Breaking

Showing posts with label Agricultural University. Show all posts
Showing posts with label Agricultural University. Show all posts

Thursday, February 01, 2024

February 01, 2024

காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

Associate Director of Agriculture invites applications for mushroom production techniques training - வேளாண்மை - உழவர் நலத்துறை காளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

2023-24ம் ஆண்டின் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வேளாண்மைத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - விரிவாக்க சீரமைப்புத்திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம். பாப்பாரப்பட்டியுடன் இணைந்து "காளான் உற்பத்தி फ्रीलंप्पलकी" Mushroom Production Techniques என்ற தலைப்பில் 28 விவசாயிகளுக்கு 6 நாட்கள் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. எனவே 18-40 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ள விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொண்டு பயன் பெறலாம். தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றம் கிராமப்புற இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், மற்றும் கல்வி மாற்றுசான்றிதழ்(TC) நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தை 03.02.2024-ற்குள் அணுகி விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்து பயன்பெற

Thursday, October 12, 2023

October 12, 2023

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு.

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு. Direct admission notification tomorrow (Oct 13) for vacant seats in Agriculture Degree.

வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நேரடி சேர்க்கை அறிவிப்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப் படிப்பு ( B.Sc - Hons Agriculture (Self Supporting ) மற்றும் தோட்டக்கலை ( BSc (Hons Horticulture) படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும் காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நாளை (அக்.13) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், இந்நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடக்கும் சேர்க்கை நிகழ்வில் நேரடியாக பங்கேற்கலாம். பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து, கலந் தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று சேர்க்கையை தவறவிட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு தரவரிசைப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. மேலும் விவரங்களை, https://annamalaiuniversity.ac.in’ என்ற இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.

Sunday, September 24, 2023

September 24, 2023

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்ப டிப்பு பி.எஸ்சி. (சுயநிதி) மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை (சுயநிதி) படிப்புகளில் உள் ள காலியிடங்களுக்கு உடனடி மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி. சி.), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் (பி. சி.எம்.) மற்றும் எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இதற்கான தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் வருகிற 27- ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் புலத்திற்கு நேரடியாக சென்று கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு,அதன் படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் வெ ளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Wednesday, August 30, 2023

August 30, 2023

வேளாண் பல்கலை.யில் மூன்றாவது நேரடி கலந்தாய்வு!



வேளாண் பல்கலை.யில் நாளை மூன்றாவது நேரடி கலந்தாய்வு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 29, 30 ஆம் தேதிகளில் மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் https://tnau.ac.in/ 2023 - 24 ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கு தனியாா் கல்லூரிகளில் காலியாக உள்ள 500 இடங்களுக்கு மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்தக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30), புதன்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை வரை பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப் பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Thursday, April 20, 2023

April 20, 2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான (2023-24) மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேளாண் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலைப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்குகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 19.04.2023 அன்று முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 19.04.2023 அன்று முதல் தொடங்கி 15.05.2023 (நள்ளிரவு மணி 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதார்கள் இணையவழி வழியாக முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பிற்கும் முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை எம்.டெக் (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும், பட்டப்படிப்பு சான்றிதழல் சமர்பிப்பதன் மூலமாக, தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டப்படிப்பு சான்றிதழில் சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். மேலும், விபரங்களுக்கு முதுநிலை மாணவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்த தகவல் கையேட்டை படிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்புக் கொள்ள 98489056710 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 09, 2023

February 09, 2023

வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை 10.2.2023 கடைசி

 வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமன செய்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 
காலியிடங்கள்: 33+4
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

பணி: வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) 
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 41 + 7
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

தகுதி: வேளாண் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம், தோட்டக்கலைப் பாடப்பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழில் போதிய மொழிறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு அடிப்படை.யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2023

Tuesday, February 07, 2023

February 07, 2023

வேளாண் பல்கலையில் வகுப்புகள் தொடங்கும் தேதி - துணைவேந்தர் பேட்டி

வேளாண் பல்கலையில் வகுப்புகள் தொடங்கும் தேதி - துணைவேந்தர் பேட்டி Date of Commencement of Classes in Agricultural University - Vice-Chancellor Interview

வேளாண் பல்கலையில் ஜூலை 15 முதல் வகுப்பு தொடங்கும்; துணைவேந்தர் பேட்டி

வேளாண்மை பல்கலைக்கழகம்சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்காக வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு 40 ஆயிரம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்தனர். வேளாண் படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் 6 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன. அதில் பல்கலை மற்றும் அரசுக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், வேளாண் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதிக் கல்லூரிகளில் ஐசிஎஸ்ஆர் அங்கீகாரம் பெற்றவற்றில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இரண்டாம் அடுக்கு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது.

