Breaking

Showing posts with label பள்ளி மாணவர்கள். Show all posts
Showing posts with label பள்ளி மாணவர்கள். Show all posts

Tuesday, August 09, 2022

August 09, 2022

‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ - மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ - மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு



75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தும் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவை சிறப்பிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 03, 2022

August 03, 2022

MMBS மாணவர்களுக்கு பயிற்சி வழங்க மண்டல மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை தேர்வு

தமிழகத்தில் 19 மருத்துவக்கல்லூரிகளுக்கான எம்பிபிஎம் பாடத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் மண்டல மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னையில் மட்டுமே இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக்கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையமாக மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் சமீபத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு மட்டுமே இத்தகைய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக புதுக்கோட்டை, நாமக்கல், தேனி, கரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், கோவை ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவுமனைகள், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை எச்எம்சிஎச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோவை பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை கற்பகம் மருத்துவு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 19 மருத்துவக்கல்லூரிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவக்கல்வி தொழில்நுட்பத்திற்கான தேசிய மருத்துவ ஆணையத்திடம் மண்டல மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி தலைவர் டாக்டர் அருணா வி.வினிக்கார் மையத்தை தொடங்கி வைத்தார். இளங்கலை மருத்துவக் கல்வி நிரந்தர உறுப்பினர் டாக்டர் விஜயேந்திர குமார், சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, டீன் ரத்தினவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டீன் ரத்தினவேலு கூறுகையில், ‘‘மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் 19 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு திருத்தப்பட்ட அடிப்படை பாடங்கள் பற்றி (Revised basic course workshop) பயிற்சி வழங்குவார்கள். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து பாடத்திட்ட அடிப்படையிலான கல்வி (curriculum based education), அணுகும் நெறிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்(attitude ethics and communication skills) அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தற்போது எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு புதிதாக குடும்ப தத்தெடுப்பு திட்டம் (family adoption programme) பாடத்திட்டம் எடுக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இதுபோன்ற பாடத்திட்டங்கள் மருத்துவக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்கும், மருத்துவ மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக்கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையம் முக்கியமானதாக கருதப்படுகிறது ’’ என்றார்.

Monday, August 01, 2022

August 01, 2022

TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் உள்ளது

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை, செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் உறுதி செய்வது செயல்பாட்டில் இருந்தாலும், அது கட்டாயமாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் செல்போன் செயலி மூலமான வருகைப்பதிவேடு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, TNSED எனப்படும் செயலியை கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த செயலியில், தலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் செயலி மூலம் வருகை பதிவேடு எடுக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்கு வராமல் வருகைப் பதிவேட்டை பதிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TNSED செயலி:

TNSED எனப்படும் அந்த செயலியில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே வருகையை குறிக்கும் P எனும் எழுத்தும், விடுப்பை குறிக்கும் A எனும் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை உறுதி செய்துகொண்டு அதில் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தி விட்டு, திரையின் அடியில் தோன்றும் SAVE AND SYNCHRONIZE எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திரையில் ஆரஞ்சு நிறம் தோன்றி அது பச்சை நிறத்திற்கு மாறி, வருகைப்பதிவேடு முற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

இதேமுறையிலேயே, ஆசிரியர்களும் தங்களது வருகையை தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

“நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது” - பொன்முடி

“கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25,000 ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77,000 ஆக உயர்ந்தது" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியது:

"பட்டம் பெறும் நீங்கள் வேலை தேடுபவராக மட்டும் இல்லாமல், வேலை தருகின்ற நிறுவன அதிபர்களாகவும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில், தமிழகம்தான் முதல் இடம். 53 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயில்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்கூட பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம். 56.5 சதவீதம் பெண்கள் பதக்கங்களைப் பெறுகின்றனர். பதக்கம் பெறும் 69 பேரில் 39 பெண்கள், 30 ஆண்கள்.இதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற மாற்றம் வளர்ச்சி. பெண்களின் உயர் கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ஒரே முதல்வர், தமிழக முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25 ஆயிரமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77 ஆயிரமாக உயர்ந்தது" என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
July 29, 2022

முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க ராமதாஸ் யோசனை

“மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், கொலை செய்யப்பட்டதாக பெற்றோரும் கூறி வரும் நிலையில் உண்மை என்ன என்பதை விசாரணை தான் வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால், மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் பெற்றோர், மாணவர்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்தத் தாக்கம் குறையும் முன்பே கடந்த 25-ஆம் தேதி திங்கள் கிழமை திருவள்ளூர் கீழ்ச்சேரி பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவியும், 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடலூரில் 12-ஆம் வகுப்பு மாணவியும், 27-ஆம் தேதி புதன்கிழமை சிவகாசியில் 11-ஆம் வகுப்பு மாணவியும், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்த ஐவருமே 11 அல்லது 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்தவர்கள். அவர்கள் அனைவருமே கல்வி சார்ந்த அழுத்தம் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்பது உறுதியாகியுள்ளது.

கல்வியாண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர் 5 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வழக்கமான தற்கொலைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. மாணவர்களும், இளைஞர்களும் தான் இந்திய மக்கள்தொகையின் லாபப்பங்குகள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டிய கடமை அரசு, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மாணவச் செல்வங்களை மனதளவில் கடுமையாக பாதித்திருக்கின்றன. பள்ளிகளுக்கு சென்று நண்பர்களை சந்தித்து மனதளவில் மகிழ்ச்சியாக பாடம் கற்று வந்த முறையை கரோனா ஊரடங்கு சிதைத்தது. கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியாகத் தான் படித்து வந்தனர். ஆன்லைன் வகுப்புகள் தொடக்கத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதற்கு மாணவர்கள் மனதளவில் தயாராகி விட்டனர். அந்த நேரத்தில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் கூட, அதற்குரிய இயல்புகள் இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் சிறைக்கூடங்களாக மாறி விட்டன. கலை, விளையாட்டு போன்ற வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; முழுமையான மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பல பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றன.

பள்ளிகளில் இருந்து வீடுகளுக்கு வந்தால் அங்கும் அதே சூழலையே மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளை குழந்தைகளாகப் பார்க்காமல் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே பார்க்கின்றனர். அதனால், வீடுகளிலும் அவர்களை இயல்பாக இருக்க விடாமல், எல்லா நேரங்களிலும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் கடினமானதாக இருந்தாலும், தேர்வுகள் கடினமானதாக இல்லை; தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சி வழங்கப்பட்டதாலும், தரவரிசை போன்ற மதிப்பீடுகள் இல்லாததாலும் மாணவர்கள் சற்று நிம்மதியாக இருந்தனர்.

ஆனால், இப்போது நிலைமை திடீரென மாறி மருத்துவப் படிப்புக்கு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்களை மாணவச் செல்வங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே தற்கொலைகளுக்கு காரணமாகும். இதைத் தடுக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அதற்காக, குறைந்தபட்சம் மேல்நிலை மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வுகள் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பதற்காக முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேபோல், பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புத்திசாலிகள்; அவர்களுக்கு கனவுகள் உண்டு; அந்த கனவை நனவாக்குவதற்காக அவர்கள் விருப்பப்பட்டு படிப்பர். அவர்கள் மீது உங்கள் ஆசைகளை திணித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தவறான முடிவுகளை எடுக்க பெற்றோர் காரணமாகி விடக் கூடாது.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
July 27, 2022

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணையில் நேற்றே கையெழுத்திட்டுள்ளேன் - மு.க.ஸ்டாலின்.

மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.

நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.

மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது - மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!

இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.

மாணவர்கள் அனைவரும் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்;

உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.

- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tuesday, July 26, 2022

July 26, 2022

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி... பள்ளி மாணவர்களுக்கு பேட்ரி டெஸ்ட் திட்டம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

Anbil Mahesh Poyyamozhi : மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் திருப்பூரில் தெரிவித்தார்

6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர பேட்ரி டெஸ்ட் என்ற திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னெம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவதாக திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும், அதற்காக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்று கூறிய அமைச்சர், விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல்ரீதியாகம் மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைகிறோம். இதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் அதில் இருப்பதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ், பின்னர் பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.

கனியாமூர் நிகழ்விற்கு பிறகு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளகுறிச்சியில் நடந்துள்ளது. குழந்தைகள் முழுமையாக தன்னெம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும்.

இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
July 26, 2022

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன் விழா ஆண்டு நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மவுலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீப கால சம்பவங்கள் மன வேதனை அளிப்பதாகவும், எத்தகைய இடையூறுகளையும் மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Monday, July 25, 2022

July 25, 2022

"மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் வேதனை

மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் சங்க நிர்வாகி வேதனை
July 25, 2022

வகுப்பறை இல்லாமல் பயிலும் மாணவர்கள்; கட்டடத்தை மாற்றி இடித்த அதிகாரிகள்

கடம்பத்துார் ஊராட்சியில், மாற்றி இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால் மாணவர்கள் கல்வி கற்க, கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு எப்போது விடியல் கிடைக்கும் என, பெற்றோரிடையே கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க | பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெண்மனம்புதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 150 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர் என, நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பள்ளியின் வடக்கு பக்கத்தில் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்ற, ஒன்றியக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடத்திற்கு பதிலாக, கிழக்கு புறத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இது மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டதால், 150 மாணவர்களும், இரண்டு வகுப்பறையிலும் பள்ளி வராண்டாவிலும், அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளி விழா மேடை, அங்கன்வாடி மற்றும் கோவில் வளாகத்திலும் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: குரூப்-1 தரவரிசைப் பட்டியல்

இதனால் மாணவ - மாணவியர் வெயில், மழையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் இடித்து அகற்ற, ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பள்ளிக் கட்டடம் இடிக்கப்படவில்லை.இது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல், வெங்கத்துார் ஊராட்சி, பட்டரை அரசு நடுநிலைப் பள்ளியிலும் இடித்து அகற்றப்பட்ட வகுப்பறை கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்களுக்கு விடியல் ஏற்படும் வகையில், கூடுதல் வகுப்பறை கட்டுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிக்க | கற்றலின் இடைவெளியை குறைக்க வந்தது 'எண்ணும் எழுத்தும்' | Ennum Ezhuthum

பெயர் குறிப்பிடாத கடம்பத்துார் ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அரசிடமிருந்து அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் வகுப்பறை கட்டடம் கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Sunday, July 24, 2022

July 24, 2022

கனியாமூர் பள்ளி மாணவர்கள் படிப்புக்கு நடவடிக்கை: எம்.பி., மனு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில், படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எம்.பி., கோரிக்கை மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி., கவுதம சிகாமணி அளித்துள்ள மனு:சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மான முறையில் இறந்தார். இதனையடுத்து, பள்ளியில் நடந்த விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால், 4,000 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க | மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில், அவர்கள் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 20, 2022

July 20, 2022

அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 125 மாணவா்களுக்கு கட்டுமானத் துறையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் இயங்கும் முன்னணி கான்கிரீட் உபகரண தயாரிப்பு நிறுவனமான ஷ்விங் ஸ்டெட்டா் இந்தியா நிறுவனம், பாலிடெக்னிக் மாணவா்கள் 125 பேருக்கு, கட்டுமானத் துறையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்த பயிற்சியை அளிக்க முன் வந்துள்ளது. அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் பாலிடெக்னிக் முதல்வா் பி.செண்பகவல்லி முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க | மக்கள் நீதிமன்ற உறுப்பினா் 2 காலி பணியிடத்துக்கு அழைப்பு

பயிற்சியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

பயிற்சி தொடா்ந்து 25 நாள்கள் நடைபெறும்.

மேலும், மாணவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள் வழங்கப்படவுள்ளன.
July 20, 2022

பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி

பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி


வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, அம்மாணவர்கள் பிளஸ் 2 படித்து வரும் நிலையில் அவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 147 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 495 பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

இதற்காக, தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கு மிதிவண்டிகளை சரிபார்த்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, பச்சை வண்ணத்தில் வழங்கப்பட்ட மிதிவண்டி இந்தாண்டு நீல வண்ணத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், நடப்பு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்குவதற்காக பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Friday, July 15, 2022

July 15, 2022

டாட்டூ, கயிறு, செல்போனுடன் பள்ளிக்கு வர மாணவர்களை அனுமதிக்கக் கூடாது: சமூக பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

