Breaking

Showing posts with label மாணவிகள். Show all posts
Showing posts with label மாணவிகள். Show all posts

Friday, August 05, 2022

August 05, 2022

செயற்கை கோளுக்கு மென்பொருள் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில் முற்றிலும் மாணவிகள் மட்டுமே செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் 75 பள்ளிகளை சேர்ந்த, 750 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகள் பவதாரணி, ஏஞ்சல், கவுரி, ஹரி வைஷ்ணவி, ஜெய்ரின் இருதயா, யசோதாதேவி, பத்மினி, அத்சாராணி, சுவேதா, பிருந்தா ஆகிய 10 பேர் தேர்வாகினர். இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோளின் ஒரு பாகம் தயாரிக்க ‘சிப்’ அனுப்பி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். 5 மாதத்தில் இந்த பணியை மாணவிகள் சிறப்பாக செய்து முடித்தனர். அவர்கள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 7ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க மாணவிகள் 10 பேரும் இன்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்கின்றனர். தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நேற்று இப்பள்ளிக்கு நேரில் சென்று சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து திருக்குறள், ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Thursday, August 04, 2022

August 04, 2022

மருத்துவக்கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும் மாணவர்களிடம் சகஜகமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவறானவர்களாகக் கருதி அவர்களிடம் யாரும் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த இரு மாணவிகளில் ஒருவர் நேற்று மாலை கல்லூரி லேப்பில் இருந்து மெர்குரிசல்பேட் என்ற மருந்தை கொண்டு வந்து விடுதி அறையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது நெருங்கிய தோழியான மற்றொரு மாணவியும், ' நீ இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை' எனக் கூறி அதே மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு வந்த மற்றொரு மாணவி, அறையில் இரு மாணவிகளும் மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து இருவரும் நலமுடன் உள்ளனர்.

தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், தங்களை மோசமானவர்கள் என்று கூறி சக மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் பேசாமல் ஓதுக்கி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் இது குறித்து சம்பந்தபட்ட மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து வேப்பேரி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, August 02, 2022

August 02, 2022

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இத் தொகையை பெறுவதற்கு மத்திய அரசின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு செப். 30 ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக். 31 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களது கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பிறகே விண்ணப்பங்களை சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

Monday, August 01, 2022

August 01, 2022

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டம்; வெளியானது சூப்பர் அறிவிப்பு

விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்தி விண்ணப்பபங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு உயர்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கையினை ஏற்று, உயர்கல்வித் துறை தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

எனவே, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
August 01, 2022

இந்த வயசுல இப்படி ஒரு திறமையா.. 3 மொழிகளில்16 புத்தகங்களை எழுதிய +1 மாணவி..

Coimbatore Latest News : கோவை புத்தக திருவிழாவில் 16 வயதில் 16 நூல்கள் எழுதியுள்ள இளம் எழுத்தாளரின் புத்தகங்கள் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில் 6வது புத்தக கண்காட்சி கோவை அவினாசி சாலை பகுதியிலுள்ள கொடிசியா வணிக வளாகத்தில் கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தக கண்காட்சியில் 250 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தினர்.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..

இதில் சக்தி ஸ்ரீ தேவி என்ற 16 வயது இளம் எழுத்தாளர், தான் எழுதியுள்ள 16 புத்தகங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்-பிரியா தம்பதியரின் மகள் சக்திஸ்ரீதேவி, டேராடூனில் 11ம் வகுப்பில் பயின்று வருகிறார்.

தனது 8 வயது முதல் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் கற்பனை கதைகள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள் என பல்வேறு வகைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

16 புத்தகங்களும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. இருந்த போதிலும் அவற்றின் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் உள்ளன. இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்.. புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாது பாடகராகவும், பேச்சாளராகவும் உள்ளார் சக்திஸ்ரீதேவி.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..

ஒவ்வொரு கதைகளை படிக்கும்போதும் 30 நாளில் ஒருவரின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் இவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பேன் என்கிறார்நம்பிக்கையுடன்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

அரசு பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு

சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் முதல் முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட்போட்டி தொடர்பாக போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக வட்டார மற்றும் மாவட்ட அளவில் செஸ்போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களை அரசின் செலவில் விமானத்தில் சென்று செஸ் போட்டியினை பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. kaninikkalvi.blogspot.com மாவட்ட அளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா முதலிடமும்,சுபலட்சுமி இராண்டாமிடமும்,17 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் 3 பேரும் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை காண அழைத்துச் செல்லப்படுகின்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை ஜெயலதா பாராட்டி பரிசுகள் வழங்கினார்.பள்ளி உடற்கல்வி இயக்குனர் காளிராஜ்,உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி. லட்சுமி,அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Saturday, July 23, 2022

July 23, 2022

தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகள் பாக்கியலட்சுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதையும் படிக்க | G.O. (Ms) No.20 Dt: July 14, 2022 - மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை - PDF இந்த நிலையில், பாக்கியலட்சுமி சரியாகப் படிக்கவில்லை என அவரது தாய் பானு தொடா்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை பாக்கியலட்சுமியை படிக்கச் சொல்லி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவி பாக்கியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவிகள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும்.

கடந்த ஒரு வாரமாக ரயில் நிலைய பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவர்கள் இருதரப்பினர் இடையே பஸ் நிலையம் அருகே பொதுமக்கள், மாணவிகள் நின்ற பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் சில மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவர்களை துரத்தி துரத்தி சென்று தாக்கினர். மேலும், கற்களை வீசி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்டவர்களும் மாணவர்களால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்கள் உருட்டு கட்டைகளை எடுத்து வந்தும் ஒருவரோடொருவர் மோதினர். இந்த தாக்குதலின்போது ஒரு மாணவரை, மற்றொரு பள்ளி மாணவர்கள் கம்பு மற்றும் ஹெல்மெட்டால் தாக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் கண்டித்ததுடன், அதனை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிலரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Total Pageviews

Search This Blog