அந்தக் கல்லூரிகளிலும் அரசின் ஒதுக்கீட்டு இடங்களான 65 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான 35 சதவீத இடங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. மே லும், 2 கட்டமாக நேரடி மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 4 நாட்களில் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடக்கும். வேளாண் படிப்புகளில் நடப்பு ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தான் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் புத்தாக்க வகுப்புகள் தொடங்கப்பட்டு நடக்கிறது. அகில இந்திய அளவிலும் வேளாண்மை படிப்புகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை 2023-2024ம் கல்வி ஆண்டில் அதிகரிக்கவும், முன்கூட்டியே முடிக்கவும் கூடிய புதிய திட்டத்தை செயல்படுத்த பல்கலைக் கழக கல்வி மன்றக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, வேளாண் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒரு மாத காலத்துக்கு ஆன்லைன் மூலம் பெறப்படும். அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ஜூலை 15ம் தேதி முதல் வகுப்புகள் ெ தாடங்கும்.

அதற்கு பிறகும் வரும் மாணவர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வகுப்புகள் தொடங்கி, பாடத்தை நடத்தி அவர்கள் முதல் பருவத் தேர்வை மற்ற மாணவர்களுடன் சேர்ந்து எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். வருங்காலங்களில் இந்த முறையே பின்பற்றப்படும். மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவது, கவுன்சலிங் உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் நடந்தாலும், கட்டணங்கள் செலுத்துவது, சான்றுகள் சரிபார்ப்பு ஆகியவை நேரடியாக நடக்கும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
February 07, 2023

வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்

வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி:

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்தம் 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தற்போது, அலங்கார தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட டிப்ளமா படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை. சென்னை நகர்ப்புறவாசிகளுக்கு, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தில் பயிற்சி பெறலாம்.

மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மையங்கள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை

விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management Trainees

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம், தோட்டக்கலை, மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.2.2022

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய  www.aicofindia.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

Friday, November 25, 2022

November 25, 2022

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (2022-2023) அறிவிப்பு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி விவரத்தினை தங்களது மேலான நாளிதழில் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (2022-2023)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் கல்வியாண்டிற்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதள வாயிலாக 26.11.2022 அன்று துவங்க உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்களை 28.11.2022 நிரப்புவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு 26.11.2022 முதல் வரை இணையதளவாயிலாக நடைபெறஉள்ளது. இக்கலந்தாய்வில் மாணவர்கள், தாங்கள் முதன் முதலில் பூர்த்திசெய்து அளித்திருந்த விண்ணப்பத்திலுள்ள விருப்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் 30.11.2022 அன்று வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நகர்வுமுறையே 02.12.2022 மற்றும் 03.12.2022 அன்று நடைபெறும். இந்த இட ஒதுக்கீட்டிற்கு தேவைபட்டால் இரண்டாம் கட்டகலந்தாய்வு 06.12.2022 அன்று நடத்தப்படும். பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட இணையவழி கலந்தாய்வு 05.12.2022 அன்று தொடங்கி நடைபெறஉள்ளது. பொதுப்பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 19.12.2022 அன்று நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின் (உறுப்புகல்லூரி) உள்ள மூலம் 2495 அரசு கல்லூரிகளில் 12 பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும். இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளமறிவியல் மேதமை) வேளாண்மை மற்றும் இளமறிவியல்(மேதமை) தோட்டக்கலை பட்டப்படிப்புகளுக்கான 2771 இடங்கள் நிரப்பப்படும். தகவல்களுக்கு 0422-661134, 0422-6611346 என்ற எண்களை வார கொள்ளலாம். விரிவான அட்டவணை நாட்களில் தொடர்பு www.tnau.ucanapply.com என்ற இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, November 08, 2022

November 08, 2022

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பு!!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பது

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு (Offline Counselling) நவம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டில் நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது.

இத்தகவல் மாணவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதள வாயிலாகவும் மற்றும் 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

Saturday, October 01, 2022

October 01, 2022

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Publication of Admission Rank List for Young Science Course in Agricultural University - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்புக் கல்லூரிகளில் 2,567 இடங்களும், இப்பல்கலைக்கழகத்தை சார்ந்த 28 இணைப்புக் கல்லூரிகளில் 4,413 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடம், மேனேஜ்மென்ட் இடம் என இரு பிரிவுகள் உள்ளன.

65 சதவீத அரசு இடத்தில் 2,868 பேரும், மேனேஜ்மென்ட் இடத்தில் 1,545 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தரவரிசைப் பிரிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 200-க்கு 200 தரத்தை 7 பேர் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஆன்லைன் முறையில் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு முடிந்தவுடன், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் www.tnau.ac.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜி.கோபி, ஈரோடு மாவட்டம் எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர்.சுப, புதுக்கோட்டை மாவட்டம் சவுடாம்பிகா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவர் ஆர்.கார்த்திக் ராஜா,சேலம் ஏஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிதாரணி செங்கோட்டு வேலு, ஈரோடு மாவட்டம் யுஆர்சி பள்ளி மாணவர் டி.முத்துப்பாண்டி, தருமபுரி மாவட்டம் அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி எம்.ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ராஜ ஐஸ்வர்ய காமாட்சி ஆகிய 7 பேர் 200-க்கு200 தரம் பிடித்து முதலிடம் பிடித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog