுதலாம். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். மேலும், மின் தடை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வு பணியில், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 13,151 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா போன்ற குறைகள் உள்ள மாணவ-மாணவியர் சொல்வதை எழுத தனி நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகளை தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். புகார் தெரிவிக்க விரும்புவோர் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Tuesday, April 04, 2023

April 04, 2023

10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால் ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு

10ம் வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால் ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு - As the 10th class examination is about to start, the number of students visiting the Hayagrivar temple is increasing

10ம்வகுப்பு தேர்வு துவங்க உள்ளதால்,ஹயக்ரீவர் கோயிலுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கல்வி கடவுள் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கடுத்து மிகப்பழமையான புராண காலத்து ஆலயமான இந்த செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தினசரி காலை 8மணிமுதல் மதியம் 10 மணி வரையிலும் மாலை 4மணிமுதல் 8மணி வரையிலும் ஆலயம் செயல்படும். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7மணிமுதல் மதியம் 12.30 மணிவரையிலும், மாலை 4மணிமுதல் இரவு 8.30மணி வரையிலும் செயல்படும். 10முதல் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் போது மாணவர்களின் வருகையை கருத்தில் கொண்டு ஆலயம் கூடுதலாக செயல்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு முன்பாக இந்த ஆலயத்திற்கு குழந்தையை அழைத்து வந்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து ஆலயத்தின் சுவற்றில் பிள்ளையார் சுழி போட்ட பிறகு பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். மாணவர்கள் தேர்வு நேரங்களில் இங்கு வந்து நோட்டு, புத்தகம், பென்சில் ரப்பர், உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதியதாக வாங்கி பெருமாளின் பாதத்தில் வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அந்த கல்வி உபகரணங்களை மாணவ மாணவிகள் தனது கல்விக்கு பயன்படுத்துவார்கள். கடந்த 10 நாட்களாக 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதாலும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்க இருப்பதாலும் செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் ஆலயத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அல்லாது சென்னை திருவள்ளூர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று புதிய கல்வி உபகரணங்களை வாங்கி பெருமாளின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொண்டதோடு ஆலயம் முழுவதும் சுவர், மரம் என ஆலய வளாகம் முழுவதிலும் தேர்வு எண்ணை எழுதி வைத்து அதிக மதிப்பெண் எடுத்து சாதிப்பதாக மாணவ மாணவிகள் நம்பிக்கையுடன் சென்றனர்.

இதுகுறித்து, மாணவ மாணவிகள் கூறும்போது,

‘‘ நாங்கள் ஆண்டுதோறும் தேர்வு நேரங்களில் இந்த ஆலயத்திற்கு வந்த கல்வி உபகரணங்களை பெருமாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தேர்வு எண்ணை சுவற்றில் எழுதி ஹயக்ரீவ பெருமாளிடம் எங்களது வேண்டுதலை வைத்துவிட்டு நம்பிக்கையுடன் தேர்வு எழுதுவோம். இதனால் எங்களது வேண்டுதல் நிறைவேறுகிறது.’’என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்

Sunday, March 05, 2023

March 05, 2023

மார்ச் 9-ல் தொடங்குகிறது SSLC தேர்வு

மார்ச் 9-ல் தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி தேர்வு

கேரளத்தில் மார்ச் 9 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தொடங்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு தேர்வை 4,19,554 பேர் எழுதுகின்றனர்.

அரசு உதவி பெறும் பிரிவில் 1,421 தேர்வு மையங்களும், உதவி பெறாத மண்டலத்தில் 369 தேர்வு மையங்களும் என மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளைகுடா பகுதியில் 518 மாணவர்களும், லட்சத்தீவில் உள்ள ஒன்பது பள்ளிகளில் 289 மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி 70 முகாம்களில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கும். மே 2023 இரண்டாவது வாரத்தில் முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Wednesday, March 01, 2023

March 01, 2023

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி, ஏப்ரல் மாதம் 20ம் தேதி நிறைவடைகிறது. குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி தேர்வு தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்வு தொடங்கி, அதே மாதம் 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தலைமையில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து துறைக்கான ஆயத்த கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாநகர காவல் துறை, மாவட்ட வருவாய் அலுவலர், மின்சார வாரியம், மாநகர போக்குவரத்து கழகம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் சென்னை மாநகராட்சி குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, பொதுத் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகள், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான பேருந்து வசதி, மின்சார வசதி, தேர்வு அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்வுகள் எவ்வித புகார்களுக்கும் இடமில்லாமல் சிறப்பாக நடைபெறவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை கலெக்டர் அமிர்த ஜோதி வழங்கினார்.

இன்று முதல் வருகிற 9ம் தேதி வரை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில் சுமார் 47,000 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வினையும், சுமார் 48,000 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வினையும் எழுத உள்ளனர். மாணவர்கள் சிறப்பான முறையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி அலுவலர், சென்னை மாநகராட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Total Pageviews

Search This Blog