டாட்டூ, கயிறு, செல்போனுடன் பள்ளிக்கு வர மாணவர்களை அனுமதிக்கக் கூடாது: சமூக பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

மாணவர்கள் டாட்டூ, செல்போனுடன் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, சமூகப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும். தலையில் எண்ணெய் வைத்து, தலை வார வேண்டும்.காலில் காலணி அணிய வேண்டும்.பெற்றோர் கையெழுத்துடன், வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும். பிறந்த நாள் என்றாலும் மாணவ, மாணவிகள், சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு இருசக்கர வாகனம், செல்போன் கொண்டுவர அனுமதி இல்லை. அடிக்கடி கை, கால்களைக் கழுவ வேண்டும்.

மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வரவும் அனுமதி இல்லை. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்றவற்றை அணியக் கூடாது. இது தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீதிநெறிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள்உள்ளிட்ட நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் அமைதிக்கலாச்சாரத்தை ஊக்குவிப்பதுடன், சுற்றுச்சூழல், குடும்ப உறவுமுறை கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, July 14, 2022

July 14, 2022

பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடிதம்

பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்த வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடிதம்

Wednesday, July 13, 2022

July 13, 2022

அரசுப் பள்ளியில் மோதல் 12 மாணவர்கள் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 12 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.

இதில், 2 மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் பள்ளியிலும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடப்பதாகவும், அதுதொடர்பான பிரச்சினையில் மோதல் நடந்ததும் தெரியவந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஒரு மாணவரை பள்ளியில் இருந்து டிசி கொடுத்து நீக்குவது எனவும், 12 மாணவர்களை 1 மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது எனவும் முடிவு செய்து அறிவித்தனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் 10-ம் வகுப்பும் மற்றவர்கள் 12-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
July 13, 2022

பள்ளிகளில் மாணவர்களுக்கு காகிதக் கலையை கற்றுத் தர வடமாநில இளைஞர்களுக்கு அனுமதி: தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

தமிழகத்தில் கரோனா காலகட்டத்துக்கு பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் கல்வியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்விஇணைச் செயல்பாடுகள் என்ற பாடவேளை சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பாடவேளைகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி வினா மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகள் போன்ற கலைச் செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், நுண்கலை பாடவேளையில் இடம்பெற்றுள்ள காகித கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், இதைக்கற்றுக் கொடுக்க வட மாநில இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ் கலை இலக்கியப் பேரவையின் திருச்சிமாவட்டச் செயலாளர் மு.த.கவித்துவன் கூறியது: வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் பள்ளிகளுக்கு வந்து, காகிதக் கலையை கற்றுத் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொண்டுவரும் காகிதக் கலை புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேர்த்தியான சிறப்பாசிரியர்கள் இருக்கும்போது, இதற்கு வடமாநிலத்தவரை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காகிதக் கலை பயிற்சியை சிறப்பாசிரியர்கள் கொண்டு வழங்க முடியாது. அதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களை கொண்டுதான் வழங்கப்பட வேண்டும்.

வழக்கமாக யோகா, காகிதக் கலை உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையில் தற்போது காகிதக் கலை பயிற்சிஅளிக்க டெல்லியை சேர்ந்த நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை.

குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்கள் யாரேனும் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி அளிக்க முன் வந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்’’ என்றனர்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவிகள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும்.

கடந்த ஒரு வாரமாக ரயில் நிலைய பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவர்கள் இருதரப்பினர் இடையே பஸ் நிலையம் அருகே பொதுமக்கள், மாணவிகள் நின்ற பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் சில மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவர்களை துரத்தி துரத்தி சென்று தாக்கினர். மேலும், கற்களை வீசி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்டவர்களும் மாணவர்களால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்கள் உருட்டு கட்டைகளை எடுத்து வந்தும் ஒருவரோடொருவர் மோதினர். இந்த தாக்குதலின்போது ஒரு மாணவரை, மற்றொரு பள்ளி மாணவர்கள் கம்பு மற்றும் ஹெல்மெட்டால் தாக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் கண்டித்ததுடன், அதனை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிலரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Total Pageviews

Search This Blog